Published:Updated:

`ஒருபோதும் ராஜபக்‌சேவை மன்னிக்க மாட்டேன்' - பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்!

`ஒருபோதும் ராஜபக்‌சேவை மன்னிக்க மாட்டேன்' - பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்!
`ஒருபோதும் ராஜபக்‌சேவை மன்னிக்க மாட்டேன்' - பொன்.ராதாகிருஷ்ணன் காட்டம்!

ஈழத் தமிழர்கள் படுகொலைக்குக் காரணமான ராஜபக்‌சேவை மன்னிக்க முடியாதென மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.

பரமக்குடியில் நலவாழ்வு மையத்தை திறந்து வைப்பதற்காக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வந்திருந்தார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``மத்தியில் ஆளும் அரசு இலவச எரிவாயு திட்டம், இலவச கழிப்பறை திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கான சிறப்புத் திட்டங்கள், வங்கிக் கணக்கு தொடங்கி சேமிப்புத் திட்டம் என பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி அதன்மூலம் வாழ்க்கைத் தரத்தை பிரதமர் மோடி உயர்த்தியுள்ளார். இலங்கையில் ராஜபக்‌சே  பிரதமர் ஆவதில் குழப்பம் நீடித்து வருகிறது. இலங்கையில் ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்ததில் முதல் குற்றவாளி ராஜபக்‌சேதான். எனவே, நான் ஒருபோதும் அவரை மன்னிக்க மாட்டேன். அதற்கு உறுதுணையாக அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ், தி.மு.க.கூட்டணி கட்சிகள் குற்றவாளிகள்தான். 

இப்போது ராஜபக்‌சேவும் அந்த உண்மையைச் சொல்லி நிரபராதியாக மாறிவிட்டார். தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டும் அவர்களது வலைகள் அறுக்கப்படுவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. இதுகுறித்துப் பேசித் தீர்ப்பதற்கு இரண்டு அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் நல்ல முடிவு காணப்படும். மேலும், இலங்கை கடற்படையினரால் தாக்கி சேதமான படகுளை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புண்ணியஸ்தலமான ராமேஸ்வரம் - மதுரை இடையே ரயில்வே பாதையை இரு வழிப் பாதையாக மாற்றியமைக்க ரயில்வே துறையினரிடம் வலியுறுத்தப்படும் என்றார். பேட்டியின்போது அமைச்சருடன் பா.ஜ.க ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் முரளிதரன், மாநிலச் செயலாளர் பொன்.பாலகணபதி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.