Published:Updated:

பாலியல் தொந்தரவுக்கு பெண்களின் பார்வையே காரணம்: மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர்

 பாலியல் தொந்தரவுக்கு பெண்களின் பார்வையே காரணம்: மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர்
பாலியல் தொந்தரவுக்கு பெண்களின் பார்வையே காரணம்: மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர்
 பாலியல் தொந்தரவுக்கு பெண்களின் பார்வையே காரணம்: மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர்

போபால்: பெண்கள் பாலியல் தொந்தரவை எதிர்கொள்வதற்கு, ஆண்களை அவர்கள் தூண்டும் விதமாக பார்ப்பதே காரணம் என்று மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் சத்யதேவ் கட்டாரே கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் பிந்த் என்ற பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர்,"ஆண்களை தூண்டும்விதமாக பெண்கள் பார்க்காதவரை எந்த ஒரு ஆணும் பாலியல் தொந்தரவில் ஈடுபடுவதில்லை" என்று கூறினார்.

அவர் இவ்வாறு பேசும் போது அதே மேடையில், அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் அஜய் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் காந்திலால் இதனை கேட்டுக்கொண்டு இருந்துள்ளனர். காங்கிரஸ் கட்சி 10 வருடங்களுக்கு முன்பே மாநிலத்தில் ஆட்சியை இழந்தது. தற்போது பா.ஜனதா கட்சியின் ஆட்சி கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஜாபல்பூரில் 4 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு காத்தாரி பேசியுள்ளார்.

##~~##
இதனிடையே சத்யதேவின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில பா.ஜனதா பேச்சாளரும், எம்.எல்.ஏ.வுமான விஸ்வாஸ் சரங்,காங்கிரஸ் கட்சியின் தலைவரே ஒரு பெண்ணாக இருக்கும் நிலையிலும், பெண்களை இழிவுபடுத்தும்விதமாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் இவ்வாறு பேசியிருப்பது கண்டனத்திற்கு உரியது என்றும், இது டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு பின்னரான காங்கிரஸ் தலைவர்களின் எண்ணவோட்டத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது என்றும் கூறினார்.