Published:Updated:

சம்பளம் கேட்ட தொழிலாளியை அடித்துக் கொன்ற தேயிலை தோட்ட நிர்வாகம்! - வால்பாறையில் அதிர்ச்சி

சம்பளம் கேட்ட தொழிலாளியை அடித்துக் கொன்ற தேயிலை தோட்ட நிர்வாகம்! - வால்பாறையில் அதிர்ச்சி
சம்பளம் கேட்ட தொழிலாளியை அடித்துக் கொன்ற தேயிலை தோட்ட நிர்வாகம்! - வால்பாறையில் அதிர்ச்சி

வால்பாறையில், சம்பளம் கேட்ட தேயிலை தோட்டத் தொழிலாளியை ஃபீல்டு ஆபீசர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பளம் கேட்ட தொழிலாளியை அடித்துக் கொன்ற தேயிலை தோட்ட நிர்வாகம்! - வால்பாறையில் அதிர்ச்சி

கோவை மாவட்டம், வால்பாறை சிறுகுன்றா லோயர் டிவிசன் பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் மில்லர் (52). இவரின் மனைவி லில்லி. குழந்தைகள் கிடையாது. 30 ஆண்டுகளுக்கு மேலாக உட்பெரியார் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். ஒவ்வொரு மாதமும், தேயிலைத் தோட்ட நிர்வாகம் சம்பளத்தை வங்கியில் செலுத்திவிடும். வேலை நேரம் போக கூடுதலாக பணிபுரிவதற்கான சம்பளத்தை தொழிலாளிகள் கையிலேயே நிர்வாகம் கொடுத்து வந்துள்ளது.

இந்த நிலையில், மூன்று மாதம் கூடுதலாகப் பணிபுரிந்த நேரத்துக்கு உரிய சம்பளத்தை கடந்த வெள்ளிக்கிழமை ஃபீல்டு ஆபீஸரிடம், ஜார்ஜ் மில்லர் கேட்டுள்ளார். அப்போது ஜார்ஜிடம், ஃபீல்டு ஆபீஸர் ரமேஷ் மற்றும் முத்துக்குமார் வாய்த் தகராறில் ஈடுபட்டு அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, வீட்டுக்கு வந்த ஜார்ஜ், ஃபீல்டு ஆபீஸர் அடித்ததில் உள் காயம் ஏற்பட்டு, வலி தாங்க முடியாமல் தவித்துள்ளார். பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதையடுத்து, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஜார்ஜ் மில்லர் நேற்று இரவு இறந்துவிட்டார்.

இதுதொடர்பாக, வால்பாறை காவல் நிலையத்தில் அடிதடி வழக்காக 174 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜார்ஜ் மில்லர் இறப்புக்குப் பின் கொலை வழக்காக மாற்றாமல், காவல் துறையினர் குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்க முயற்சி செய்வதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். மேலும், குற்றவாளிகளைக் கைது செய்து நிவாரணம் வழங்கவில்லை எனில் உடலை வாங்காமல், தொடர் போராட்டம் நடத்தப்போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.