அலசல்
Published:Updated:

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!
பிரீமியம் ஸ்டோரி
News
கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

ர்ம யுத்தம் நடத்திய மகாபிரபு தன் ஆதரவாளர்களைக் கழற்றிவிடுகிறார் என்பதுதான் லேட்டஸ்ட் புகார். அதுவும் அவர் தனியாக மல்லுக்கட்டிக் கொண்டிருந்த நேரத்தில் அவருக்காக பணம் செலவழித்தவர்களைக்கூட கண்டுகொள்ளவில்லையாம். கொதிப்பில் இருக்கும் ஆதரவாளர்களை ஆற்றுப்படுத்த அவர் கைக்கொள்ள வேண்டிய சில யோசனைகள் இதோ:

கம்பேரிஸன் கோவாலு!

• அ.தி.மு.க ஆட்சிமீது நாளுக்கு நாள் அதிருப்தி வளர்ந்துகொண்டே செல்கிறது. போதாக்குறைக்கு எடப்பாடியின் சாமி விளம்பரங்கள் வேறு. இழந்த மார்க்கெட்டை மீண்டும் பெற, பேசாமல் ‘தர்ம யுத்தம் பார்ட் 2’வைத் தொடங்கிவிட வேண்டியதுதான். இந்த முறை அம்மா சமாதி பக்கம் போக வாய்ப்பே இல்லை. வெயிலுக்கு இதமாக ஏதாவது சாமியாரின் சமாதி பக்கம் ஒதுங்கலாம்.

• அ.தி.மு.க-வில் இருந்தபடியே தன் அதிருப்தி ஆதரவாளர்களுக்காக ஒரு புதுக்கட்சியைத் தொடங்கலாம். ஆட்களைவிட அமைப்புகளும் கோஷ்டிகளும் அதிகமாக இருக்கும் இப்போதைய அ.தி.மு.க-வில் இன்னும் ஒரு கோஷ்டி புதிதாக முளைத்தால் யாருக்கும்,  அதில் பெரிய பாதிப்பொன்றும் இல்லை.

• தன்மீது அதிருப்தியில் இருக்கும் ஆதரவாளர்களை எல்லாம் வைத்து அவெஞ்சர்ஸுக்கு போட்டியாக ஒரு பிரமாண்ட படத்தைத் தயாரிக்கலாம். அ.தி.மு.க-வில் ஏற்கெனவே டி.டி.வி.பாஸ்கரன் போன்ற பார் புகழும் நடிகர்கள் இருப்பதால் இது அதிர்ச்சி தரக்கூடிய விஷயமாக யாருக்கும் இருக்கப்போவதில்லை.

• தேர்தல் முடிவுகள் முழுதாக வெளியாகும் முன்பே முந்திக்கொண்டு மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார் விசுவாச ஓ.பி.எஸ். பதில் உபகாரமாக அங்கேயே பேசி, அடுத்து நடக்க இருக்கும் பிற மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தன் ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கிக் கொடுக்கலாம், எப்படியும் தமிழ்நாட்டில் ஜெயிக்க வாய்ப்பில்லை என்பதால்!

ஓவியம்: பிரேம் டாவின்ஸி