Published:Updated:

பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!

பொலிட்டிகல் பொடிமாஸ்!

மாலை போடாத மர்மம்!

தூ
த்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி குடிநீர்த் திட்டத்தைத் தொடங்கிவைக்க மே 11-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்தார். ‘பணிகள் முடியாமலே தொடக்க விழா நடத்துகிறார்கள்‘ என எதிர்த்த எதிர்க்கட்சிகள், முதல்வருக்குக் கறுப்புக்கொடி காட்ட முடிவு செய்தன. இந்தப் போராட்டத்தைத் தடுக்கும் வகையில், வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாள் விழா மற்றும் வீரசக்கதேவி ஆலய விழாவைக் காரணம் காட்டி மாவட்டம் முழுவதும் மூன்று நாள்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே அதிகாரிகள், எதிர்க்கட்சியினரை சமாதானம் செய்துவிட்டனர். 

விழாவுக்காக மதுரையிலிருந்து காரில் வந்த எடப்பாடிக்கு, கயத்தார் உள்ளிட்ட மூன்று இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்டபொம்மனின் பிறந்தநாள் விழா நடந்தாலும், கயத்தாரில் நினைவு மண்டபத்தில் உள்ள கட்டபொம்மன் சிலைக்கு முதல்வர் மாலை போடவில்லை. கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்தால் பதவி பறிபோகும் என்ற சென்டிமென்ட் காரணத்தால் தவிர்க்கப்பட்டதாக அ.தி.மு.க-வினர் சொன்னார்கள்.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

கருவறை மூடப்பட்டபோது என்ன நடந்தது?

ழனி முருகன் கோயிலுக்கு 200 கிலோ எடையில் ஐம்பொன் சிலை செய்ததில் 2004-ம் ஆண்டு நடந்த முறைகேடு, 13 ஆண்டுகளுக்கு பிறகு பூதாகரமாக வெடித்துள்ளது. சில நாள்களுக்குமுன்பு பழனிக்கு வந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி கருணாகரன், 2004-ம் ஆண்டு கோயிலில் பணியாற்றிய கண்ணன் குருக்களின் மகன் சுகிசிவம் குருக்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர், ‘‘அப்பா குருக்களாக இருந்தால் தாங்கள் நினைப்பதைச் செயல்படுத்த முடியாது என சிலர் நினைத்தனர். அதனால் அவர் ஓரம்கட்டப்பட்டார்” என தெரிவித்திருக்கிறார்.

பழனி மலைக்கோயிலில் உள்ள நவவீரர்கள் சன்னதியில் இரண்டு சிலைகளுக்குரிய பீடம், சிலைகளின் அளவைவிடப் பெரியதாக இருப்பது குறித்து கோயில் அதிகாரிகளிடம் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் விசாரித்தார். ‘‘40 ஆண்டுகளாக இது அப்படித்தான் இருக்கிறது” என தெரிவித்துள்ளார்கள். கோயில் கும்பாபிஷேகம் 2006-ம் ஆண்டு நடந்தபோது தொடர்ந்து 21 நாள்கள்வரை கருவறை மூடப்பட்டே இருந்தது. பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அந்த நாள்களில் கருவறையில் என்ன நடந்தது என்பதைப் பற்றியும் பொன் மாணிக்கவேல் தீவிரமாக விசாரித்து வருகிறார். இன்னொருபுறம் சின்ன குமாரசுவாமி சிலை, பெரியநாயகி அம்மன் கோயிலில் உள்ள சிலை உள்ளிட்ட சில ஐம்பொன் சிலைகளின் உண்மைத்தன்மை குறித்து சென்னை ஐ.ஐ.டி உலோகவியல் பேராசிரியர் முருகய்யா குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். விசாரணையின் முடிவில் பழனி கோயில் அதிகாரிகள், முக்கிய புள்ளிகள் சிக்குவார்கள் என்று தெரிகிறது.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

வீடியோ எடுக்கப்பட்ட வாக்குமூலம்!

தி
ருத்தணி முருகன் கோயிலுக்குத் தங்க விமானம் செய்யப்பட்டதில் முறைகேடு நடந்தது பற்றி ஜூ.வி 13-5-18 இதழில் எழுதியிருந்தோம். அதனைத் தொடர்ந்து, திருத்தணி முருகன் கோயிலில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கும்மேல் விசாரணை நீடித்தது. தங்க விமானத்துக்காகப் பக்தர்களிடம் எவ்வளவு தங்கம் வாங்கப்பட்டது, உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கம் எவ்வளவு, எந்த நிறுவனத்திடம் தங்கம் வாங்கப்பட்டது போன்ற கேள்விகளுக்கு இணை ஆணையர் சிவாஜி, ஒற்றை வரிகளில் பதில் அளித்திருக்கிறார். அவரின் வாக்குமூலத்தை வீடியோவில் பதிவு செய்ததுடன், கோயில் தங்க விமானத்தையும் வீடியோ எடுத்தனர்.

முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் காலகட்டத்தைச் சேர்ந்த ஆவணங்களையும் போலீசார் நகல் எடுத்துச் சென்றனர். கோயில் மேலாளர் பழனி, உதவியாளர் பெரிய கார்த்தி ஆகிய இருவரும் விசாரணை நடைபெற்ற அன்று பணிக்கு வராமல் விடுமுறையில் சென்றுவிட்டனர். அப்போதைய அறங்காவலர் குழுத் தலைவராக இருந்த தி.மு.க-வைச் சேர்ந்த ஈஸ்வரப்பன் மற்றும் உறுப்பினர்களை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

பொலிட்டிகல் பொடிமாஸ்!

எடப்பாடியைப் புறக்கணித்த தோப்பு!

கொ
ங்கு மண்டல அ.தி.மு.க-வில் முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்துக்கும், இந்நாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணனுக்கும் இடையே நடந்துவரும் பனிப்போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மே 13-ம் தேதி ஈரோடு மாவட்டம், பவானியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சிகளில் பெருந்துறை எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலம் கலந்துகொள்ளவில்லை. ‘முக்கிய உறவினர்கள் வீட்டுக்கு  வந்ததால், முதலமைச்சர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை’ என தோப்பு தரப்பிலிருந்து தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அமைச்சர் கருப்பணன்மீது இருக்கும் கோபத்தால் தோப்பு வெங்கடாசலம் திட்டமிட்டே நிகழ்ச்சியைப் புறக்கணித்ததாகக் கூறுகின்றனர்.

முதல்வர் கலந்துகொண்ட நிகழ்ச்சியை தோப்பு வெங்கடாசலம் புறக்கணித்தது இது முதல்முறையல்ல... இதற்கு முன்பும் இதேபோல இரண்டு முறை ஈரோடு மாவட்டத்தில் எடப்பாடி நிகழ்ச்சிகளை தோப்பு வெங்கடாசலம் புறக்கணித்த சம்பவங்களும் அரங்கேறியிருக்கின்றன. ‘‘கொங்கு மண்டலத்தில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வரவேண்டுமென தோப்பு வெங்கடாசலம் எண்ணினார். எடப்பாடி அசைந்துகொடுக்காத காரணத்தால், தினகரன் அணிக்குச் சென்று வெறுப்பேற்றினார். இப்போது புறக்கணித்துக் கடுப்பேற்றுகிறார். இதனால் தோப்பு வெங்கடாசலம்மீது எடப்பாடி கோபமானதுதான் மிச்சம்’’ என்கின்றனர் அ.தி.மு.க-வினர்.  

- ஆர்.குமரேசன்,  இ.கார்த்திகேயன், நவீன் இளங்கோவன், தேவேந்திரன்
படம்: ஏ.சிதம்பரம்