Published:Updated:

புதிய தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வருகிறது அயோத்தி வழக்கு!

புதிய தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வருகிறது அயோத்தி வழக்கு!
புதிய தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வருகிறது அயோத்தி வழக்கு!

ந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிப்போய் உள்ளது அயோத்தி ராமர் கோயில் வழக்கு. கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது, அன்று முதல் தொடர்ந்து 25 ஆண்டுகளாக இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையாக நீடித்த வண்ணமே உள்ளது . சமீபத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்திருந்தார். அயோத்தியில் உரிமை கோருவது தொடர்பாக 1950-ல் தொடரப்பட்ட இந்த வழக்கு இன்னமும் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் வந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கானது தற்போதைய புதிய தலைமை நீதிபதியான  ரஞ்சன் கோகாய் தலைமையில், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.