எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

ரஜினிக்கு கட்சிப் பெயரைத் தீர்மானிப்பதில்தான் சிக்கலா?

பெயரா பிரச்னை? அவர் எந்தப் பெயரைச் சூட்டினாலும் கட்சியை பொதுமக்கள், ‘ரஜினி கட்சி’ என்றுதான் சொல்லப் போகிறார்கள்!

தாமஸ் மனோகரன், புதுச்சேரி.

‘‘பி.ஜே.பி-க்கு எந்தக் கட்சியுடனும் தொங்கிக்கொண்டு கூட்டணி வைக்க வேண்டும் என்ற நிலைப்பாடு கிடையாது’’ என்கிறாரே மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்?

இதை நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் சொல்லச் சொல்லவும்!

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

‘‘கர்நாடகாவில் யார் ஆட்சியில் இருந்தாலும் எங்களுக்குக் கவலையில்லை’’ என்கிறாரே அமைச்சர் ஜெயக்குமார்?

காவிரி தண்ணீர் வாங்க வேண்டும் என்ற அக்கறை இருப்பவர்கள்தானே அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்?!

என்.முருகேஷ், மங்கைநல்லூர்.

175-வது ஆண்டில் அடியெடுத்து வைத்து தனது கல்விப் பணியைத் தொடரும் சென்னை பச்சையப்பன் கல்லூரியைப் பற்றி..?

தமிழகத்தில் கடையேழு வள்ளல்கள் என்பார்கள். எட்டாவது வள்ளலாக பச்சையப்பரைச் சொல்லலாம். தாயின் வயிற்றில் இருந்தபோதே தகப்பனாரைப் பறிகொடுத்த பிள்ளை அவர். காஞ்சிபுரத்தி லிருந்து சென்னைக்கு மகனைத் தூக்கி வந்து வளர்த்து படிக்க வைத்தார் அந்தத் தாய். கல்வியால் உயர்ந்த பச்சையப்பர், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அரசுக்கு மொழிபெயர்ப்பாளராக, நிதி ஆலோசகராக இருந்தார். செல்வம் சேர்ந்தது. குழந்தைகள் இல்லை அவருக்கு. அதனால், கோயிலுக்கும் கல்விக்குமாக அதை எழுதி வைத்தார். எவ்வளவு சம்பாதித்தார் என்று அவருக்கே தெரியாது. நீதிமன்றக் கணக்கீட்டின்படி 150 ஆண்டுகளுக்கு முன்னால் எட்டு லட்ச ரூபாய். அதில், மூன்றரை லட்சம் கோயில்களுக்காகச் செலவிடப்பட்டது. மீதம் இருந்தவை கல்விக்காக செலவிடப்பட்டன. ஆறு கல்லூரிகள், 16 பள்ளிகள், 28 கோயில்களில் தான தர்மங்கள், கன்னியாகுமரி முதல் காசி வரைக்கும் ஏராளமான இடங்களில் சத்திரங்கள், மண்டபங்கள் என 36 வகையான சொத்துகள் இருக்கின்றன இந்த அறக்கட்டளையின்கீழ்.

கணிதமேதை சீனிவாச ராமானுஜம் முதல் பேரறிஞர் அண்ணா வரை எத்தனையோ மேதைகளைக் கொடுத்த கல்வி நிறுவனங்கள் இவை. அந்தப் பெருமை இன்னும் நூறாண்டுகள் கழித்தும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதை இன்று அந்த அறக்கட்டளையை நிர்வகிப்பவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உணர வேண்டும்.

வீ.ஹரிகிருஷ்ணன், திருச்சி-17.

‘சும்மா இருப்பதே சுகம்’ என்பது இப்போது யாருக்குப் பொருந்தும்?

எடப்பாடிக்குப் பொருத்தமாக இருக்கிறதே!

காந்தி லெனின், திருச்சி-26.

கர்நாடகத் தேர்தல் முடிவு யாருக்கான பாடமோ?

தன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும் என்று பி.ஜே.பி நினைத்தது. மேலும், மக்களின் அதிருப்திக்கு ஆளாகி மிகமிகக் கெட்ட பெயரை வாங்கியிருந்த எடியூரப்பாவையே மீண்டும் முன்னிலைப் படுத்தியது பி.ஜே.பி. அதனால்தான், ஆட்சி அமைக்கும் அளவுக்கான பெரிய வெற்றியை அடைய முடியாமல் பி.ஜே.பி பின்தங்கியது.

தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைத்த காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற ஜனதா தளமும், தேர்தலுக்கு முன்னால் எலியும் பூனையுமாக இருந்தன. ‘‘இருவரும் சேர்ந்தால் பி.ஜே.பி-யை சுலபமாகத் தோற்கடிக்கலாம்’’ என்று மம்தா பானர்ஜி உள்பட பலர் யோசனை சொன்னார்கள். ஆனால், இரண்டு கட்சிகளும் அதை நிராகரித்தன. இப்போது அவர்களாகவே ஒன்று சேர்ந்துவிட்டார்கள்.

‘தனியாக நின்றால் வெற்றி பெறலாம்’ என்ற குருட்டு தைரியம் உள்ளவர்களுக்கு கர்நாடகா தேர்தல் முடிவுகள் ஒரு பாடம்.

ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்.

ரஜினி தனது அரசியலைத் தள்ளிப்போட்டுக் கொண்டே போகிறாரே?

எவ்வளவு தூரம் தள்ளுவார்? தேர்தல் வரைக்கும்தானே தள்ள முடியும்! அவரே சொல்லியிருக்கிறாரே, ‘தேர்தல் தேதி அறிவித்ததும் எனது முடிவை அறிவிப்பேன்’ என்று. இதைவிடத் தெளிவாக எப்படிச் சொல்ல முடியும்?

தீ.அசோகன், சென்னை-19.

‘‘காங்கிரஸில் உள்ளவர்கள் ஒற்றுமையாக இருந்தால் தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும்’’ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளது பற்றி..?

காங்கிரஸில் உள்ளவர்கள் என்கிறாரே, அப்படி எத்தனை பேர் உள்ளார்கள் என்பதையும் சொல்லிவிட்டால், காங்கிரஸ் ஆட்சி எந்தத் தேர்தலில் அமையும் என்பதைச் சொல்ல முடியும்!

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

‘‘தேசியக்கட்சிகள்மீது எங்களுக்கு ஒருபோதும் நம்பிக்கை கிடையாது’’ என்கிறாரே தம்பிதுரை?

‘சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்’ என்பது போல் தெரிகிறதே!

நா.மோகன்ராஜ், ஆனூர் நல்லூர்பாளையம்.

தற்காலச் சூழலில், திராவிடக் கருத்தியல் வலுவிழந்துவிட்டதா?

சமூகநீதி, பெண்ணுரிமை, மாநில உரிமைகள், மொழிப் பற்று, இன உணர்ச்சி... ஆகியவற்றைத்தான் திராவிடக் கருத்தியல் என்று அண்ணா சொன்னார். இந்தக் கருத்துக்கள் வலுவிழந்து விட்டனவா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

லட்சுமிதாரா, வேலூர் (நாமக்கல்)

‘‘ஜெயலலிதாவைவிட எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்துகிறார்’’ என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சொல்கிறாரே?

இதை எந்த அர்த்தத்தில் அவர் சொன்னார் என்று தெரியவில்லை. அவர் நம்புவதாகச் சொல்லும் அம்மாவின் ஆவி அவரை மன்னிக்காது.

பொ.மாரிமுத்துக்குமார், திருச்சி-5.

காந்தி, அரை ஆடை அணிந்தபோது அதை அவரின் அபிமானிகளும் உடனிருந்தவர்களும்கூட பின்பற்றவில்லையே?

காந்தியைப் போல அனைவரும் அரை ஆடை உடுத்த வேண்டியதில்லை. நாட்டுப்பற்று, மதுவிலக்கு, தீண்டாமை எதிர்ப்பு, உண்மை ஆகியவற்றைப் பின்பற்றினால் போதும்.

எஸ்.பழனிவேல், சங்கரன்கோவில்.

டெக்னாலஜி வளர்ச்சியால், தெரியாத மொழிகளைக்கூட மனிதர்கள் பேசுவது சாத்தியமாகுமா?

உஸ்பெகிஸ்தான் என்ற நாட்டைச் சேர்ந்த 58 வயது பெண்மணி கவ்கர்ஜான். மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்காக சமீபத்தில் ஹைதராபாத் வந்தார். அவருக்கு ஆங்கிலம் தெரியாது. இந்தியாவில் பேசப்படும் எந்த மொழியும் தெரியாது. வந்த இடத்தில் டாக்டர்கள் பரிசோதித்தபோதுதான், அவருக்கு கல்லீரல் பாதிப்பு, சுவாசக் கோளாறு, ரத்த தட்டணுக்கள் குறைந்திருப்பது என ஏராளமான பிரச்னைகள் இருப்பது தெரியவந்தது. டாக்டர்கள் இவற்றையெல்லாம் சொன்னபோது, அவருக்குப் புரியவே இல்லை. கடைசியில் கைகொடுத்தது ‘கூகுள் ட்ரான்ஸ்லேட்’தான். டாக்டர்கள் தாங்கள் செல்ல விரும்புவதை ஆங்கிலத்தில் பதிவிட, கூகுள் ட்ரான்ஸ்லேட் இணையதளம் அதை உஸ்பெக் மொழியில் மாற்றி கவ்கர்ஜானுக்கு சொன்னது. கவ்கர்ஜான் உஸ்பெக் மொழியில் பதில் சொல்ல, அது டாக்டர்களுக்குப் புரியும்விதமாக ஆங்கிலத்துக்கு மாறியது. இப்படியே தகவல் பரிமாற்றம் நிகழ்ந்து, அத்தனை ஆபரேஷன்களையும் முடித்துவிட்டார்கள். ஹைதராபாத் டாக்டர்கள், உஸ்பெக் மொழி மட்டுமே பேசும் நோயாளியிடம் சுலபமாகத் தகவல் பரிமாற முடியும் என்பதை சில ஆண்டுகளுக்குமுன் நம்பியிருக்க முடியுமா?

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!