Published:Updated:

ராஜ்யசபா சீட் தியாகம்... சிக்கலில் கேரள காங்கிரஸ்!

ராஜ்யசபா சீட் தியாகம்... சிக்கலில் கேரள காங்கிரஸ்!
பிரீமியம் ஸ்டோரி
ராஜ்யசபா சீட் தியாகம்... சிக்கலில் கேரள காங்கிரஸ்!

ராஜ்யசபா சீட் தியாகம்... சிக்கலில் கேரள காங்கிரஸ்!

ராஜ்யசபா சீட் தியாகம்... சிக்கலில் கேரள காங்கிரஸ்!

ராஜ்யசபா சீட் தியாகம்... சிக்கலில் கேரள காங்கிரஸ்!

Published:Updated:
ராஜ்யசபா சீட் தியாகம்... சிக்கலில் கேரள காங்கிரஸ்!
பிரீமியம் ஸ்டோரி
ராஜ்யசபா சீட் தியாகம்... சிக்கலில் கேரள காங்கிரஸ்!

கேரளாவில் மூன்று ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவடைவதால், புதிய உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 21-ம் தேதி நடக்கிறது.

ஆளும் இடது முன்னணிக்கு இரண்டு எம்.பி-க்கள் கிடைத்துவிடுவார்கள். எதிர்க்கட்சியான காங்கிரஸால் ஓர் இடத்தில் வேட்பாளரை நிறுத்தி ஜெயிக்கவைக்க முடியும். காங்கிரஸ் எம்.பி-யும், ராஜ்யசபா துணைத் தலைவருமான பி.ஜே.குரியன், பதவிக்காலம் முடியும் மூவரில் ஒருவர். ‘‘இதுவரை மூன்று முறை எம்.பி-யாக இருந்த அவருக்கு மீண்டும் வாய்ப்பு தரக்கூடாது. புதியவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்’’ என்று காங்கிரஸில் குரல்கள் ஒலித்தன.

ஆனால், தங்கள் கூட்டணியில் மீண்டும் சேரவிருக்கும் காங்கிரஸ்-எம் கட்சிக்கு இந்த ஒரு சீட்டை காங்கிரஸ் தலைமை தியாகம் செய்துள்ளது. இதனால், கேரள காங்கிரஸுக்குள் பூகம்பம். காங்கிரஸ் தலைவர்களின் கொடும்பாவி எரிப்பு, படங்களுக்கு அஞ்சலி செலுத்துதல் எனத் தொண்டர்கள் எதிர்ப்புகளைத் தெரிவிக்கிறார்கள்.

ராஜ்யசபா சீட் தியாகம்... சிக்கலில் கேரள காங்கிரஸ்!

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தது, காங்கிரஸ்-எம் கட்சி. கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நிதித்துறை அமைச்சராக இருந்த காங்கிரஸ்-எம் கட்சியின் தலைவர் கே.எம்.மாணி, மதுபானக் கடை ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து ராஜினாமா செய்தார். பிறகு காங்கிரஸ் கூட்டணியைவிட்டு வெளியேறியவர், இடதுசாரிக் கூட்டணியுடன் நெருங்கினார். இன்னொருபக்கம் பி.ஜே.பி தலைவர்களுடனும் ரகசியமாகப் பேசிக்கொண்டிருந்தார். அவரைத் திரும்பவும் தங்கள் கூட்டணிக்கு இழுக்கவே ராஜ்யசபா சீட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ-வான வி.டி.பல்ராம், “காங்கிரஸ் கூட்டணியில் சேரும்முன்பே ராஜ்யசபா சீட் கொடுத்துள்ளனர். இது தொண்டர்களை வஞ்சிக்கும் செயல்” என்று கோபப்பட்டிருக்கிறார். எம்.எல்.ஏ-வான ஷாபி பறம்பில், “புதுமுகத்துக்கு சீட் வழங்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால், கட்சியில் இல்லாத புதுமுகத்துக்கு சீட் கொடுத்துவிட்டனர்” என்று காங்கிரஸ் தலைமையைக் கிண்டலடித்திருக்கிறார். கேரள காங்கிரஸ் முன்னாள் தலைவர் வி.எம்.சுதீரன், “இதன்மூலம் பி.ஜே.பி பலப்படுவதுடன், காங்கிரஸ் தொலைந்துபோகும்” எனக் காட்டமாகக் கூறியிருக்கிறார்.

“ராஜ்யசபா சீட் கொடுத்ததால், கூட்டணிக் கட்சியை நாம் தக்கவைத்துள்ளோம். விட்டுக்கொடுப்பதில் தவறில்லை” என நியாயப்படுத்துகிறார்கள் உம்மன்சாண்டி, ரமேஷ் சென்னிதலா, மாநிலத் தலைவர் எம்.எம்.ஹசன் ஆகியோர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணியோ, மார்க்சிஸ்ட் தலைமையிலான எல்.டி.எஃப். கூட்டணியோதான் மாறி மாறி ஆட்சியைப் பிடிப்பது வழக்கம். முஸ்லீம் லீக், கேரள காங்கிரஸ்-எம், கேரள காங்கிரஸ்-ஜெ, கேரள காங்கிரஸ்-பி, ஜெ.எஸ்.எஸ்., சி.எம்.பி., ஐக்கிய ஜனதாதளம் என வலுவாகத்தான் இருந்தது காங்கிரஸ் கூட்டணி. ஒவ்வொரு கட்சியாகப் பிரிந்து சென்றுவிட்ட நிலையில், முஸ்லீம் லீக் மட்டுமே காங்கிரஸ் கூட்டணியில் நீடித்தது. செங்கனூர் இடைத்தேர்தலில் வலுசேர்க்க காங்கிரஸ்-எம் கட்சியை மீண்டும் கூட்டணியில் இணைக்க முயற்சி எடுக்கப்பட்டது. முஸ்லீம் லீக் தலைவர் குஞ்ஞாலிக்குட்டி ஏற்பாட்டில், காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் கே.எம்.மாணியைச் சந்தித்தனர். கூட்டணியில் சேரவேண்டுமானால், ராஜ்யசபா சீட் தரவேண்டும் என்பதுபோன்ற நிபந்தனைகளை மாணி முன்வைத்தார். அதற்கு காங்கிரஸ் தலைவர்கள் சம்மதம் தெரிவித்ததால், மாணியின் மகன் ஜோஸ் கே.மாணிக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பம் அக்கட்சியை வீழ்ச்சியை நோக்கியே நகர்த்தும்” என்கிறார்கள் கேரள அரசியல் நோக்கர்கள்.

- ஆர்.சிந்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism