Published:Updated:

“அதான்... காங்கிரஸ் கட்சி!”

“அதான்... காங்கிரஸ் கட்சி!”
பிரீமியம் ஸ்டோரி
“அதான்... காங்கிரஸ் கட்சி!”

த.கதிரவன் - ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி - படம்: பா.காளிமுத்து

“அதான்... காங்கிரஸ் கட்சி!”

த.கதிரவன் - ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி - படம்: பா.காளிமுத்து

Published:Updated:
“அதான்... காங்கிரஸ் கட்சி!”
பிரீமியம் ஸ்டோரி
“அதான்... காங்கிரஸ் கட்சி!”

மிழக அரசியல் மேடைகளை, தனது நேரடியான கருத்துகளால் எப்போதும் அதிரவைப்பவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். எப்படிப்பட்ட கேள்விகளையும் எதிர்கொண்டு பதில் சொல்லக்கூடியவர்.  பரபரப்பான அரசியல் சூழலில் ஏராளமான கேள்விகளோடு அவரோடு உரையாடினேன்.

“அதான்... காங்கிரஸ் கட்சி!”

``ஜி.எஸ்.டி.-யில் ஆரம்பித்து மீத்தேன், கெயில்... என்று அனைத்தையும் காங்கிரஸ் கட்சி ஆரம்பித்துவைத்துவிட்டு, இப்போது பி.ஜே.பி-யை அதற்காகவே எதிர்ப்பது எந்த வகையில் நியாயம்?''

``மக்களுக்குச் சிரமம் இல்லாதவகையில் இந்தத் திட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என்று காங்கிரஸ் யோசித்தது உண்மைதான். ஆனால், இப்போதுள்ள மோடி அரசு, மக்களுக்கு என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் என்பதையெல்லாம் ஆராயாமல், அவசர கோலத்தில் கொண்டுவந்துவிட்டது. அதனால்தான் அவை மக்களின்எ திர்ப்புக்குள்ளாகி வருகின்றன.

`காங்கிரஸ் தவறு செய்துவிட்டது' என்று ஒரு வாதத்துக்காக ஒப்புக்கொண்டாலும்கூட, காங்கிரஸ் தவறு செய்துவிட்டது என்று சொல்லித்தானே மக்கள் மோடியைத் தேர்ந்தெடுத்தார்கள்... அப்படி அங்கீகாரம் பெற்றவரே இப்போது எல்லாத் தவறுகளையும் செய்துவிட்டு, `காங்கிரஸ்தான் காரணம்' என்று சொல்லித் தப்பிப்பது சரியாக இருக்குமா?''

``பா.ஜ.க.வைக் கடுமையாக எதிர்த்தாலும்கூட, காங்கிரஸோடு கைகோக்க கம்யூனிஸ்டுகள் தயங்குவது உங்களுக்குப் பின்னடைவுதானே?''

``கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரையில் எப்போதுமே ஆகாயத்தில்தான் கோட்டை கட்டுவார்கள். ஆக்கப்பூர்வமாகத் தரையில் என்ன செய்யலாம் என்ற நடைமுறையை அவர்கள் சிந்திக்கத் தவறிவிடுகிறார்கள். பல சூழ்நிலைகளில், மிகவும் காலம் தாழ்ந்து முடிவு எடுக்கிறார்கள். இதுதான் அவர்களது பாணி. அதனால்தான் ஒரு மாநிலம் அல்லது இரண்டு மாநிலங்களைத் தாண்டி கம்யூனிஸ்ட்களால் வளர்ச்சியடைய முடியவில்லை!''

``தமிழகத்தில், `காமராஜர் ஆட்சி' என்ற காங்கிரஸின் முழக்கம் என்னவாயிற்று?''

`` இன்றைய அரசியல் சூழ்நிலையில்,  காமராஜர் ஆட்சியை உடனடியாகக் கொண்டுவந்துவிட முடியாது என்பது எங்களுக்குத் தெரியும். இருந்தாலும், காங்கிரஸ் இயக்கத்தைத் தமிழகத்தில் பலம் பொருந்திய இயக்கமாக மாற்ற வேண்டும், அதன் மூலம் காமராஜர் ஆட்சியைக் கொண்டுவரவேண்டும் என்று என்னைப் போன்றோர் தொடர்ந்து பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம்''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“அதான்... காங்கிரஸ் கட்சி!”

``திருநாவுக்கரசர் தலைமையிலான காங்கிரஸ் கட்சி  காமராஜர் ஆட்சியை நோக்கிய பயணத்தில், இருப்பதாக நினைக்கிறீர்களா?''

``எனக்கு அதில் சந்தேகம் இருக்கிறது. ஏனென்றால், எல்லா காங்கிரஸ் கூட்டங்களிலேயும் `எனக்கு முதலமைச்சர் ஆகும் தகுதி இருக்கிறது. ஆனால், நான் முதல்வராக ஆக முடியவில்லையே' என்ற தனது ஆதங்கத்தைத்தான் திருநாவுக்கரசர் பேசிவருகிறார். தனிப்பட்ட முறையில் திருநாவுக்கரசரோடு எனக்கு எந்தவித விரோதமும் கிடையாது; நல்ல நண்பர்தான். ஆனால், அவருக்கு காங்கிரஸ் உணர்வு துளியளவுகூட இல்லை.''

`` `திருநாவுக்கரசர் யார் என்றே தெரியாது’ என்கிறீர்கள் நீங்கள்.  `வேலை வெட்டி இல்லாதவர் இளங்கோவன்' என்கிறார் திருநாவுக்கரசர். என்னதான் நடக்கிறது தமிழக காங்கிரஸில்?''

``ஒன்றுமே நடக்காத காரணத்தினால்தான் இதுபோன்றெல்லாம் நான் சொல்லவேண்டியதிருக்கிறது''

``உங்கள் ஆதரவாளர் என்பதாலேயே குஷ்பூவுக்கு, காங்கிரஸில் உரிய மரியாதை வழங்கப்படவில்லையா?''


``கிராமப்புறங்களில் குஷ்பூவைப் பார்ப்பதற்கென்றே கூட்டம் கூடுகிறது. அதற்காக நாம் சிறுமைப்பட்டுவிட்டோம் என்று தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளக்கூடாது. குஷ்பூவுக்கு வருகின்ற கூட்டத்தைவைத்து கட்சியை வளர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, 'குஷ்பூவுக்கு வரவேற்பு கிடைக்கிறது, எனக்குக் கிடைக்கவில்லை' என்று ஈகோ பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது.

குஷ்பூவை சாதாரண நடிகையாக மட்டுமே பார்க்கக்கூடாது. நல்ல கொள்கைப் பற்றுகொண்ட, பெண்களின் சம உரிமைக்காகப் போராடக்கூடிய முற்போக்குச் சிந்தனையாளர் அவர். நான் தலைவராக இருந்தபோது, கிராமப்புறங்களில் நடைபெற்ற சில கூட்டங்களில் நான் முதலில் பேசிவிட்டு, அந்த அம்மையாரைக் கடைசியாகப் பேச வைத்திருக்கிறேன். காரணம், அந்தக் கூட்டம் குஷ்பூவைப் பார்க்க வந்திருந்த கூட்டம் என்பதை நான் அறிந்திருந்தேன். இதில் நமக்கு என்ன ஈகோ இருக்கிறது?''

``காவிரி விவகாரத்தில், கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையாவின் கருத்தும், பி.ஜே.பி-யின் கருத்தும் ஒன்றாகத்தானே இருக்கிறது?''

``இந்தப் பிரச்னையில், விஞ்ஞானரீதியான புள்ளிவிவரத்துக்குள் நான் போகவிரும்பவில்லை. மாறாக மனித உறவுகள் மேம்பட்டிருக்க வேண்டும். காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில் ஆரம்பித்து அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி வரையிலான காலகட்டம்வரை அண்டை மாநிலங்களோடு நாம் நல்ல சுமூகமான உறவு வைத்திருந்தோம். அதனால், தமிழகத்துக்குத் தண்ணீர் வேண்டும் என்று கேட்டபோது, அவர்களும் பெரிதுபடுத்தாமல் தண்ணீரைத் திறந்துவிட்டார்கள். ஆனால், ஜெயலலிதா யார் பெரியவர் என்ற போக்கைக் கடைப்பிடித்ததால்தான் இன்றைக்கு இவ்வளவு பெரிய சிக்கல் வந்திருக்கிறது”

``கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, ஜெயலலிதா படத்திறப்பு விழாவில் கலந்துகொண்ட விஜயதரணி எம்.எல்.ஏ மீது காங்கிரஸ் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே?''


''அதான் காங்கிரஸ் கட்சி.... (சத்தமாக சிரிக்கிறார்). என்ன செய்வது, அகில இந்தியக் கட்சிகளில் இதுபோன்ற சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும்.''

“அதான்... காங்கிரஸ் கட்சி!”

''சமீபகாலமாக தமிழக பி.ஜே.பி தலைவர்கள் சிலரின் செயல்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றனவே?''

`` `தமிழகத்தில், பி.ஜே.பி-க்கு ஒரு விழுக்காடுகூட வாக்கு வங்கி இருக்கக்கூடாது; முழுமையாக பி.ஜே.பி-யை இங்கே ஒழித்துவிட வேண்டும்' என்று நினைத்துச் செயல்படுகிறார் ஹெச்.ராஜா. `பெரியார் சிலையை உடைக்க வேண்டும்' என்று அவர் சொல்லியதையடுத்து, இன்றைக்கு எல்லாக் கட்சித் தலைவர்களும் ஒன்றுசேர்ந்து பெரியார் புகழ் பாடத் தொடங்கியிருக்கிறார்கள். இதுதான் ஹெச்.ராஜா செய்த ஒரேயொரு நல்ல காரியம்... பெரியார் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் அவருக்கு நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.

எஸ்.வி.சேகர் ஒரு கோமாளி. படத்தில் காமெடியாக நடிக்கவருகிறதோ இல்லையோ... நிஜ வாழ்க்கையில், காமெடியாக மிக நன்றாக நடிக்கின்றார். ஆனாலும், சினிமா - அரசியல் என இரண்டு துறையிலுமே யாரும் அவரை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை. மன்சூர் அலிகான்,  ‘போலீஸைச் சந்திப்பேன்' என்று வேகமாகப் பேசியதற்காக கைது செய்கிறார்கள். ஆனால், பெண் நிருபர்களைக் கேவலமாகப் பேசிய ஒரு மனிதரை எப்படிக் கைது செய்யாமல் இருக்கின்றார்கள்? எல்லோரும் சொல்வதுபோல, தலைமைச் செயலாளர் அவருக்கு நெருங்கிய உறவினராக இருப்பதுதான் இதற்குக் காரணமா என்ற சந்தேகம் எனக்கும் இருக்கிறது.''

`` `சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மன்னிக்க முடியாத குற்றம்’ என்று ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறாரே?''

``ரஜினிகாந்த், முழுக்க முழுக்க பா.ஜ.க வினரால் உருவாக்கப்படுகிற ஓர் அரசியல்வாதி. அவரைத் தமிழகத்தில் குருமூர்த்திதான் வழிநடத்துகிறார். எந்த விஷயமாக இருந்தாலும், குருமூர்த்தி சொல்கிறபடியே நடந்துகொண்டிருக்கிறார். குருமூர்த்தி, துக்ளக் பத்திரிகையின் ஆசிரியராக வந்துவிட்ட காரணத்தினாலேயே அவர் 'சோ' ஆகிவிட முடியாது. ஏனெனில், சோ-வைப் பொருத்தவரையில், அவர் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளராக இருந்தாலும்கூட, சில விஷயங்களில் நியாய அநியாயத்தைத் தைரியமாகச் சொல்லக்கூடியவராக இருந்தார். ஆனால், குருமூர்த்தி, ஆர்.எஸ்.எஸ்.-ஸின் எடுபிடியாக, மோடியின் ஊதுகுழலாக இருந்துகொண்டு தமிழகத்தில் அரசியல் செய்ய ரஜினிகாந்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.''

`` `ரஜினி அரசியல் கட்சி தொடங்கவே மாட்டார்' என்று எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்?''

``ரஜினி, நல்ல மனிதர். ஆனால், அவரால் அரசியலில் எடுபட முடியாது. ஏனெனில், ரஜினிகாந்த் என்பவர் திரைத்துறையில், டைரக்டர் சொல்கிறபடி நன்றாக நடிக்கக்கூடியவர்தானே தவிர, தனித்த சிந்தனைத் திறன் கொண்டவர் அல்ல. மோடியின் நல்ல எடுபிடியாக மட்டுமே ரஜினிகாந்த் இருப்பார்.

நல்ல டைரக்டரின் பின்னணியில் ரஜினிகாந்த் நன்றாக நடிப்பார். ஆனால், அரசியலில் மோடியும் குருமூர்த்தியும் மோசமான இயக்குநர்களாக இருப்பதால், கண்டிப்பாக இவர்களுடைய படம் ஓடப்போவதில்லை.''