அனைத்து அரசியல் தலைவர்களையும் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்க அனுமதித்த தமிழக அரசு, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனை மட்டும் தூத்துக்குடி விமான நிலையத்திலேயே தடுத்துக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியைத் தடுத்தது, உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடியை அடித்து உடைத்தது, பிரதமர் மோடிக்குக் கறுப்புக்கொடி, நெய்வேலி முற்றுகை என்று தமிழக போலீஸாருக்கு அவர் கொடுத்த நெருக்கடிகளே வேல்முருகன் கைதுக்கு முக்கியக் காரணங்கள் என்கிறது போலீஸ் வட்டாரம்.

‘தூத்துக்குடி நகருக்குள் வேல்முருகனை அனுமதித்தால், நிலைமை மேலும் சிக்கலாகிவிடும்; வந்த இடத்தில் இளைஞர்களைத் திரட்டி அவர் போராட்டம் செய்வார்; மீண்டும் கலவரம் வெடிக்கும்’ என்ற அச்சத்தை வெளிப்படுத்தியது உளவுத்துறை. அதன்பிறகுதான், காவல்துறை உயர் அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர். அவரை உள்ளே வரவிடாமல் தடுக்க வேண்டும் என்ற ஒற்றை அஜெண்டாவுடன் களத்தில் இறங்கியது காவல் துறை. 144 தடை உத்தரவைக் காரணம் காட்டி, அவரை தூத்துக்குடி விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தினர். தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து மே 25-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு வேல்முருகனை அழைத்துச்சென்று ஒரு மண்டபத்தில் தங்க வைத்தது தூத்துக்குடி போலீஸ். அப்போது, அங்கு திரண்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ‘தூத்துக்குடி மக்களைச் சந்திப்பதற்கு அனுமதிக்க வேண்டும்; அதுவரை உணவருந்த மாட்டேன்’ என வேல்முருகன் உண்ணாநிலையை மேற்கொண்டார். ஆனாலும், தூத்துக்குடிக்குள் செல்ல அனுமதிக்க முடியாது என்று போலீஸார் உறுதியாகச் சொல்லிவிட்டனர். இதையடுத்து, விழுப்புரம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தது தூத்துக்குடி போலீஸ். அவர்கள், 26-ம் தேதி அதிகாலை 3 மணிக்குத் தூத்துக்குடி வந்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 1-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் சுங்கச்சாவடியை அடித்துநொறுக்கிய வழக்கில் கைதுசெய்து புழல் சிறையில் அவரை அடைத்தனர்.

சிறைக்கு உள்ளேயும் தண்ணீர்கூடக் குடிக்காமல் உண்ணாவிரதத்தை வேல்முருகன் தொடர்ந்தார். சிறைத்துறை அதிகாரிகள் பலமுறை பேச்சு நடத்தியும், உண்ணாநிலையைக் கைவிட அவர் மறுத்துவிட்டார். 4-வது நாளாக, 28-ம் தேதி காலை 11.30 மணிக்கு புழல் சிறைக்குச் சென்று வேல்முருகனை வைகோ சந்தித்தித்தார். அப்போது, சிறைத்துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர். உண்ணாநிலையைக் கைவிடும்படி வைகோ கேட்டுக்கொண்டார்.

வேல்முருகனிடம் பேசிய வைகோ, ‘’முன்னாள் பிரதமர் வி.பி.சிங் உண்ணாநிலை போராட்டத்தின்போது, நான்கு நாள்கள் ஒரு சொட்டு நீர் கூட அருந்தவில்லை. அதுவே அவரது கிட்னி செயலிழக்கக் காரணமாயிற்று. அந்த நோய் அவரது வாழ்வைப் பறித்துக்கொண்டது. அந்த நிலை உங்களுக்கு வரக்கூடாது’’ என்று வைகோ வலியுறுத்தினார். அதையடுத்து மோரும், பிரட்டும் வேல்முருகனுக்கு வைகோ கொடுத்தார். வேல்முருகனைக் குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய காவல்துறை ஆலோசித்துவருகிறது என்று சொல்லப்பட்ட நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

- எஸ்.முத்துகிருஷ்ணன்