Published:Updated:

“அரசியல் எதிர்காலம் குறித்து எனக்கு கவலை கிடையாது!”

“அரசியல் எதிர்காலம் குறித்து எனக்கு கவலை கிடையாது!”
பிரீமியம் ஸ்டோரி
“அரசியல் எதிர்காலம் குறித்து எனக்கு கவலை கிடையாது!”

த.கதிரவன் - ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

“அரசியல் எதிர்காலம் குறித்து எனக்கு கவலை கிடையாது!”

த.கதிரவன் - ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

Published:Updated:
“அரசியல் எதிர்காலம் குறித்து எனக்கு கவலை கிடையாது!”
பிரீமியம் ஸ்டோரி
“அரசியல் எதிர்காலம் குறித்து எனக்கு கவலை கிடையாது!”

டிகர் முரளி, மோகனுக்குப் பிறகு ‘மைக்’கிற்குப் பெருமை சேர்ப்பவர் அமைச்சர் ஜெயக்குமார்! காலை - மாலை - இரவு என்று எந்நேரமும் செய்தியாளர்களின் ‘மைக்’சூழ வலம் வருகிறார். அவருடன் ஒரு சந்திப்பு...

“ ‘தமிழக நலனுக்காக, மத்திய அரசோடு இணக்கமாக இருக்கிறோம்’  என்கிறீர்கள். ஆனால், நீட் தேர்வில் ஆரம்பித்து மீத்தேன், நியுட்ரினோ, காவிரி... என்று எல்லாப் பிரச்னைகளிலும் தமிழக நலனுக்கு எதிரான முடிவுகள்தானே மத்திய அரசிடமிருந்து வருகின்றன?’’

“இந்தியா கூட்டாட்சித் தத்துவத்தில் இயங்குகிறது. விவசாயிகள், பழங்குடியினர் மற்றும் மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டம், மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட  பல்வேறு மெகா திட்டங்களுக்கான குறிப்பிட்ட பங்கு நிதியை மத்திய அரசுதான் மாநில அரசுகளுக்கு ஒதுக்கித் தருகிறது. எனவே மத்திய அரசை சார்ந்துதான் நாம் இயங்கவேண்டியுள்ளது.  மக்களுக்கு எதிரான திட்டங்களை அ.தி.மு.க அரசு செயல்படுத்துவதில்லை. அதேசமயம் பல்வேறு நலத்திட்டங்களைச் செம்மையாக செயற்படுத்திவரும் செயல்திறன் மிக்க மாநிலமாகத்தான் தமிழ்நாடு திகழ்ந்துவருகிறது.’’

“அரசியல் எதிர்காலம் குறித்து எனக்கு கவலை கிடையாது!”

“தமிழகம் முன்னோடி மாநிலமாக செயல்படுகிறது என்கிறீர்கள். அதற்குப் பரிசாகத்தான், மத்திய அரசின் 15-வது நிதிக்குழுவில் தமிழகத்துக்கு கிடைக்கவேண்டிய வரிவருவாய் குறைக்கப்பட்டுள்ளதா?”

“15 ஆவது நிதிக்குழுவில், தமிழகத்துக்கு கிடைக்கவேண்டிய வரி வருவாயை மத்திய அரசு குறைக்கக்கூடாது என தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துவருகிறோம். ஏனெனில், தமிழகத்திலிருந்து மத்திய அரசுக்குப் போகிற வரி வருவாயிலிருந்துதான் நமது பங்கை - நமது உரிமையை நாம் கேட்கிறோம். யாரிடமும் யாசகம் கேட்கவில்லை. தொடர்ச்சியான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதால், நிச்சயம் 15 ஆவது நிதிக்குழுவில் தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீட்டில் எந்தவிதக் குறைபாடும் இருக்காது என்று நம்புகிறோம்’’

“ ‘படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்’ என்று சொல்லிக்கொண்டே, புதிதாக ‘எலைட்’ கடைகளைத் திறக்கிறீர்கள். கூடவே, ‘மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் பெருகிவிடும்’ என்றும் பயமுறுத்துகிறீர்கள். மக்களை ஏமாற்றுகிறீர்களா?’’


“யாரையும் நாங்கள் ஏமாற்றவில்லை. ஆரம்பகாலத்தில், ‘குடி’ வாசனையே தெரியாத மாநிலமாகத்தான் தமிழ்நாடு இருந்தது. அதனை முதன்முதலாக அறிமுகப்படுத்தியது கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசுதான். மறுபடியும் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில், மதுவிலக்கு கொண்டுவரப்பட்டது. ‘கொலைகாரனுக்குக்கூட ஜாமீன் உண்டு; குடிகாரனுக்கு ஜாமீன் கிடையாது’ என்ற சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், போதைக்கு அடிமையாகிப்போனவர்கள் சாராயத்துக்கு மாற்றாக டர்பன்டைன், ஸ்பிரிட், வார்னிஷ் உள்ளிட்டப் பொருட்களை போதைக்காகப் பயன்படுத்த ஆரம்பித்தனர். 

இன்றைக்கு குடிப்பழக்கம் புரையோடிப் போய்விட்டது. ‘திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது’ என்பதுபோல், குடிகாரர்களே மனந்திருந்துவதுதான் ஒரே வழி. அதற்காகத்தான்  ‘குடி, குடியைக் கெடுக்கும்.... குடித்தால், உன் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடும்’ என்ற விழிப்பு உணர்வை மக்களிடையே கொண்டுவரும் முயற்சியாக அதிக நிதி ஒதுக்கீடு செய்து விழிப்பு உணர்வுப் பணிகளைச் செய்துவருகிறோம்.’’

“கடந்தகாலத்தில் ஜெயலலிதாவைக் கடவுள் உருவத்தில் அ.தி.மு.க-வினர் சித்திரித்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இப்போது தமிழக செய்தி விளம்பரத்துறையே, எடப்பாடி பழனிசாமியை ‘ஏழுமலையான் கடவுளாக’ச் சித்திரித்து விளம்பரப் படம் வெளியிட்டிருக்கிறதே... இதுதான் ‘அம்மா வழி ஆட்சியா?”

“யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் அரசுக்குக் கிடையாது. அரசின் சாதனையைச் சொல்லும் படமாகத்தான் அது எடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும், இதுகுறித்து எங்களது கவனத்துக்கு வந்ததும், முதல்வரிடம் எடுத்துரைத்தோம். அவரும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாக அந்தக் காட்சியை எடுத்துவிடச் சொல்லிவிட்டார்’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“அரசியல் எதிர்காலம் குறித்து எனக்கு கவலை கிடையாது!”

“அ.தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாளராக உங்களை நீங்களே முன்னிலைப்படுத்திக் கொள்வதற்கு எதிராகக் கட்சிக்குள்ளேயே அதிருப்தி குரல்கள் எழுகின்றனவே?’’

“எங்கேயும் என்னை நான் முன்னிலைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. ஏனெனில், 1991 ஆம் ஆண்டிலேயே எனக்குப் பதவி கொடுத்து அனைவருக்கும் என்னை அறிமுகப்படுத்தியவர் ஜெயலலிதா.

கட்சியின் மூத்த உறுப்பினரான எனக்குக் கடந்த கால வரலாறு தெரியும். அந்த அனுபவத்தின் அடிப்படையில், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு என்னால் தெளிவாகப் பதில் அளிக்க முடியும். மேலும், எனது அரசியல் எதிர்காலம் குறித்துக் கவலையோ பயமோ எனக்குக் கிடையாது; அதனால், அமுக்கி வாசிக்கவேண்டிய ஊசலாட்டமும் எனக்குக் கிடையாது. அதனால்தான் மனதில் பட்டதைத் தைரியமாகப் பேசுகிறேன். இன்றுவரையில், எந்த ஒரு பதவிக்காகவும் நான் யார் வீட்டுக் கதவையும் தட்டியது கிடையாது.’’

“ ‘எடப்பாடியோடு திவாகரன் கூட்டு சேர்ந்து சதி செய்கிறார்’ என்கிறது டி.டி.வி தினகரன் தரப்பு. அதை உண்மையாக்கும் வகையில், ‘எடப்பாடி ஆட்சிக்குத் தொல்லை கொடுக்கமாட்டோம்’ என்கிறாரே ஜெயானந்த்...?’’

``அந்தக் குடும்பத்தின் தலையீடு இல்லாமல், கட்சியையும் ஆட்சியையும் நாங்கள் சிறப்பாக நடத்திவருகிறோம். கூட்டுக் கொள்ளை அடிக்கும்போது மாமன் - மச்சான் எல்லோரும் ஒன்றாகத்தான் இருப்பார்கள். பணத்தைப் பங்கு போடும்போதுதான் ஒருவரையொருவர் அடித்து க்கொள்வார்கள்.  இப்போது அங்கே அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இந்த மாமன் - மச்சான் சண்டையில், நாம் போய் ஏன் தலையிட வேண்டும்?உலகமே வேடிக்கை பார்க்கட்டும்!’’