கருணாநிதி, முதுமை காரணமாக முன்பைப் போல் இயங்கமுடியாத நிலையிலும், கடந்த கால செயல்பாடுகளை வைத்து அனைவராலும் எதிர்பார்க்கப்படும் மனிதராக இருக்கிறார். ‘‘கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது’’ என்கிறார் ரஜினி. ‘‘கருணாநிதி துடிப்புடன் இருந்திருந்தால், இப்படியெல்லாம் நடக்காது’’ என்று தமிழகச் சூழல் குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்கிறார். கட்சி எல்லைகளைக் கடந்து கருணாநிதி நினைக்கப்படுகிறார். ஜூன் 3-ம் தேதி கருணாநிதியின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் பற்றிய நினைவுகளை அரசியல் பிரமுகர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள்.

கி.வீரமணி, திராவிடர் கழகத் தலைவர்

பேருந்து வசதிகள் அவ்வளவாக இல்லாத அந்தக் காலத்தில், கிராமம்தோறும் இயக்கப் பிரசாரத்துக்கு சைக்கிளில்தான் செல்வோம். பின்னிருக்கை இல்லாத சைக்கிளின் ஹேண்டில் பாரில் என்னை அமர்த்திக்கொண்டு கருணாநிதி சைக்கிள் ஓட்டிச் செல்வார். சில சமயங்களில், தோழர்களே பேருந்தில் அழைத்துச் செல்வார்கள். இரவில் கூட்டம் முடிந்தபிறகு, ஊருக்குத் திரும்ப பேருந்து வசதி இருக்காது. விழா ஏற்பாட்டாளர்களின் வீட்டுத் திண்ணையிலேயே படுத்து உறங்கிவிட்டு, மறுநாள் அதிகாலைப் பேருந்தைப் பிடித்து ஊர் திரும்புவோம்.

திருத்துறைப்பூண்டி அருகே சங்கேந்தி கிராமத்துக்கு கருணாநிதியுடன் நான், ஈரோடு அப்பாவு, ஆறுமுகம் என அப்போதிருந்த மாணவ நண்பர்கள் பலரும் சென்றிருந்தோம். கூட்டம் முடிந்ததும் ஒரு வீட்டுத் திண்ணையிலேயே படுத்துவிட்டோம். கொசுக்கடித் தொல்லையால் தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்துப் பார்த்த கருணாநிதி, ‘‘இந்தக் கொசுக்கடியில் படுத்திருந்தால் தூங்கமுடியாது. காற்றோட்டமாக இந்த இரவிலேயே திருத்துறைப்பூண்டி நோக்கிக் கிளம்பிவிடலாம்’’ என்றார். நள்ளிரவு ஒரு மணிக்கு மாட்டுவண்டியை எங்கள் பயணத்துக்கு ஏற்பாடு செய்துதந்தனர். பாதித் தூக்கத்துடன் அந்த வண்டியில் ஏறிப் பயணமானோம். நெல் மூட்டைகளை ஏற்றிச்செல்லும் அந்தக் கட்டை வண்டியின் ஓரத்தில், தடுப்புக்காக செருகப்பட்டிருந்த முளைக்குச்சிகளைப் பிடித்தபடியே, குண்டும்குழியுமான சாலையில் பயணம் செய்து அதிகாலை 4 மணிக்கு திருத்துறைப்பூண்டி வந்தடைந்தோம்.

அதே திருத்துறைப்பூண்டியில் ஒருமுறை ‘கறுப்புச்சட்டை இளைஞர் படை மாநாடு’ நடைபெற்றது. பெரியார், அண்ணா எனப் பெரிய தலைவர்கள் எல்லாம் பேச ஏற்பாடாகியிருந்தது. அந்த மாநாட்டைத் திறந்துவைக்க வேண்டியவர் கருணாநிதி. அந்த நேரத்தில், ‘கருணாநிதிக்கு அம்மை நோய் தாக்கியிருக்கிறது’ என்று திருவாரூரிலிருந்து செய்தி வந்தது. ‘கருணாநிதி வரமாட்டார்’ என்றே நாங்கள்

நினைத்திருந்தோம். ஆனால், அந்தச் சூழலிலும் அவர் வந்துவிட்டார். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. உடல் முழுவதையும் மறைக்கும் விதத்தில், கறுப்பு நிற ஷெர்வானி உடையில் ரயிலில் வந்திறங்கினார் கருணாநிதி.

மாநாடு முடிந்து திரும்பிச் சென்றபோது, ‘‘இப்படியொரு நிலையில் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வரலாமா?’’ என்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தோம். ‘‘அய்யா எல்லாம் வருகிற மாநாட்டில் நாம் கலந்துகொள்ளாமல் இருக்க முடியுமா?’’ என்று கேட்டுவிட்டு, ஷெர்வானி உடையைக் கழற்றினார். உடம்பு முழுக்க அம்மைக் கொப்புளங்கள். இயக்கத்தின்மீதான அவரது ஈடுபாட்டைப் பார்த்துத் திகைத்துப்போனோம்.

கட்சியின் தலைவராக வந்தபிறகும், தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தபோதும், அதே அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும்தான் அவர் இருப்பார். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முதல் பாடம் அதுதான்!

வைகோ, ம.தி.மு.க பொதுச்செயலாளர்

1973-ம் ஆண்டு, என் தந்தையார் புற்றுநோயால் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் இறந்தார். ஓராண்டு கழித்து எனக்கும் உடலில் சிறிது பாதிப்பு ஏற்பட்டது. எனக்கும் புற்றுநோய் இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகப்பட்டனர். அண்ணாவுக்கு சிகிச்சை அளித்த ரேடியாலஜி மருத்துவர் ஜான்சன் எனக்கு சோதனை செய்தார். பிறகு, என்னை மருத்துவமனையில் அனுமதிக்கச் சொல்லிவிட்டார். அந்த நேரத்தில், திருநெல்வேலி மாவட்டத்துக்குக் கருணாநிதி சுற்றுப்பயணம் சென்றார். மருத்துவர்கள் தடுத்தும், நான் உறுதியாகக் கருணாநிதியை வரவேற்கச் செல்லவேண்டும் என்று மருத்துவமனையிலிருந்து வெளியேறினேன். சங்கரன்கோவிலில் கருணாநிதி வரும் ரயிலுக்காக சால்வையுடன் காத்திருந்தேன். ரயில் நின்றபோது அனைவரிடமும் சால்வைகளை வாங்கிய தலைவர், என்னையும் ரயிலில் ஏறச் சொன்னார்.

தென்காசியில் இறங்கினோம். கருணாநிதி தங்கியிருந்த அறையின் வாசலில் காத்திருந்தேன், அப்போது கருணாநிதியின் குடும்ப மருத்துவர் கோபால் அறையிலிருந்து வெளியே வந்தார். என்னிடம், ‘‘நீங்கள் தலைவருக்கு ரொம்ப வேண்டியவரா?’’ என்று கேட்டார். நான், ‘‘எதற்காக அப்படிக் கேட்கிறீர்கள்?’’ என்றேன். ‘‘தலைவருக்கு விருதுநகரில் ரத்த அழுத்தப் பரிசோதனை செய்தபோது நார்மலாக இருந்தது. இப்போது ரத்த அழுத்தம் அபாயகரமான அளவில் இருக்கிறது. இடையில் என்ன நடந்தது என்று தலைவரிடம் கேட்டேன். ‘தம்பி கோபால்சாமி வாட்டசாட்டமா இருப்பான். இப்ப ரொம்ப மெலிந்து போயிருக்கான். மருத்துவமனையிலிருந்து வந்திருக்கான். அதை நினைத்து வருத்தப்பட்டுக்கிட்டே வந்தேன்’ என்று சொன்னார். அதனால்தான், அவருக்கு ரத்த அழுத்தம் உயர்ந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினேன்’’ என்றார். அப்போதே எனக்குக் கண்ணீர் வந்துவிட்டது.

தலைவர் சென்னை திரும்பியதும் கவிஞர் கருணானந்தம் என்னைத் தொடர்புகொண்டு, ‘‘நீங்கள் உடனடியாக வேலூர் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று தலைவர் சொல்லிவிட்டார். அங்கு டாக்டரிடமும் தலைவர் பேசிவிட்டார்’’ என்று என்னிடம் கண்டிப்புடன் சொன்னார். நான் வேலூர் சென்று ஒரு மாதம் சிகிச்சை பெற்றேன். எனக்குப் புற்றுநோய் இல்லை என்று முடிவாகிவிட்டது. அப்போது முதல்முறையாகக் கருணாநிதிக்கு, ‘தாயினும் சாலப்பரிந்து பாசம் காட்டும் ஆருயிர் அண்ணன் கலைஞர் அவர்களுக்கு’ என ஆரம்பித்து ஆறு பக்கக் கடிதம் எழுதினேன். என் ‘ரத்தம் கசியும் இதயத்தின் குரல்’ நூலுக்கு எழுதிய அணிந்துரையில், ‘வேலூர் சிறையில் உடல்நலம் பெற்றுத் திரும்பியபோது, அண்ணனாக இருந்த நான் தாயுமானேன்’ என்று கருணாநிதி எழுதியிருந்தார். அந்த அளவுக்கு என் வளர்ச்சியில் அக்கறையாக இருந்தவர் அவர்.

இல.கணேசன், பி.ஜே.பி தேசிய செயற்குழு உறுப்பினர்

நட்புக்கு முக்கியத்துவம் தருபவர் கருணாநிதி. ஆனால், தான் கொண்டிருந்த கொள்கையை உறுதியுடன் செயல்படுத்தியவர். அதுதான், அவரை அரசியல் களத்தில் கவர்ந்திழுக்க வைத்தது. தமிழகத்தில் அதிகம் விமர்சனத்துக்கும் குற்றச்சாட்டுக்கும் உள்ளானவர் அவராகத்தான் இருக்க முடியும். ஆனாலும், தான் நினைத்த காரியத்தைச் செய்வதில் குறியாக இருப்பார். அரசியலில் அவரைவிட நான் மிகவும் இளையவன். ஆனாலும், பலநேரத்தில் சமமான நிலையில் மதிப்பு தந்தபோதெல்லாம், நெகிழ்ந்து போயிருக்கிறேன்.

1996 காலகட்டத்தில் அவர் முதல்வராக இருந்தபோது, என் நண்பருடைய பிரச்னைக் குறித்து விரிவாகக் கடிதம் எழுதி அவருக்கு ஃபேக்ஸ் மூலமாக அனுப்பினேன். அப்போது, கபாலீஸ்வரர் கோயிலில் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி நடந்த சமபந்தி போஜனத்தில் கருணாநிதி பங்கேற்றிருந்தார். அப்போது, அரசியல் களத்தில் நான் செல்வாக்கு இல்லாமல் இருந்தேன். கோயிலில் அவரைப் பார்த்ததும் அருகில் சென்று என்னை அறிமுகம் செய்துகொண்டேன். உடனே, ‘‘ஃபேக்ஸில் நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது. அது தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ளேன்’’ என்று சொன்னார். அதைக்கேட்டு வியந்து போனேன். அவர்மீதான மரியாதை இன்னும் அதிகமானது.

இளைஞனாக இருந்தபோது அரசியல் தலைவர்களின் பேச்சை மக்களுடன் மக்களாக நின்று கேட்கும் பழக்கம் எனக்கு உண்டு. கொள்கைரீதியாக எனக்கு வேறுபாடு இருந்தாலும், தி.மு.க-வில் அறிஞர் அண்ணாவைத் தொடர்ந்து, கருணாநிதி மற்றும் ஈ.வெ.கி.சம்பத் பேச்சைக் கேட்டிருக்கிறேன். கருணாநிதி பல விஷயங்களை நினைவுபடுத்திப் பேசுவார். மிக ஆச்சர்யமாக இருக்கும். அவர் இல்லாத அரசியல் களம் வெறுமையைத் தருகிறது. அவர் நலமுடன் நீண்ட நாள் வாழவேண்டும் என்பதுதான் என் ஆசை. ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

பேராசிரியர் ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்

2004-ம் ஆண்டு தி.மு.க கூட்டணியை எங்களின் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆதரித்தது. அப்போது, நாங்கள் காங்கிரஸ்-தி.மு.க கூட்டணியிடம் வைத்த ஒரே கோரிக்கை, இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்பது. ‘மத்திய அரசின் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இது இடம்பெறும்’ என்று அறிவித்தார் கருணாநிதி. ஆனால், மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் இதுபற்றிய எந்த அறிவிப்பும் செய்தித்தாளில் வெளிவரவில்லை. எனவே, அதற்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை கொடுத்தேன்.

மறுநாள் காலை 6.30 மணிக்கு எங்கள் அலுவலகத்துக்கு ஒரு போன் அழைப்பு. போனை செக்யூரிட்டி எடுத்துள்ளார். ‘‘நான் கருணாநிதி பேசுறேன். உங்க கட்சித் தலைவர்கள் யாராவது இருந்தா போனைக் கொடுங்க’’ என்று கூறியுள்ளார். குரலைக் கேட்டதும் செக்யூரிட்டி பதறிவிட்டார். ‘‘இப்போது யாரும் இல்லை, வந்ததும் தகவல் சொல்கிறேன்’’ என்று பதில் சொன்ன செக்யூரிட்டி, உடனடியாக எனக்குத் தகவல் சொன்னார். நான் கருணாநிதியைத் தொடர்புகொண்டேன். அவர், ‘‘ஏன் இவ்வளவு காட்டமாக அறிக்கை கொடுத்திருக்கீங்க. குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இடஒதுக்கீடும் உள்ளது. பேப்பர்காரங்க போடாம இருந்திருப்பாங்க” என்று சொன்னார். சற்று நேரத்தில் தயாநிதி மாறன் என்னைத் தொடர்புகொண்டு, ‘‘மத்திய அரசின் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடும் இடம் பெற்றுள்ளது’’ என்றார். அவ்வளவு பெரிய தலைவராக இருந்தும், காலை நேரத்தில் ஒரு அறிக்கைக்கு விளக்கம் கொடுப்பதற்கு துடித்த அந்த எண்ணம்தான் அவரின் தனித்துவம். அந்த அணுகுமுறை அனைவரும் பின்பற்றத்தக்கது.

சண்முகநாதன், கருணாநிதியின் உதவியாளர்

கருணாநிதி, அவரின் இரண்டு பிறந்த நாள் விழாக்களில் பங்கேற்கவில்லை.

2011-ம் ஆண்டு 88-வது பிறந்த நாளில் ‘பெரியார், அண்ணா ஆகியோரது நினைவிடங்களில் மலர்வளையம் வைக்கும் நிகழ்ச்சிகளைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளும் மனநிலையில் இல்லை’ என்று கூறினார். ‘என்னை நேரில் சந்தித்து வாழ்த்து வழங்க வேண்டுமென்பதற்காக யாரும் வற்புறுத்த வேண்டாம். வீட்டிற்கோ, கழக அலுவலகத்திற்கோ வந்து சந்திக்கும் வாய்ப்பு இல்லாமைக்காக என்னை மன்னிக்க வேண்டும்’ என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனாலும், பெரியார், அண்ணா ஆகியோரது நினைவிடங்களில் மலர்வளையம் வைத்து வணங்கிட கருணாநிதி சென்றபோது, கட்சியினர் ஆயிரக்கணக்கில் வந்து அவரை வாழ்த்தினர்.

கடந்த ஆண்டு பிறந்த நாளில் கருணாநிதி பங்கேற்க முடியவில்லை. ஆனால், ஜூன் 3-ம் தேதி ஒரு நாள் மட்டும், சமூக வலைதளங்களில் கருணாநிதிக்கு 57 லட்சம் பேர் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். ‘தினமணி’ ஆசிரியர் வைத்தியநாதன் ஒரு கட்டுரையில், ‘சுதந்திர இந்தியாவில் தமிழகத்தில் பிறந்தவர்கள் யாராக இருந்தாலும், கருணாநிதியின் பேச்சாலும் எழுத்தாலும் ஈர்க்கப்படவில்லை என்று சொல்வார்களானால், அவர்கள் தமிழ் தெரிந்தவர்களாக இருக்க மாட்டார்கள்’ என்று எழுதியிருந்தார். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், மாற்றுக் கருத்தைக் கொண்டவர்களாக இருந்தாலும், கருணாநிதி என்றால் அவர்களுக்கு ஜனநாயகரீதியான மாபெரும் தலைவர் என்ற உருவம்தான் கண்ணுக்குத் தெரியும்.

கருணாநிதி தனிமனிதர் அல்ல... இயக்கம்!

அ.அருள்மொழி, வழக்கறிஞர்

2009-ம் ஆண்டு ஈழப் போர் நடந்தபிறகு, கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக் கருத்தரங்கில் என்னைப் பேச அழைத்தனர். எனக்குக் கொடுத்த தலைப்பு ‘போரைப் புறம்தள்ளி பொருளைப் பொதுவாக்குவோம்’ என்பது. கருணாநிதி முன்னிலையில் பேசத் தொடங்கினேன். ‘‘ஒரு பெருமரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்ததைப்போல, இந்தப் பேரினத்தின் ஒரு பகுதி அழிந்தபிறகு, அதற்காகக் கூடி அந்தத் துக்கத்தைப் பகிர்ந்து கொள்வதற்குக்கூட வாய்ப்பில்லாத சூழ்நிலையில், இந்த மாநாட்டை அதற்கான வாய்ப்பாகக் கருதுகிறேன்’’ என்றேன். பிறகு, சில விமர்சனங்களை வைத்தேன். எல்லோரும் பாராட்டினார்கள்.

பேசி முடித்ததும் கருணாநிதியிடம், ‘‘உங்களுக்கு நான் பேசியதில் ஏதாவது வருத்தமா’’ என்று கேட்டேன். ‘‘இல்லம்மா, சரியாகத்தானே பேசினே...’’ என்றார். அவரைப் பற்றிய விமர்சனமாக இருந்தபோதும், அதை ஏற்றுக்கொண்டார். தன்னைப் பற்றி தெளிவும் நம்பிக்கையும் கொண்டிருந்தால்தான், விமர்சனங்களை ஏற்க முடியும். இப்படியான ஆளுமையைக் கண்டு நெகிழ்ந்துபோனேன்.

கருணாநிதி மத்திய அரசுடன் பல நேரங்களில் சமரசம் செய்துகொண்டுள்ளார். அந்த விமர்சனத்தை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. ஆனால், வட இந்தியர்களுக்கு ‘தமிழ்நாடு’ என்று சொன்னால், அச்சமூட்டுகிறவராகவும் கருணாநிதி இருந்தார். தமிழ்நாடு இப்போது சிறந்த நிலையில் இருக்கிறதென்றால், அதற்குக் கருணாநிதியின் பங்களிப்பு முக்கியமானது.

- எம்.குணா, அ.சையது அபுதாஹிர், த.கதிரவன், நந்தினி சுப்ரமணி, கே.புவனேஸ்வரி