“நாங்கள் அ.ம.மு.க-வின் செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தி விட்டு வந்துகொண்டிருந்தோம். சுமார் நூறு பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் வந்து எங்களைத் தாக்கியது. ‘எங்களைமீறி நீங்கள் எப்படி கூட்டம் நடத்தலாம்’ என்று சொல்லிக்கொண்டே எங்களைத் தாக்கினர். எங்களின் கார் கண்ணாடிகளை உடைத்தனர். அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நிழலாக வலம்வரும் சந்திரசேகர் தலைமையில்தான், அந்த அராஜகம் நடந்தது. கடைசியில், தாக்கியவர்களை விட்டுவிட்டு எங்கள்மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்” என்று கொந்தளிக்கிறார்கள் அ.ம.மு.க-வினர்.

டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஒவ்வொரு தொகுதியிலும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் வடவள்ளியில் மே 17-ம் தேதி அ.ம.மு.க-வின் செயல் வீரர்கள் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. அதற்கு, ஆரம்பம் முதலே ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்துவந்தது.

என்ன நடந்தது என்று அ.ம.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “கோவையில் ஏற்கெனவே மூன்று இடங்களில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்திவிட்டோம். முன்னாள் எம்.எல்.ஏ-வான சேலஞ்சர் துரை தலைமையில் வடவள்ளியில் ஒரு மண்டபத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்த திட்டமிட்டோம். மண்டபத்தின் உரிமையாளர் மூலமாக முட்டுக்கட்டை போட்டனர். பிறகு, ஓணாப்பாளையம் அருகே ஒரு நிர்வாகி வீட்டில் கூட்டத்தை நடத்தினோம். கூட்டம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, சுமார் நூறு பேர் ஆயுதங்களுடன் வந்து கார் கண்ணாடிகளை உடைத்தனர். டிரைவரின் மண்டையை உடைத்தனர். இரண்டு பெண்களைத் தாக்கினர். அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நிழலான சந்திரசேகரின் தலைமையில்தான் தாக்குதல் நடந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி சாலைமறியல் செய்தோம். ஆனால், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்காமல், எங்கள்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல்துறை, அமைச்சரின் ஏவல்துறையாக செயல்படுகிறது” என்றனர்.

தங்களை அ.ம.மு.க-வினர் தாக்கியதாக அ.தி.மு.க-வினர் அளித்த புகார், பொதுமக்கள் தரப்பில் பெறப்பட்ட புகார் ஆகியவற்றின் அடிப்படையில் அ.ம.மு.க-வைச் சேர்ந்த 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை மே 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப் பட்டுள்ளது. அ.ம.மு.க-வினர் தாக்கியதாகக் கூறி, அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஆறு பேர் கோவை அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளனர்.

இந்த நிலையில், “கோவை தங்களுக்கு பாத்தியப்பட்ட பகுதி போல, அங்கு சட்டத்தை முடக்கிவைத்துள்ள ஆளும் கட்சி வன்முறை அரசியலுக்கும், கைகட்டி வேடிக்கை பார்த்த காவல்துறைக்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆட்சியும், அதிகாரமும் நிரந்தரமானதல்ல என்பதைக் காவல்துறை உணர்ந்து, தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய வேண்டும். குற்றவாளிகளைத் தப்பிக்கவைக்க, உள்ளூர் அமைச்சர் முயற்சி செய்தால், அதற்கு காவல்துறையும் துணை போகுமேயானால், கோவையில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்” என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

“வடவள்ளியில் அறிவிக்கப்படாத தலைவராக சந்திரசேகர் வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-வான பி.ஆர்.ஜி.அருணை விட, சந்திரசேகர்தான் அதிகார பலத்துடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.க நிர்வாகிகளே, அவரை வடவள்ளித் தலைவர் என்றுதான் அழைக்கின்றனர். அவரின் உத்தரவு இல்லாமல், அங்கு அணுவும் அசையாது என்கின்றனர். தங்களை மீறி, வடவள்ளியில் யாரும் வளர்ந்துவிடக்கூடாது என்பதில் சந்திரசேகர் தரப்பு உறுதியாக உள்ளது. அதனால்தான், இத்தனை ஆண்டுகள் ஒன்றாக இருந்தவர்களைத் தாக்கியுள்ளனர்” என்கின்றனர் அ.ம.மு.க-வினர்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, வடவள்ளியில் உள்ள சந்திரசேகரின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேரூர் டி.எஸ்.பி வேல்முருகனிடம் பேசினோம். “இந்தப் பிரச்னை தொடர்பாக அ.ம.மு.க தரப்பிலிருந்து புகார் அளிக்கவில்லை. ஆனால், அ.ம.மு.க-வினர் மீது பொதுமக்களும், அ.தி.மு.க-வினரும் புகார் அளித்தனர். சம்பவம் எப்படி நடந்தது என்றே அவர்கள் கூறவில்லை. மறியல் செய்த இடத்தில் கார் கண்ணாடி உடைந்ததற்கான எந்தத் தடயமும் இல்லை. ஓணாப்பாளையம் அருகே சம்பவம் நடந்திருந்தாலும், எதற்காக அவ்வளவு தூரம் வந்து மருதமலை சாலையில் மறியல் செய்ய வேண்டும்? அ.ம.மு.க-வின் நடவடிக்கையில் சந்தேகம் உள்ளது. நாங்கள் எவ்வளவு பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கேட்கவில்லை. மாறாக, பல போலீஸ்காரர்களை அவர்கள் சுற்றிவளைத்தனர். அதனால்தான், கைது வரைச் சென்றோம்” என்றார்.

சந்திரசேகரிடம் விளக்கம் கேட்பதற்கு அவரைத் தொடர்புகொண்டோம். ஆனால், அவர் நம்மிடம் பேசவில்லை.

- இரா.குருபிரசாத்

படங்கள்: தி.விஜய்