Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

ப.பாலா என்ற பால சுப்பிரமணி, பாகாநத்தம்.

ஒரு காலத்தில் பலரும் திவாகரனிடம் கெஞ்சிக் கூத்தாடி காலில் விழுந்து வணங்கி பதவிகளை வாங்கினார்கள். இப்போது திவாகரனே அவர்களிடம் போய் சரணடைந்து விட்டாரே?


அதிகாரம் யாரிடம் இருக்கிறதோ, அவர்களை நோக்கித்தான் சரணாகதிகள் இருக்கும்.

கழுகார் பதில்கள்!

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

முன்னாள் முதல்வரான கருணாநிதியின் 95-வது பிறந்த நாளுக்கு, இந்நாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கூறினாரா?


தன்னை முதலமைச்சர் ஆக்கிய சசிகலாவிடம், அவரின் கணவர் நடராசன் மறைவுக்கு துக்கம் விசாரிக்காதவர் எடப்பாடி பழனிசாமி. எதிரியான கருணாநிதியின் பிறந்தநாளுக்கா வாழ்த்துச் சொல்வார்? இந்த இங்கிதத்தை வடக்கிலிருந்து நம் தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

அ.குணசேகரன், புவனகிரி.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு யார் அனுமதி கொடுத்தது என்ற சர்ச்சை தொடர்கிறதே?


உண்மை என்பது ஒன்றே ஒன்றாகத்தான் இருக்க முடியும். அதை மறைக்க நினைக்கும்போதுதான் பல பொய்கள் பிறக்கும். அப்படித்தான் இதில் சர்ச்சைகளும் பிறக்கின்றன. மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்.பி., தமிழகக் காவல்துறையின் டி.ஜி.பி ஆகிய மூவரையும் காப்பாற்றுவதற்காக மூன்று துணை தாசில்தார்களைப் பலியிடுவதை அரசு ஊழியர் சங்கங்கள் ஏற்காமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கில், இந்த மூன்று துணை தாசில்தார்களையும் இணைத்திருக்கிறது நீதிமன்றம். விசாரணை நடக்கும்போது, உண்மை நிச்சயம் வெளியில் வரும்.

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

‘எஸ்.வி.சேகரைக் கைது செய்யத் தடையில்லை’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. எடப்பாடி பழனிசாமி அரசு என்ன செய்யப் போகிறது?


எஸ்.வி.சேகர், டெல்லியின் ஆசிர்வாதம் பெற்றவர். டெல்லி ஆட்சியை இங்கு செயல்படுத்திக் கொண்டிருக்கும் அரசு அதிகாரியின் உறவினர் அவர். எனவே, எஸ்.வி.சேகரைக் கைது செய்யும் துணிச்சல் எடப்பாடிக்கு வராது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

படித்து, பட்டம்பெற்று, தனது திறமையால், தனித்தன்மையால் முன்னேறிய பெண்கள் அனைவரையும் ‘உடலை மூலதனமாக்கி முன்னேறியவர்கள்’ என்று ஒற்றை வரியால் கொச்சைப்படுத்திவிட்டு, ஒரு மனிதன் தலைநிமிர்ந்து வாழமுடியும் என்றால், இதுபோன்ற கேவலமான நிலைமைகள் இனி நிறைய நடக்கும்.

கழுகார் பதில்கள்!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

‘‘எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் தமிழகம் சுடுகாடு ஆகிவிடும்’’ என்ற ரஜினியின் பேச்சுக்கான பதில்?


‘காலா’ படத்தில் இருக்கிறது.

ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி.

‘‘மாதிரி சட்டசபை நடத்திய தி.மு.க எம்.எல்.ஏ-க்களை, அவர்களைத் தேர்ந்தெடுத்த தொகுதி மக்கள் மன்னிக்க மாட்டார்கள்’’ என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்லியிருக்கிறாரே?


தொகுதி மக்கள் மன்னிக்கிறார்களா, மன்னிக்கவில்லையா என்பது வேறு விஷயம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது குரலை சட்டமன்றத்தில்தான் எதிரொலிக்க வேண்டும். அ.தி.மு.க மீதான கோபத்தை சட்டமன்ற அமைப்பின்மீது காட்டக் கூடாது.

கழுகார் பதில்கள்!

மா.நிஷாராணி, திண்டுக்கல்.

ஒரு துறையில் ஊழல் நடக்கிறதென்றால், அதற்கு மூல காரணம் யார்?


எங்காவது ஊழல் நடக்கிறதென்றால், அந்தத் துறை தவறான மனிதர்களின் கையில் இருக்கிறது என்று அர்த்தம். அவர்கள்தான் அதற்கு மூல காரணம்.

திராதி, துடியலூர்.

‘போராட்ட வடிவம், வன்முறையை நோக்கி நகர்கிறது’ என்கிறாரே ஆளும் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன்?


எந்தப் போராட்டமாக இருந்தாலும், வன்முறை அவர்களின் நோக்கமாக இருப்பதில்லை. உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேரணி என எல்லாப் போராட்ட வடிவங்களும் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டவைதான். அனுமதி பெற்றுத்தானே அவர்கள் போராடுகிறார்கள்! இப்படிப் போராடும் எளிய மனிதர்களுடன், உரிய காலத்தில் அதிகாரம் பொருந்தியவர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். எந்தக் கோரிக்கையுடன் யார் வீதியில் இறங்கினாலும், போலீஸை வைத்து அவர்களை மிரட்டி ஒடுக்கிவிடலாம் என அரசு நினைப்பதால்தான் சிக்கலே எழுகிறது. ஆதங்கத்துடன் போராட வரும் மக்களை அடிக்கும்போது, அவர்களின் கோபம் வன்முறையாக மாறிவிடக்கூடும். அதனைத் தவிர்க்கவும் தடுக்கவும் வேண்டிய முன்யோசனை அரசுக்கு இருக்கவேண்டும்.

கழுகார் பதில்கள்!

சம்பத்குமாரி, பொன்மலை.

‘சீதையை ராமர் கடத்திச்சென்றார்’ என்று குஜராத் மாநிலத்தின் 12-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் வெளியாகியிருக்கிறதே?


ஆமாம். இதுதான் இப்போது குஜராத் மாநிலத்தில் சர்ச்சையாகியுள்ளது. குஜராத்தி மொழி பாடப்புத்தகத்தில் சரியாக இருந்தது. சம்ஸ்கிருத பாடப்புத்தகத்துக்கு மொழிபெயர்த்தபோது ஏற்பட்ட தவறு என்று அதற்கு விளக்கம் சொல்லியிருக்கிறது குஜராத் அரசு. இப்படி கேரளாவிலோ மேற்கு வங்காளத்திலோ நடந்திருந்தால், நாட்டை அதிர வைத்திருப்பார்கள். நல்லவேளையாக குஜராத் மாநிலத்தில் நடந்துள்ளது.

இப்படியெல்லாம் நடக்கும் என்று நம் முன்னோர்களுக்குத் தெரிந்துள்ளது, அதனால்தான், ‘விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பன் என்றானாம்’ என்று அனுபவ மொழியை எழுதி வைத்திருக்கிறார்கள்.

கே.சிவகுமார், சென்னை-33.

சமீபத்தில் கழுகாரை அதிரவைத்த புள்ளிவிவரம்?


கடந்த ஆண்டு இந்தியா முழுக்க ரயில்களில் கடத்தல்காரர்களிடமிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 11 ஆயிரம். சராசரியாக ஒவ்வொரு நாளும் 25 குழந்தைகள் மீட்கப் பட்டிருக்கிறார்கள். குழந்தைக் கடத்தலில் ஈடுபடும் கொடூர மனிதர்கள், பெரும்பாலும் ரயில் பயணத்தையே தேர்வு செய்கிறார்கள். வேலை வாங்கித் தருவதாகவும், வளமான வாழ்வு தருவதாகவும் ஆசைகாட்டி, குழந்தைகளைக் கூட்டிவந்து யாரிடமாவது அடிமைகளாக விற்றுவிடுவது இப்போதும் தொடர்கிறது. மீட்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இது என்றால், மீட்கப்படாமல் எங்கோ சித்ரவதைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் குழந்தைகள் எத்தனை பேர்? நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது.

கழுகார் பதில்கள்!

எம்.வினாயகம், விழுப்புரம்.

‘நிர்ப்பந்தத்தால் ஏற்பட்ட கூட்டணி’ என எதைச் சொல்வீர்கள்?


மகாராஷ்டிராவில் பி.ஜே.பி-க்கும் சிவசேனாவுக்கும் இடையே இருக்கும் கூட்டணியைச் சொல்லலாம். அந்த மாநிலத்தை இந்தக் கூட்டணிதான் ஆள்கிறது. ஆனால், மத்தியில் ஆளும் கூட்டணி அரசிலிருந்து சிவசேனா வெளியேறிவிட்டது. மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல்களில் இரண்டு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டன. சமீபத்தில் அங்கு நடந்த இடைத்தேர்தல்களில்கூட இரண்டு கட்சிகளும் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டன. இதில் தங்களிடம் பாரம்பர்யமாக இருந்த பால்கர் நாடாளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி-யிடம் தோற்றதும், ‘எங்களின் மிகப்பெரிய அரசியல் எதிரி பி.ஜே.பி-தான்’ என அறிவித்தது சிவசேனா.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக, இப்போது முதலே கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசிவருகிறார், பி.ஜே.பி-யின் தேசியத் தலைவர் அமித் ஷா. மும்பையில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை அமித் ஷா சந்தித்துப் பேசியபிறகு, ‘நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யும் சிவசேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும்’ என ஒரு தகவல் பரவியது. ஆனால், இதுகுறித்து வெளிப்படையான அறிவிப்பு எதுவும் அப்போது செய்யப்படவில்லை.

இந்தச் சந்திப்பு முடிந்த சில மணி நேரங்களில், ‘‘சிவசேனா தனித்துப் போட்டியிடும்’’ என அந்தக் கட்சியின் எம்.பி சஞ்சய் ராவத் சொன்னார். உடனே மகாராஷ்டிர பி.ஜே.பி தலைவர்களில் ஒருவரான நாராயண் ரானே, ‘‘தைரியம் இருந்தால், மகாராஷ்டிர கூட்டணி அரசிலிருந்து விலகிப் பாருங்கள்’’ என சிவசேனாவுக்கு சவால் விடுகிறார். மகாராஷ்டிர பத்திரிகைகளில் பரபரப்புகளுக்குப் பஞ்சமில்லை!

 கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 
 757, அண்ணா சாலை,  சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism