Published:Updated:

பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!

‘‘மனைவிக்கும் மதினிக்கும் சீட் கேட்பார்கள்!’’

ன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க மகளிர் அணி, மகளிர் தொண்டரணி ஆய்வுக்கூட்டம் நாகர்கோவிலில் மாநில மகளிரணிச் செயலாளர் கனிமொழி தலைமையில் நடந்தது. 

கிழக்கு மாவட்ட தி.மு.க மகளிரணி அமைப்பாளர் ஜெசிந்தா, “நாங்கள் எம்.எல்.ஏ., எம்.பி ஆகப்போவதில்லை. குறைந்தபட்சம் உள்ளாட்சித் தேர்தலில் முக்கியத்துவம் கொடுக்கிறார்களா? கிடையாது. உள்ளாட்சித் தேர்தல் அறிவித்ததும் கட்சிக்காரர்களின் சகோதரி, மனைவி, மதினி, கொழுந்தி என எல்லோரும் சீட் கேட்க வருவார்கள். உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கான இடங்களுக்கு வேட்பாளர் தேர்வுசெய்யும்போது, ‘மகளிரணி அமைப்பாளரிடம் பரிந்துரை வாங்கி வாருங்கள்’ எனச் சொல்லுங்கள். மகளிரணி வளரும்” என்றார்.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

கிழக்கு மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜன், ‘‘பெண்களின் சிரமம் எங்களுக்குத் தெரியும். எங்களுடைய சிரமங்களையும் நீங்கள் உணர்ந்துகொள்ளுங்கள்” என்றார்.

கனிமொழி பேசியபோது, “இங்கு மகளிரணியினர் மாவட்டச் செயலாளர், அமைப்பு மீது எதிர் கருத்துக்களைத் தைரியமாகக் கூறுகிறீர்கள். அந்த அளவுக்கு வெளிப்படையாகக் கருத்து சொல்லும் சூழலையும், மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பாகப் பதில் சொல்வதையும் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

‘மஞ்சள் பை’ தங்கமணி!

ம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருப்பூரில் நடந்த மே தினப் பொதுக்கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசினார். “ஜெயலலிதா என்னை இரண்டு முறை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வைத்து, கட்சியின் பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்கச் சொல்லியிருந்தார். கட்சியின் பல அமைப்புகளுக்கு நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பையும் எனக்கு அவர் வழங்கியிருந்தார். நான் தேர்ந்தெடுத்த 90 சதவிகிதம் பேர் இன்றைக்கு அமைச்சர்களாகவும், எம்.எல்.ஏ-க்களாகவும் இருக்கிறார்கள். எஸ்.பி.வேலுமணியை மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளராக நியமித்தது நான்தான். செல்வகணபதியின் பின்னால் மஞ்சள் பையைத் தூக்கிச்சென்ற தங்கமணி, அவரையே காலி செய்துவிட்டு எப்படிப் பதவிக்கு வந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். எடப்பாடி பழனிசாமியும் குருட்டு அதிர்ஷ்டத்தால்தான் முதல்வராகி இருக்கிறார். ஆந்திராவில் அன்றைய முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இறந்தபோது, கிரண்குமார் ரெட்டி என்பவரை முதலமைச்சராக அமர வைத்தார்கள். அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அதேபோன்ற நிலைமைதான் எடப்பாடிக்கும், அவருடன் உள்ள அத்தனை அமைச்சர்களுக்கும் ஏற்படப்போகிறது” என்றார்.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

‘‘கூட்டத்துக்கு வந்தால் 1,000 ரூபாய் தருகிறோம் என அழைத்து வந்துவிட்டு, 300 ரூபாய்தான் கொடுத்தார்கள்’’ என இந்தக் கூட்டத் துக்கு வந்திருந்த ஆண்களும், ‘‘குக்கர் சின்ன சேலையைக் கட்டிவரும் பெண் களுக்கு 200 ரூபாய் போனஸ் என்று சொல்லி ஏமாற்றிவிட்டார்கள்’’ எனப் பெண்களும் நொந்துகொண்டு போனார்கள்.

கமலைக் கண்டு மிரண்ட ஸ்டாலின்!

தி
ருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூர் என்ற கிராமத்தை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல் தத்தெடுத்துள்ளார். மே தினத்தன்று இங்கு நடந்த கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்க கமல் திட்டமிட்டிருந்தார்.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

ஆனால், கமல் வருவதற்கு முன்பே, கிராமசபைக் கூட்டத்தை நடத்தி முடிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அதிகாரி (பி.டி.ஓ) ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் கிராமசபைக் கூட்டத்தை நடத்தத் தயாராயினர். அங்கு சென்ற கமல் கட்சியின் உயர்மட்டக்குழு உறுப்பினரும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான ரங்கராஜன், ‘‘இந்தக் கூட்டத்தை, பொதுமக்கள் கூடியிருக்கிற இடத்தில் வையுங்கள்’’ என்றார். அதற்கு பி.டி.ஓ ஸ்டாலின் சம்மதிக்கவில்லை. ‘‘அப்படியானால் கூட்டம் நடக்கும் இடத்திலாவது கமல் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும்’’ என்றார். அதற்கும் அதிகாரி அனுமதிக்கவில்லை. ‘‘சரி, பார்வையாளராக கமல் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும்’’ என்று அவர் கெஞ்சினார். அதற்கும் ஸ்டாலின் சம்மதிக்காமல் கூட்டத்தை ஆரம்பித்தார். கூட்டம் முடியும் நேரத்தில் கமல் வந்துவிட்டார். உடனே, அங்கிருந்து பி.டி.ஓ நழுவப் பார்த்தார். அப்போது கமல் கட்சியினர், பி.டி.ஓ-விடம் சென்று, ‘‘கூட்டத்தில் வந்து நில்லுங்கள்’’ என அழைத்து வந்து நிற்க வைத்தனர். அவரும் விருப்பமின்றி வந்து நின்றார். பின்னர் கமல் முன்னிலையில் தீர்மானங்களைப் படித்தனர். அந்தக் கூட்டம் கலைந்து சென்றதும், முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கமல் பேசினார்.  

கண்கலங்கிய நேரு!

விஞர் நந்தலாலா தொடங்கியுள்ள ‘வானம்’ அமைப்பின் சார்பில், ஆ.ராசாவின் ‘2ஜி அவிழும் உண்மைகள்’ புத்தகம் குறித்த ஆய்வரங்கம் திருச்சியில் நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு, இயக்குநர் கரு.பழனியப்பன், வழக்கறிஞர் அருள்மொழி, வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், கவிஞர் நந்தலாலா உள்பட பலர் கலந்து கொண்டனர். “இந்தப் புத்தகத்தில், இறந்து போனவர்களைப் பற்றித் துளியும் கூறப்படவில்லை. ஆனால், சமகாலத்தில் வாழும் மனிதர்களை நன்றியுடன் கூறியுள்ளார். குறிப்பாக எஸ்.எஸ்.சிவசங்கர், கே.என்.நேரு ஆகியோர் பரிந்துரையின் பேரில்தான் தனக்கு எம்.பி சீட் கிடைத்தது என்று கூறியிருக்கிறார்” என்று பேசினார் கரு.பழனியப்பன். அதைக் கேட்டு நேருவின் கண்கள் கலங்கின.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

ஆ.ராசா, “2ஜி விவகாரத்தில் தி.மு.க-வைக் குறிவைத்துத் தாக்கினார்கள். எவ்வளவோ நெருக்கடிகளையும், மனவலிகளையும் சந்தித்தேன். ஒருவேளை நான் திராவிட இயக்கத்தில் இல்லாமல் இருந்திருந்தால், உயிருடன் இருந்திருக்க மாட்டேன். 2ஜி விவகாரம் பூதாகரமானபோது, தலைவர் கலைஞர் எனக்கு உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும் இல்லாமல் இருந்திருந்தால், நான் காணாமல் போயிருப்பேன்” என்றார்.

- சி.ய.ஆனந்தகுமார், தி.ஜெயப்பிரகாஷ், ஆர்.சிந்து, இரா.தேவேந்திரன் 
படங்கள்: என்.ஜி.மணிகண்டன், ரா.ராம்குமார்