Published:Updated:

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!
பிரீமியம் ஸ்டோரி
கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

Published:Updated:
கம்பேரிஸன் கோவாலு!
பிரீமியம் ஸ்டோரி
கம்பேரிஸன் கோவாலு!

சென்ற ஆண்டு வரை சச்சின், தோனி போன்ற விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையைப் படமாக எடுப்பதுதான் ட்ரெண்ட். இப்போது, தலைப்புச் செய்திகளில் அடிபடுபவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கும் ட்ரெண்ட் வந்துவிட்டது. சஞ்சய் தத், மோடி எனப் போகும் இந்தப் பட்டியலில், இன்னும் சில பெயர்கள் சீக்கிரமே சேரலாம். சேரலைன்னா என்ன, நாம சேர்ப்போம்!

கம்பேரிஸன் கோவாலு!

பாபா ராம்தேவ்

சாமியார்கள் பற்றிய படங்களைப் பார்க்க தனிக்கூட்டம் உண்டு. எனவே, சிறியதாக யோகா பயிற்சிகளைத் தொடங்கிய ராமகிருஷ்ணா, இன்று சிம்கார்டுகள் விற்கும் ராம்தேவ் பாபாவாக உருவான கதையைப் பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கலாம். தயாரிப்புச் செலவை அவரே பார்த்துக்கொள்வார். ஆருயிர் நண்பர் மோடியை ஓபனிங் ஷோவுக்கு அழைத்துவந்தால், புரொமோஷன் செலவுகளும் மிச்சம்.

 ரஜினி

ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை சினிமா உலகம், அரசியல் உலகம் என இரண்டு பாகங்களாக எடுக்கலாம். நாற்பது ஆண்டுகால சினிமா வாழ்க்கையைவிட, நான்கு மாத அரசியல்வாதி வாழ்க்கையில் கன்டென்ட் அதிகம் என்பதால் இந்த யோசனை. பார்ட் ஒன்றை யார் வேண்டுமானாலும் இயக்கட்டும். பார்ட் இரண்டை அவரை நிஜத்தில் இயக்கும் குருமூர்த்தியே இயக்கினால் சூப்பராக இருக்கும்.

 ஹெச்.ராஜா

மத்தியில் ஆளும் கட்சியின் தேசியச் செயலாளர். கேட்க, `பாட்ஷா... மாணிக் பாட்ஷா’ என மாஸாகத்தான் இருக்கிறது. ஆனால், ரியாலிட்டியோ `குருசாமி... கும்பிடு குருசாமி’ ரேஞ்சுதான். இந்தச் சோகக் கதையையே காமெடி ஆக்‌ஷன் மன்னிப்பு த்ரில்லராக எடுக்கலாம். அவரின் அட்மின் இயக்குவார். செலவோடு செலவாக பி.ஜே.பி-யே தயாரிக்கவேண்டியதுதான்.

 நாஞ்சில் சம்பத்

முதலில் தி.மு.க., அதன் பிறகு ம.தி.மு.க., அங்கிருந்து அ.தி.மு.க., அங்கிருந்து வெளியே வந்து திரும்பவும் அ.தி.மு.க., அதன் பிறகு தினகரன் அணி எனப் பயணப்பட்டுப் பயணப்பட்டு இப்போது மேற்கொண்டு வேறு கட்சிகள் இல்லாததால், அரசியலிலிருந்தே ஓய்வுபெற்றுவிட்டார். அவரின் அரசியல் பயணத்தை அவரே பே.........சி நடிக்கும் சினிமாவாக எடுக்கலாம்.

ஓவியம்: பிரேம் டாவின்ஸி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism