அ.தி.மு.க., ஜெ. அணி அ.தி.மு.க., எம்.ஜி.ஆர் அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ்... என அரசியலில் மியூசிக்கல் சேர் நடத்திவருபவர் திருநாவுக்கரசர்!

“இன்னும் இரண்டு மாதத்தில், தமிழகக் காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவார்!’’ என்று போகிறபோக்கில், குஷ்பு கொளுத்திப்போட்டுப் போக.... பதிலுக்கு குஷ்பூவை வார்த்தைகளாலேயே வறுத்தெடுத்து வருகிறது திருநாவுக்கரசர் தரப்பு!

கோஷ்டி மோதலில் சட்டையைக் கிழித்துக்கொள்வது சத்தியமூர்த்தி பவனுக்குப் புதிதல்ல என்றாலும், அரசர் அப்செட்டா, அசால்ட்டா என்பதைத் தெரிந்துகொள்வதற்காக நேரில் சந்தித்துப் பேசினேன்...

“குஷ்பூ நடித்த படங்களில் உங்களுக்குப் பிடித்த படம்...?’’

“கமலுடன் அவர் ஜோடியாக நடித்த ‘சிங்காரவேலன்’ ரொம்பப் பிடிக்கும். அடுத்ததாக ரஜினியுடன் நடித்த ‘அண்ணாமலை’ மற்றும் ‘வருஷம் 16’ எனப் பல படங்கள் பிடிக்கும்!’’

“ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆதரவாளராக குஷ்பூ இருப்பதாலேயே கட்சியில் அவர் புறக்கணிக்கப்படுவதாகச் சொல்கிறார்களே...?’’

‘’கட்சியில் யாரையுமே நான் புறக்கணிக்க வில்லையே!’’

“திருநெல்வேலியில் குஷ்பூ வருகையை எதிர்த்து காங்கிரஸ் அலுவலகத்துக்கு சிலர் பூட்டு போட்டார்களே, அது சரிதானா?’’

“அது எனக்குத் தெரியாது. என்னிடம் முறையாகத் தகவல் தெரிவித்துவிட்டுப் போனால், எல்லா மாவட்டங்களிலுமே கட்சியினர் வரவேற்கத் தயாராக இருப்பார்கள். ஏனெனில், சத்தியமூர்த்தி பவன் எல்லோருக்கும் பொதுவானது’’

“மூத்த அரசியல் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவருமாகிய நீங்களே, ‘குஷ்பூவை செருப்பால் அடிப்பேன்’ என்று கூறியதாகச் செய்திகள் வெளிவந்திருக் கின்றனவே...?’’

“அப்படி நான் எந்தவிதப் பேட்டியோ, அறிக்கையோ கொடுக்கவில்லை. கட்சி சார்ந்த ஒரு நிகழ்ச்சியில் நான் பேசிய வார்த்தைகளோடு பேசாத சில வார்த்தைகளையும் சேர்த்துச் செய்தியாக்கிவிட்டார்கள். எல்லாப் பத்திரிகையிலும் கிடையாது... ஒன்றிரண்டு பத்திரிகைகளில் மட்டும் நான் பேசியதை, கூட்டிக் குறைத்துச் செய்தி வெளியிட்டிருக் கிறார்கள். ஆதாரமற்ற இந்தச் செய்திகளை இணையத்திலும் சிலர் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் நான் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் கிடையாது.’’

“ ‘குஷ்பூவை முட்டை, செருப்பால் அடித்து தி.மு.க-விலிருந்து வெளியேற்றினார்கள்’ என்ற தங்களது பேச்சுக்குத் தி.மு.க மறுப்பு தெரிவித்துள்ளதே...?’’

“தி.மு.க-வினர் அவர்கள் நினைப்பதைச் சொல்வதற்கு உரிமை இருக்கிறது. ‘ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்...’ என நான் கேட்க வேண்டியதும் இல்லை... டி.கே.எஸ் இளங்கோவன் அறிக்கைக்கு நான் பதில் சொல்லவேண்டிய அவசியமும் இல்லை. இன்றைக்குக்கூட அறிவாலயத்தில், டி.கே.எஸ் இளங்கோவன் என்னை நேரில் பார்த்தார். இதுகுறித்து அவரும் என்னிடம் எதுவும் கேட்கவில்லை... நானும் அவரிடம் எதுவும் கேட்கவில்லை.’’

“தமிழகத்தில், இரண்டாவது பெரிய கட்சி காங்கிரஸ் என்று எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்?’’

“தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க கட்சிகள்தான் பலமானவையாக இருந்தன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஆட்சியில் இருப்பவர்களில் ஒரு பகுதி, அவர்களுக்கு எதிராக வெளியிலிருந்து இரண்டு மூன்று கோஷ்டிகளாகச் செயல்பட்டு வருபவர்கள் ஒரு பகுதி என அந்தக் கட்சி பிளவுபட்டு நிற்கிறது.

ஆட்சியில் நடைபெறும் தவறுகளாலும், ஆட்சியில் இருப்பவர்களிடையேயான ஒற்றுமையின்மையாலும்

அந்தக் கட்சியின் பலம் - செல்வாக்கு குறைந்திருக்கிறது. எனவே, ஏற்கெனவே பலம் வாய்ந்த கட்சியாக இருக்கும் தி.மு.க-வுக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சிதான் இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கிறது!’’

“டி.டி.வி தினகரன் - திவாகரன் இருவரில் உங்களது ஆதரவு யாருக்கு?’’

“அ.தி.மு.க-வின் எந்த அணியையும் ஆதரிக்க வேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது.’’

“அ.தி.மு.க-வில் டி.டி.வி தினகரன் அணியினருக்கு ஆதரவாக நீங்கள் செயல்படுவதாகச் செய்திகள் வருகின்றனவே...?’’

“தினகரனுக்கு நான் ஆதரவு கொடுக்கிறேன் என்று என் கையெழுத்து போட்ட அறிக்கையோ அல்லது பேட்டியோ வெளியாகியிருக்கிறதா...? ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் தவறு செய்தால், முதலமைச்சரைத்தான் நான் குறை சொல்ல முடியும். இதை ஆட்சிக்கு எதிரான விமர்சனமாகத்தான் பார்க்கவேண்டுமே தவிர... எதிர் கோஷ்டியினருக்கான ஆதரவு என நீங்கள் எடுத்துக்கொண்டால், அதற்கு நான் பொறுப்பல்ல...!”

“ ‘அ.தி.மு.க-வில் இருந்திருந்தால், இந்நேரம் நான் முதல்வராகியிருப்பேன்’ என இப்போது நீங்கள் பேசிவருவது அ.தி.மு.க மீதான உங்களது பாசத்தைத்தானே காட்டுகிறது?’’

“காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரான கிருஷ்ணசாமியே, ‘திருநாவுக்கரசர் இந்நேரம் அ.தி.மு.க-வில் இருந்திருந்தால் முதல்வர் ஆகியிருப்பார்’ என்று கட்சிக் கூட்டத்தில் என்னை வைத்துக்கொண்டே பேசியிருக்கிறார். அவர் சொன்னதைத்தான் இப்போது நானும் சொல்கிறேன். அ.தி.மு.க-வின் மூத்த தலைவராக எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்தேன் என்பது உலகுக்கே தெரியும். இளைஞரணிச் செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர் என இரண்டாவது இடத்திலே இருந்தவன் நான். அந்தவகையில், முதல்வர் ஆகியிருப்பேன் என்று நான் சொல்வதற்குத் தகுதி இருக்கிறது. இவை எல்லாவற்றையும்விட தற்போது ராகுல் தலைமையில், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராகப் பணிபுரிவதையே பெருமையாகக் கருதுகிறேன்.’’

“ஏற்கெனவே பா.ஜ.க-வில் இருந்த நீங்கள் அதே கட்சியில் இப்போதும் தொடர்ந்திருந்தால், என்னவாக இருந்திருப்பீர்கள்?’’

“மத்திய மந்திரியாக இருந்திருப்பேன்!’’

“ ‘அக்னிப் பார்வை’ படத்தில் ஹீரோவாக நடித்து பட்டையைக் கிளப்பிய நீங்கள், அதன் பிறகு சினிமாவில் நடிக்கவில்லையே...?’’

“(சிரிக்கிறார்...) படம் ஓடவில்லை அதனால் நிறுத்திவிட்டேன்.சினிமாவில் நடிக்கத் தெரியவில்லை. எது தெரியுமோ, அதைத்தானே செய்யமுடியும்! நீங்கள் ஏதாவது படம் எடுப்பதாக இருந்தால், வாய்ப்பு கொடுங்கள்... நடிக்கிறேன்”

“ ‘அக்னிப் பார்வை’ படத்தை இப்போது ரீமேக் செய்தால், உங்களுக்கு ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம்?’’

“ரீமேக் பண்ணப்போறதும் இல்லை... நடிக்கப் போவதும் இல்லை... அதனால், ஹீரோயின் தேவையும் இல்லை!’’

“ ‘துளியளவுகூட காங்கிரஸ் உணர்வு இல்லாதவர் திருநாவுக்கரசர்’ என்கிறாரே ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்?’’

“இந்தக் கேள்விக்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை!’’

“ஈ.வி.கே.எஸ் இளங்கோவனிடம் தங்களுக்குப் பிடித்த அம்சம் என்ன...?’’

“அரசியல்ரீதியாக வேண்டுமானால், அவருக்கும் எனக்கும் சில பிரச்னைகள் இருக்கலாமே தவிர.... நீண்டகாலமாகவே எனக்கு அவர் நல்ல நண்பர். காங்கிரஸ் கட்சியின் தலைவராக அவர் இருந்தபோது, பத்திரிகைகளுக்கு சூடாக, சுவையாக அடிக்கடி பேட்டிகள் கொடுத்துத் தீனி போட்டவர் என்றவகையில், அவரை எனக்கும் பிடிக்கும்!’’