Published:Updated:

திருப்பூரில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் மருத்துவ சிகிச்சைக்கு உதவி: உம்மன் சாண்டி

திருவனந்தபுரம்: திருப்பூரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்ய தயாராக இருப்பதாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் அருகே வீட்டில் தனியாக இருந்த 8 வயது சிறுமியை, பக்கத்து வீட்டில் இருந்த கண்ணன் உள்பட 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர். வேலை முடிந்து வீட்டுக்கு வந்த தாய், சிறுமி சுயநினைவின்றி இருப்பது குறித்து மருத்துவமனையில் அனுமதித்த போது, அவர் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, சிறுமியின் தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து கண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர்.

##~~##
கேரளாவை சேர்ந்த அந்த சிறுமியின் தாயார், திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்த பிரச்னையை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் நேற்று கேரள சட்டசபையில் எழுப்பினார்.
ஆதரவற்ற ஏழை குடும்பத்தை சேர்ந்த அந்த சிறுமியை கேரளா அழைத்து வந்து நல்ல முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அச்சுதானந்தன் வற்புறுத்தினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் உம்மன்சாண்டி, சிறுமியின் மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்ய தயாராக இருப்பதாகவும், அது குறித்து தமிழக அரசுடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்தார்.