Published:Updated:

மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி காலி பாட்டில்களுடன் கலெக்டரிடம் மனு!

மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி காலி பாட்டில்களுடன் கலெக்டரிடம் மனு!
மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி காலி பாட்டில்களுடன் கலெக்டரிடம் மனு!

நெல்லை: தேசிய நெடுஞ்சாலையில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி உடனே அகற்ற வலியுறுத்தி, நெல்லை மாவட்ட கலெக்டரிடம் பா.ஜ.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள் காலி மது பாட்டில்களை மாலையாக அணிந்து வந்ததால் பரபரப்பு நிலவியது.

மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி காலி பாட்டில்களுடன் கலெக்டரிடம் மனு!

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலையில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனாலும், 500க்கும் மேற்பட்ட கடைகளை அகற்ற இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா சார்பில் மாவட்ட கலெக்டர் சமயமூர்த்தியிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், 'டாஸ்மாக் கடைகளின் மது விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலைமை நீடித்தால் இளைஞர்கள் தங்களது கழுத்தில், தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் அடையாள அட்டையை அணிவதற்குப் பதிலாக மது பாட்டில்களை அணியும் அவலம் உருவாகி விடும். குடிபோதையால் பல குடும்பங்கள் சிதைந்து போய் இருக்கின்றன. வாகனங்களில் செல்பவர்கள் விபத்துக்களில் சிக்குகின்றனர்.

##~~##
அதனால் மார்ச் 31க்குள் நெடுஞ்சாலையில் இருக்கும் அனைத்து மதுகடைகளையும் மூட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த கெடு முடிந்து 20 நாட்களுக்கு மேல் ஆகியும், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக நெடுஞ்சாலையோர கடைகளை மூட வேண்டும்' என குறிப்பிட்டிருந்தனர்.
இதில் பங்கேற்ற மாவட்ட தலைவர் கணபதி தங்கவேல், மாவட்ட பொதுச்செயலாளர் இசக்கி அம்மாள், மாவட்ட அமைப்புச் செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் காலி மதுபாட்டில்களை மாலையாகக் கோர்த்து கழுத்தில் அணிந்து வந்ததால் மாவட்ட கலெக்டர் அலுவலம் பரபரப்பாக காணப்பட்டது.

-ஆண்டனிராஜ்
படங்கள்:
எல்.ராஜேந்திரன்