Published:Updated:

பிரதமராகும் ஆசை இல்லை; கட்சி பணியாற்றவே விருப்பம்: ப. சிதம்பரம்

பிரதமராகும் ஆசை இல்லை; கட்சி பணியாற்றவே விருப்பம்: ப. சிதம்பரம்
பிரதமராகும் ஆசை இல்லை; கட்சி பணியாற்றவே விருப்பம்: ப. சிதம்பரம்
பிரதமராகும் ஆசை இல்லை; கட்சி பணியாற்றவே விருப்பம்: ப. சிதம்பரம்

புதுடெல்லி: பிரதமராகும் எண்ணம் எதுவும் தமக்கு இல்லை என்றும், கட்சிப் பணியாற்றவே தாம் விரும்புவதாகவும் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ப. சிதம்பரத்திடம், 2014 பொதுத் தேர்தல் முடிந்து நீங்கள் பிரதமரானால், நிதியமைச்சராக யாரை நியமிப்பீர்கள்? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த அவர்," எனக்கு அதுபோன்ற எதிர்பார்ப்பு ஏதும் இல்லை. அந்த ஆசையும் இல்லை. அதுபோன்ற ஆசை வர இன்னும் சில ஆண்டுகள் ஆகும். பயணம் மேற்கொள்வது போன்ற சில ஆசைகள் உள்ளன. அவற்றை முதலில் நிறைவேற்ற வேண்டும்.

##~~##
மேலும், கட்சிப் பணியாற்ற எனக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. கொஞ்ச காலம் கட்சியின் பொதுச் செயலராக இருந்தேன். எனவே, என்னால் கட்சிப் பணியும் ஆற்ற முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். கட்சிப் பணியாற்றுவதையே நான் விரும்புகிறேன். எனவே, பயணம் செய்யவும், எழுதவும், படிக்கவும் கட்சி என்னை அனுமதிக்கும் என்று நினைக்கிறேன்" என்றார்.