Published:Updated:

`பிரிட்டிஷ் அரசு இல்லாவிட்டால் அம்பேத்கர் இல்லை!’ - பகுஜன் சமாஜ் சர்ச்சைக் கருத்து

`பிரிட்டிஷ் அரசு இல்லாவிட்டால் அம்பேத்கர் இல்லை!’ - பகுஜன் சமாஜ் சர்ச்சைக் கருத்து
`பிரிட்டிஷ் அரசு இல்லாவிட்டால் அம்பேத்கர் இல்லை!’ - பகுஜன் சமாஜ் சர்ச்சைக் கருத்து

`இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருந்ததால்தான் அம்பேத்கரால் படிக்க முடிந்தது' எனப் பேசியிருக்கிறார் ராஜஸ்தான் மாநில பகுஜன் சமாஜ் தலைவர் தரம்வீர் சிங் அசோக். 

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் பிரசாரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய தரம்வீர் சிங்க் அசோக், ``ஆங்கிலேயர்கள் இன்னும் 100 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்திருந்தால், அட்டவணைப் பிரிவு மக்கள், இவ்வளவு ஒடுக்குமுறைகளைச் சந்தித்திருக்க மாட்டார்கள். அதுமட்டுமல்ல, ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருந்ததால்தான் அம்பேத்கரால் பள்ளியில் படிக்க முடிந்தது. இல்லையென்றால், அவரை எந்தப் பள்ளியிலும் சேர்த்திருக்க மாட்டார்கள்" என்றார். 

கடந்த 2013 சட்டமன்றத் தேர்தலில் ராஜஸ்தானில் 3.37 சதவிகித வாக்குகளைப் பெற்று மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது பகுஜன் சமாஜ் கட்சி. வரும் டிசம்பர் 7-ம் தேதி ராஜஸ்தானில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 200 தொகுதிகளில் போட்டியிட இருக்கிறது. பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்துத் தனித்துப் போட்டியிடுவதால் தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் பி.எஸ்.பி தொண்டர்கள்.