Published:Updated:

`அதான் ஓட்டுக்குப் பணம் கொடுத்தோம்ல!'- திண்டுக்கல் சீனிவாசன் பதிலால் அதிர்ந்த அ.தி.மு.க தொண்டர்

`அதான் ஓட்டுக்குப் பணம் கொடுத்தோம்ல!'- திண்டுக்கல் சீனிவாசன் பதிலால் அதிர்ந்த அ.தி.மு.க தொண்டர்
`அதான் ஓட்டுக்குப் பணம் கொடுத்தோம்ல!'- திண்டுக்கல் சீனிவாசன் பதிலால் அதிர்ந்த அ.தி.மு.க தொண்டர்

பிரிக்கவே முடியாதது சர்ச்சை பேச்சும் அமைச்சர் சீனிவாசனும் என்பதை அடிக்கடி நினைவுப்படுத்திவிடுகிறார் திண்டுக்கல் சீனிவாசன்.

திண்டுக்கல் மாவட்டம், பழநியில் பாலாறு பொருந்தலாறு அணையைப் பாசனத்துக்காக திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு தண்ணீரை திறந்து வைத்தார். அப்போது அங்கிருந்த பாலசமுத்திரத்தைச் சேர்ந்த அதிமுக தொண்டர் ஒருவர், `அதிமுக ஆட்சியில் என்னைப் போன்ற அடிமட்ட தொண்டர்கள் சம்பாதிக்கவே முடியவில்லை. கட்சி மூலம் 1,000  ரூபாய்கூட வருமானம் கிடைக்கவில்லை' என்றார். கூட்டத்தில் தொண்டர் ஒருவர் இப்படிக் கேட்டதால் ஆத்திரமடைந்த சீனிவாசன்,   `அதான் ஓட்டுப் போடும்போது பணம் கொடுத்தார்களே அப்புறம் என்ன? என்றார்.

தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்தோம் என்பதை அமைச்சர் வெளிப்படையாகத் தெரிவித்தது அ.தி.மு.க தலைமை மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்பாக பழநியில் நடந்த மற்றொரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சீனிவாசனிடம், சத்துணவு அமைப்பாளர் வேலைக்காகக் கட்சியினர் பணம் வசூல் செய்தார்கள். ஆனால், வேலை  தரவில்லை என அதிமுக தொண்டர் புகார் சொன்னார். அப்போது, யார்ரா இவன் கூட்டத்துல கட்டுச்சோற்றை அவுத்துக்கிட்டு, அதையெல்லாம் இப்படி பப்ளிக்கா கேக்கக் கூடாது. தனியா வந்து கேக்கணும். உனக்கு அறிவே இல்லையா'' என அதிகாரிகள், பொதுமக்கள் முன்னிலையில் எகிறினார். கட்சித் தொண்டர்களை தொடர்ந்து அவமரியாதையாகப் பேசிவருவது தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.