இரக்கம், மனிதம் போன்றவையெல்லாம் இப்போதைய அதிகார வர்க்கத்தின் அகராதியில் இல்லவே இல்லை போல! துள்ளத் துடிக்க ஏராளமான உயிர்களைப் பலி வாங்கியிருக்கிறது காக்கிகளின் வெறியாட்டம். போதாக்குறைக்கு இந்தத் கொடூரத்தைத் திசைதிருப்பும், ஆதரிக்கும் கல்நெஞ்சக்காரர்கள் வேறு. அவர்களில் சிலருக்கு சில அறிவுரைகள் சொல்லத் தோன்றுகிறது.

* அ.தி.மு.க அமைச்சர்கள்: தெர்மாகோலில் விளையாட்டு காட்டுவது, பொதுமேடைகளில் உளறிக்கொட்டுவது என்று சாமர்த்தியமாக நாள்களைக் கடத்தியதுவரை ‘கோட்டைத் தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன்’ என்ற ஒப்பந்தம் இருந்தது. இப்போது இத்தனை உயிர்களைப் பலிகொண்டுவிட்டு, திரும்பவும் பழையபடி விளையாட்டு காட்டுவீர்களா என்ன? போதும் கோமாளித்தனங்கள்! உங்களை மாற்றிக்கொள்வதுதான் உங்களுக்கும் எங்களுக்கும் எல்லோருக்கும் நல்லது!

* துப்பாக்கிச்சூடு ஆதரவாளர்கள்: மெரினா போராட்டத்தின்போது உங்களுக்கு மாணவர்கள் கலவரக்காரர்கள் ஆனார்கள். இப்போது, தூத்துக்குடியில் சாமானியர்கள் பயங்கரவாதிகள் ஆகியிருக்கிறார்கள். ‘‘போட்டுத் தள்ளுங்க சார், விடாதீங்க சார்’’ என நீங்கள் குறிப்பிடும் அதே ஆட்கள்தான் நாளை உங்களுக்காக உங்கள் தெருவில் களம் காண்பார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

* ஆர்.ஜே பாலாஜி உள்ளிட்ட நடிகர்கள்(?): ஜல்லிக்கட்டில் அடிவாங்கியவர்களையெல்லாம் குற்றவாளிகள் ஆக்கிவிட்டு, இப்போது போராட்டக்காரர்களையெல்லாம் சட்டவிரோதிகள் ஆக்கியிருக்கிறீர்கள். கன்டென்ட் இல்லாவிட்டாலும் எல்லாவற்றிலும் கருத்து சொல்லிவிட வேண்டும் என்ற உங்களின் ஆர்வம் புரிகிறது. ஆனால், அதற்கு கள நிலவரம் தெரியவேண்டும். வெறுமனே காட்டுக்கூச்சல் போட இது ஐ.பி.எல் கமென்ட்ரி பாக்ஸ் அல்ல, வாழ்வுரிமைக்காகப் போராடும் களம். நமக்கு வர்றதை மட்டும் பண்ணலாம் ப்ரோ!

* மத்திய அரசு: நீட், காவிரி என ஒவ்வொரு பிரச்னையிலும் தமிழகத்தைத் தனித்துவிட்டதற்கான ‘தேர்தல் அரசியல்’ நோக்கங்கள் புரிகின்றன. ஆனால், சம்பவம் நடந்து இரண்டு நாள்களாகியும் குறைந்தபட்சம் கருத்து சொல்லக்கூட பிரதமரால் முடியாதா என்ன? ஆனால், போராட்டத்தைச் சமாளிக்க மத்தியப் படையை அனுப்ப மட்டும் உடனடி விசாரிப்புகள் நடக்கின்றன. தாமரை மலர்வதற்காக மிச்சமிருக்கும் குளங்களையெல்லாம், நீங்களே மண் அள்ளிப் போட்டு மூடிக்கொண்டிருக்கிறீர்கள்.

ஓவியம்: பிரேம் டாவின்ஸி