தூத்துக்குடி மக்களைத் துப்பாக்கிச்சூட்டுக்கு நிகராக இப்போது சிலர் வார்த்தைகளால் வதைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதில் முதலும் முக்கியமுமான இடம், சூப்பர்ஸ்டார் ரஜினிக்குத்தான். ஆறுதல் சொல்லச் சென்றவர் ஆற்றிய பேருரையில்... பாவம், அவரின் ரசிகர்களே ஆடிப்போயிருக்கிறார்கள். ரஜினி ஏன் இப்படிப் பேசுகிறார் எனத் தெரிந்துகொள்ள, அவரின் பர்சனல் அகராதி ப்ளஸ் டைரியை நோண்டினோம். அதில், காணக்கிடைத்த அர்த்தங்கள்:

காவல்துறை: இந்தத் துறையைப் போன்றதொரு புனிதமான துறை உலகில் வேறெதுவும் இல்லை. அதிலிருக்கும் போலீஸ்காரர்கள் அனைவரும் ‘மூன்று முகம்’ படத்தில் வரும் அலெக்ஸ் பாண்டியன் போல நேர்மையானவர்கள். மக்களின் நல்வாழ்வே அவர்களின் ஒரே குறிக்கோள். அகிம்சையை மட்டுமே ஆயுதமாகக்கொண்ட தூய காந்தியவாதிகள் இவர்கள்.

போராட்டம்: சுத்த டைம் வேஸ்ட். அப்படி கால் கடுக்கப் போராடுவதற்கு பதில், ‘பாபா’ படத்தை நான்கு முறை தொடர்ந்து பார்க்கலாம். பொறுமை வளரும். எல்லாப் போராட்டங்களும் அமைதியைக் குலைப்பதற்காக மட்டுமே நடக்கின்றன. ஏலியன்களின் சதிகூட இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சமூக விரோதிகள்: டைம் வேஸ்ட் எனச் சொல்லிவிட்ட போராட்டத்தில் ஈடுபடும் அனைவருமே சமூகவிரோதிகள்தான். பாவம், திருப்பியடிக்கக்கூடத் தெரியாத காவல்துறையைப் போட்டு வெளுப்பது இவர்கள்தான். இவர்கள் கடுமையான தண்டனைக்குரியவர்கள். இவர்களைச் சுட்டுத்தள்ளினால்கூட தப்பில்லை.

மக்கள்: என்ன நடந்தாலும் ரியாக்ட் செய்யாமல் ‘காலா’ டிக்கெட்டை ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிப் படம் பார்க்கவேண்டியவர்கள். போகும் இடங்களிலெல்லாம் ‘தலைவா... தலைவா...’ எனக் கைகாட்டிக் கதறுவது மட்டுமே இவர்களின் வேலை. மிச்சமிருக்கும் நேரத்தில் இவர்கள் ரஜினியின் பழைய காமெடி க்ளிப்பிங்குகளை, அதாவது பேட்டிகளைப் பார்க்கலாம்.

அரசு: என்ன நடந்தாலும் குற்றவுணர்ச்சிக்கு உள்ளாகக்கூடாத நிறுவனம். ராஜினாமா என்ற எண்ணம் தப்பித் தவறி வந்தாலும், டெட்டால் போட்டுக் கழுவிவிட வேண்டும். கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் என எது வேண்டுமானாலும் செய்யலாம். எதிர்த்து யாரும் கேள்வியே கேட்கக்கூடாது!

ஓவியம்: பிரேம் டாவின்ஸி