Published:Updated:

‘ஸ்லீப்பிங் செல்’ உறுப்பினர்கள்... ஸ்கோர் செய்த தினகரன்... கெஞ்சும் கொறடா! - சட்டமன்ற சுவாரஸ்யங்கள்

‘ஸ்லீப்பிங் செல்’ உறுப்பினர்கள்... ஸ்கோர் செய்த தினகரன்... கெஞ்சும் கொறடா! - சட்டமன்ற சுவாரஸ்யங்கள்
பிரீமியம் ஸ்டோரி

மாண்புக்கும் மதிப்புக்கும் பெயர் பெற்றது தமிழக சட்டமன்றம். இப்போது பட்ஜெட் மானியக் கோரிக்கைக்காக நடைபெறும் கூட்டத்தொடரில் நிகழ்ந்த சுவாரஸ்யங்களின் தொகுப்பு இது...

• சட்டமன்றத்தில் தன் இருக்கையில் சபாநாயகர் அமர்ந்திருக்கும்போது, அவரது இருக்கைக்கு நேராக எதிர்கொண்டு யாரும் நடந்துவரக்கூடாது என்பது மரபு. எதிர் வரிசைக்குச் செல்ல வேண்டுமென்றாலும் சுற்றிக்கொண்டுதான் செல்ல வேண்டும். இப்போது, இருக்கையில் சபாநாயகர் அமர்ந்திருக்கும்போதே குறுக்கும் நெடுக்குமாக உறுப்பினர்கள் உலவி வருகிறார்கள். அவை மரபைச் சொல்லிப் பலமுறை எச்சரித்தாலும், ஆளும் கட்சியினர், எதிர்க் கட்சியினர் என யாருமே அதைக் கண்டுகொள்வதில்லை.

• முன்பெல்லாம் சட்டமன்றம் நடைபெறும் நாள்களில், சட்டமன்ற நூலகத்தில் இரவிலும் கூட விளக்குகள் எரிந்துகொண்டிருக்கும். விவாதங்களுக்கான குறிப்புகள் எடுக்க வேண்டும் எனப் பல உறுப்பினர்களும் அந்த அளவுக்கு நூலகத்தைப் பயன்படுத்திவந்தார்கள். இப்போது, ஒருசிலரைத் தவிர வேறு எந்த உறுப்பினரும் நூலகம் பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘ஸ்லீப்பிங் செல்’ உறுப்பினர்கள்... ஸ்கோர் செய்த தினகரன்... கெஞ்சும் கொறடா! - சட்டமன்ற சுவாரஸ்யங்கள்

• சட்டமன்ற உறுப்பினர்களின் பொது நடைமுறைகள் பற்றி விளக்குகிறது சட்டமன்றப் பேரவை விதியின் 14-வது அத்தியாயம். சட்டமன்றத்தின் அலுவல் மொழி தொடங்கி வாக்கெடுப்பு முறை வரை, அத்தனை விஷயங்களையும் விதிகளாக இந்த அத்தியாயத்தில் வகுத்துள்ளனர். இப்போது, அவையில் உள்ள உறுப்பினர்களுக்கு அத்தியாயம் 14 குறித்து தனி வகுப்பு எடுக்க வேண்டிய நிலைதான் உள்ளது. மானியக்கோரிக்கை வாக்கெடுப்புக்கு விடப்படும் போது, அன்று அவைக்கு வந்திருக்கும் அனைத்து அமைச்சர்களும் உறுப்பினர்களும் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால்,  இப்போது மானியக்கோரிக்கை வாக்கெடுப்புக்கு விடப்படும் நேரத்தில், பெரும்பாலான உறுப்பினர்கள் அவைக்குள் இருப்பதே இல்லை.

கைத்தறி மானியக்கோரிக்கையின்போது, 50-க்கும் குறைவான உறுப்பினர்களே அவைக்குள் இருந்தனர். அரசு கொறடாவான தாமரை ராஜேந்திரன் அவையில் உள்ள நேரத்தைவிட, அவைக்கு வெளியே லாபியிலும் கேன்டீனிலும் நிற்கும் ஆளும்கட்சி உறுப்பினர்களைச் சபைக்குள் வருமாறு கெஞ்சும் நேரம்தான் அதிகம்.

• மானியக்கோரிக்கை விவாதம் ஒன்றில் எதிர்க்கட்சியினரின் கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் ஜெயக் குமார் எழுந்து தொடர்பில்லாத பதிலைச் சொல்ல முயன்றார். அவரை, ‘அமருங்கள்’ என்று சபாநாயகர் சொல்லிவிட்டார். அதனால், ஜெயக்குமார் அப்செட்டாகி அமர்ந்து விட்டார்.

• மானியக்கோரிக்கை யின்போது குறிப்பிட்ட துறையின் சார்பில் உணவு ஏற்பாடு செய்யப்படும். இந்த மதிய உணவை, தி.மு.க-வினர் உண்ணமாட்டார்கள். தனியாக உணவு ஏற்பாடு செய்து கொள்வார்கள். இந்த முறை துறை சார்பில் ஏற்பாடு செய்யப்படும் உணவையே பெரும்பாலான தி.மு.க உறுப்பினர்கள் சாப்பிடுகிறார்கள். அந்த அளவுக்கு அவைக்குள் இரண்டு கட்சிகளுக்குள்ளும் நெருக்கம்.

• கோவையில் கள்ள நோட்டு வழக்கில் கைதான ஆனந்த் என்பவர், எடப்பாடி பழனிசாமியுடன் இருக்கும் புகைப்படம் மீடியாக்களில் வந்தது. அதனை சபைக்குள் காட்டி பிரச்னையைக் கிளப்ப தி.மு.க. எம்.எல்.ஏ-வான ஜெ.அன்பழகன் முயற்சி செய்தார். ஆனால், அதனை தி.மு.க சீனியர் ஒருவரே வேண்டாம் என்று தடுத்துவிட்டாராம்.

‘ஸ்லீப்பிங் செல்’ உறுப்பினர்கள்... ஸ்கோர் செய்த தினகரன்... கெஞ்சும் கொறடா! - சட்டமன்ற சுவாரஸ்யங்கள்

• டி.டி.வி.தினகரன் அவைக்கு வந்த முதல் மூன்று நாள்களில் நன்றாக ஸ்கோர் செய்தார். ஆனால், ஜீரோ நேரத்தில் டாஸ்மாக் கடைகள் மூடுவது குறித்து அவர் எழுப்பிய கேள்விக்கு, ஆளும்கட்சித் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. ஆளும்கட்சி உறுப்பினர்கள் பலர் அவரை நோக்கி ஒருமையில் கத்தியதால், அப்செட்டாகிவிட்டார் தினகரன். பிறகு, கடந்த வாரம் அவர் அவைக்கே வரவில்லை.

• ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவையில் அவரிடம் வந்து, குனிந்து பவ்யமாகக் கோரிக்கை மனுக்களை உறுப்பினர்கள் கொடுப்பார்கள். இப்போது, யாரும் குனிய வேண்டிய அவசியம் இல்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பின்னால் நின்று, அவர் முதுகைத் தட்டி அழைத்து மனுவை நீட்டுகிறார்கள்.

• அவையில் அ.தி.மு.க உறுப்பினர்கள் யாராவது தி.மு.க-வை கடுமையாக விமர்சித்தால் அமைச்சர்கள் தரப்பிலிருந்தே சைகை செய்து அதைத் தடுக்கிறார்கள். ‘‘அவர்கள் வெளிநடப்பு செய்துவிடுவார்கள். ரொம்ப அட்டாக் செய்ய வேண்டாம்’’ என்று அமைச்சர்கள் அறிவுரை சொல்கிறார்கள்.

• கதர்த்துறை அமைச்சர் பாஸ்கரன், கடந்த ஆண்டு மானியக்கோரிக்கையின்போது, மானிய புத்தகத்தையே மாற்றிப் படிக்க முயன்றார். அவர், இந்த முறை மானியக்கோரிக்கை முடிந்து சாதி புகழ் பாடி கோரிக்கை வைக்க முயற்சி செய்தார். அருகிலிருந்த அமைச்சர்கள் அவரை அழுத்தி உட்கார வைத்தார்கள். ‘இப்படிக் கோரிக்கை வைத்தால் அமைச்சர் பதவிக்கே வேட்டு வைத்துவிடுவார்கள்’ என மூத்த அமைச்சர்கள் விளக்கியுள்ளார்கள்.

• தற்போது சட்டசபையில் இரண்டு ‘ஸ்லீப்பர் செல்’கள் இருப்பதாக கமென்ட் அடிக்கிறார்கள் பல எம்.எல்.ஏ-க்கள். ஒருவர் முன்னாள் அமைச்சர், மற்றொருவர் இந்நாள் அமைச்சர். இருவரும் அவைக்குள் வந்ததும் ‘ஸ்லீப்பிங் மோடு’க்குப் போய்விடுகிறார்கள். அந்த முன்னாள் அமைச்சரின் அருகில் இருப்பவர்கள், அவரின் நித்திரை கலைந்துவிடும் என்பதால் மேஜையைக்கூட சத்தமாகத் தட்டுவது கிடையாதாம்.

- அ.சையது அபுதாஹிர்
படங்கள்: வி.ஸ்ரீனிவாசுலு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism