Published:Updated:

ஷீலா தீட்சித் பதவி விலக வேண்டும்: பா.ஜ.க வலியுறுத்தல்

ஷீலா தீட்சித் பதவி விலக வேண்டும்: பா.ஜ.க வலியுறுத்தல்
ஷீலா தீட்சித் பதவி விலக வேண்டும்: பா.ஜ.க வலியுறுத்தல்
ஷீலா தீட்சித் பதவி விலக வேண்டும்: பா.ஜ.க வலியுறுத்தல்

டெல்லி: டெல்லியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த தவறியதற்காக முதலமைச்சர் ஷீலா தீட்சித்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.

டெல்லியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை கண்டித்து, டெல்லியின் பல்வேறு இடங்களிலும் போராட்டடங்கள் நடைபெற்று வருகின்றன. மகளிர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர்.

##~~##
இந்த விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்திலும் கடந்த இரண்டு நாட்களாக அமளி ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இதுபோன்ற பாலியல் குற்றங்களை தடுக்க தவறிய முதலமைச்சர் ஷீலா தீட்சித்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.