Published:Updated:

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!
பிரீமியம் ஸ்டோரி
News
கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

‘இந்தப் பக்கம் இரண்டு எம்.எல்.ஏ-க்களைக் காணோம்...’, ‘போச்சு! அந்தப் பக்கம் 12 பேரைக் காணோம்...’, ‘அங்கேயிருந்து ஆறு எம்.எல்.ஏ-க்கள் எங்களுடன் பேசறாங்க’ என அனல் பறக்கிறது கர்நாடக அரசியல். காவிரி வருமோ, இல்லையோ... கன்னட தேசத்தில் கலவரம் கண்டிப்பாக வரும் போல! இதில் கோவா, மேகாலயா கதைகளை எல்லாம் மறந்துவிட்டு, ‘நியாயம் செத்துப் போச்சுங்க, நீதி கெட்டுப் போச்சுங்க’ என அலறுகிறார்கள் பி.ஜே.பி அனுதாபிகள். அட! உங்களுக்கு ஆட்சியைப் பிடிக்கிறதென்ன அவ்வளவு கஷ்டமா?

கம்பேரிஸன் கோவாலு!

• இருக்கவே இருக்கிறது தமிழ்நாட்டு ஃபார்முலா. மொத்தமாக எதிரணி எம்.எல்.ஏ-க்களைத் தூக்கிக் கொண்டு போய் எங்கேயாவது வைத்தால் போதும்... தன்னாலேயே காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளக் கூட்டணி கலகலத்துவிடும். தமிழ்நாட்டில் கூவத்தூரிலோ, கேரளாவில் ஆலப்புழாவிலோ அடைத்து வையுங்கள் ஐயா... கேரளா டூரிஸம்தான் விளம்பரம் செய்து கூப்பிடுதே!

• இது பி.ஜே.பி-யின் பழம்பெரும் ஃபார்முலா. அடிபணிய மறுப்பவர்கள் வீட்டுக்கெல்லாம் அலாரம் வைத்து ஐ.டி ரெய்டு செய்வது. ஒன்றரை ஆண்டுகளாக இந்த ஒற்றை ஆயுதத்தை வைத்து தமிழகத்தையே மறைமுகமாக ஆளும்போது, கொஞ்ச நாள்கள் கர்நாடகாவை ஆளமுடியாதா என்ன? ச்ச்ச்சிந்திக்கணும் பக்தர்களே!

• ஆட்சி அமைக்க முடியாவிட்டால் என்ன?? கவர்னர் வஜுபாய் வாலா ஆர்.எஸ்.எஸ்-ஸின் வார்ப்புதானே! அவரை வைத்து போக்கு காட்டி நிழல் ஆட்சி நடத்த வேண்டியதுதான். எடியூரப்பா ஆண்டாலென்ன, வஜுபாய் ஆண்டாலென்ன? நமக்கு அகண்ட பாரதம் கிடைத்தால் சரி!

• கடைசி ஆயுதம் இதுதான். அங்கே மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் என்ன? இங்கிருந்து 20 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்க நிம்மதியா இருக்கீங்களோ இல்லையோ, நாங்க ரொம்பவே நிம்மதியா இருப்போம்!