Published:Updated:

என்னுடைய உத்தரவு இன்றி போலீசாரால் உட்கார கூட முடியாது: உ.பி. அமைச்சர்

என்னுடைய உத்தரவு இன்றி போலீசாரால் உட்கார கூட முடியாது: உ.பி. அமைச்சர்
என்னுடைய உத்தரவு இன்றி போலீசாரால் உட்கார கூட முடியாது: உ.பி. அமைச்சர்
என்னுடைய உத்தரவு இன்றி போலீசாரால் உட்கார கூட முடியாது: உ.பி. அமைச்சர்

லக்னோ: தன்னுடைய உத்தரவின்றி போலீசாரல் உட்கார கூட முடியாது என்று உத்தரப்பிரதேச மாநில ஜவுளித்துறை அமைச்சர் ஷிவ்குமார் பெரியா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர்,"என்னுடைய உத்தரவு இன்றி போலீஸ் ஒன்றும் செய்ய முடியாது; அவ்வளவு ஏன் நான் உத்தரவிடும் வரை எந்த ஒரு போலீசாரலும் உட்கார கூட முடியாது. யாராவது எனது உத்தரவை மீறினால் அவர் 24 மணி நேரங்களில் மாற்றப்படுவார். நான் தான் அரசு. யாரும் என்னிடம் எதுவும் கேட்க முடியாது. எந்த ஒரு போலீசாவது என்னுடைய பேச்சை கேட்கவில்லை என்றால் அதனை அடுத்து அங்கு அவர் இருக்க முடியாது.இதை வேண்டுமானால் என்னுடைய தொகுதிக்கு வந்து சோதித்து பார்த்துக்கொள்ளலாம்" என்றார்.

##~~##
இதற்கிடையே மாநிலத்தின் மற்றொரு அமைச்சரான ராம் மூர்த்தி வர்மா, "மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கிரிமினல் குற்றங்களை தடுக்க முடியாது. கிரிமினல் குற்றங்கள் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது...இனியும் நடைபெறும். எந்த அரசாலும் குற்றங்களை தடுக்க முடியாது" என்று கூறியுள்ளார்.
அமைச்சர்களின் இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்தால் முதலமைச்சர் அகிலேஷ் யாதவுக்கும், ஆளும் சமாஜ்வாதி கட்சிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சியான பகுஜன சமாஜ் கூறி வரும் நிலையில், அமைச்சர்களின் இந்த குண்டர் ராஜ்ஜியம் போன்ற பேச்சுக்கள் அரசுக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.