Published:Updated:

“அமைதியாக இருக்கத்தான் மக்கள் விரும்புகிறார்கள். ஆனால்...”

“அமைதியாக இருக்கத்தான் மக்கள் விரும்புகிறார்கள். ஆனால்...”
பிரீமியம் ஸ்டோரி
“அமைதியாக இருக்கத்தான் மக்கள் விரும்புகிறார்கள். ஆனால்...”

“அமைதியாக இருக்கத்தான் மக்கள் விரும்புகிறார்கள். ஆனால்...”

“அமைதியாக இருக்கத்தான் மக்கள் விரும்புகிறார்கள். ஆனால்...”

“அமைதியாக இருக்கத்தான் மக்கள் விரும்புகிறார்கள். ஆனால்...”

Published:Updated:
“அமைதியாக இருக்கத்தான் மக்கள் விரும்புகிறார்கள். ஆனால்...”
பிரீமியம் ஸ்டோரி
“அமைதியாக இருக்கத்தான் மக்கள் விரும்புகிறார்கள். ஆனால்...”

‘தொடர் போராட்டங்கள், அடிப்படை உரிமைகளுக்காகவா... அரசியல் காரணங்களாலா?’ என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி ஒன்று ஜூன் 8-ம் தேதி கோவையில் தனியார் கல்லூரி ஒன்றின் அரங்கில் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்டது. ‘அரசியல் காரணங்களுக்காகத்தான் போராட்டங்கள் நடக்கின்றன’ என்று பி.ஜே.பி மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான செம்மலை, த.மா.கா-வின் மூத்த தலைவர் ஞானதேசிகன், இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் ஆகியோரும், ‘அடிப்படை உரிமைகளுக்காகவே போராட்டங்கள் நடக்கின்றன’ என்று தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்        கே.பாலகிருஷ்ணன், கொங்கு நாடு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, திரைப்பட இயக்குநர் அமீர் ஆகியோர் பேச வந்திருந்தனர். பார்வையாளர்கள் பெருமளவில் திரண்டனர். நிகழ்ச்சியை நெறியாள்கை செய்தார் கார்த்திகைச்செல்வன். இந்த நிகழ்ச்சி ஒளிப்பதிவு மட்டுமே செய்யப்பட்டது. நேரடி ஒளிபரப்பு அல்ல.

“அமைதியாக இருக்கத்தான் மக்கள் விரும்புகிறார்கள். ஆனால்...”

முதல் சுற்றில் பேசிய தனியரசு, “அரசின் கவனத்தை ஈர்க்கவே போராட்டங்கள் நடக்கின்றன. அதை எப்படி வன்முறை என்று சொல்ல முடியும்...’’ என்றார். அவர், 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிட்டபோது, தமிழிசை எதிர்ப்புத் தெரிவித்தார். அரங்கத்தில் இருந்த பி.ஜே.பி தொண்டர் களும் தமிழிசைக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினர். தனியரசுக்கு ஆதரவாக அவரின் கட்சித் தொண்டர்கள் குரல் எழுப்பினர். இரு தரப்பையும் சமாதானப் படுத்திய கார்த்திகைச்செல்வன், ‘‘தொலைக் காட்சியில் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும்போது, சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இடம்பெறாது” என்று அறிவித்துவிட்டு, அமீரைப் பேச அழைத்தார்.

‘‘அமைதியாக இருக்கத்தான் மக்கள் விரும்புகிறார்கள். ஆனால், ஆட்சியாளர்கள் விடுவதில்லை’’ என்று அமீர் பேசியபோது, அவரது பேச்சுக்கு பி.ஜே.பி-யினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களைப் அமைதிப் படுத்திய கார்த்திகைச்செல்வன், ‘‘அமீருக்குப் பதில் தர தமிழிசை இருக்கிறார்’’ என்றார். தொடர்ந்து பேசிய அமீர், ‘‘கோவையில் சில வருடங்களுக்கு முன்பு ஒருவர் கொல்லப்பட் டபோது, கடைகள் சூறையாடப்பட்டன. வன்முறை வெடித்தது. வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. அந்த வன்முறையாளர்கள்மீது எடுத்த நடவடிக்கை என்ன? போலீஸ் எங்கே சென்றது?’’ என்றார். உடனே, பி.ஜே.பி-யினரும் இந்து முன்னணி யினரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழிசை உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் அவர்களை அமைதிப்படுத்த முயன்றனர். அமீரும், “என் பேச்சு யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்” என்றார். சுமார் 20 நிமிட அமளிக்குப்பின் மீண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, இரண்டு நிமிடங்கள் அமீர் பேசினார். பின்னர், செ.கு.தமிழரசன் 10 நிமிடங்கள் பேசினார். அரங்கத்தில் நிலவிய சூழல் காரணமாக, முதல் சுற்றுடன் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டனர். பின்னர், தமிழிசை உள்ளிட்ட தலைவர்களுடன் பார்வையாளர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டதுடன் அனைவரும் அமைதியாகக் கலைந்து சென்றனர்.

மறுநாள், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நிருபர் சுரேஷ், புதிய தலைமுறை தொலைக்காட்சி நிர்வாகம், இயக்குநர் அமீர் ஆகியோர்மீது வழக்கு பாய்ந்தது. இரு பிரிவினரிடையே விரோதத்தைத் தூண்டுதல், பொது அமைதிக்குத் தீங்கு விளைவித்தல், பொதுச் சொத்துகளுக்கு சேதம் உண்டாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கோவை பீளமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். விவாத அரங்கில் நாற்காலிகள் உடைக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆனால், ‘நாற்காலிகள் எதுவும் உடைக்கப்படவில்லை’ என்று சொல்லும் புதிய தலைமுறை நிர்வாகத்தினர், ‘எட்டுக்கும் மேற்பட்ட கேமராக்களில் பதிவுசெய்யப்பட்ட காட்சிகளே அதற்கு ஆதாரம்’ என்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“அமைதியாக இருக்கத்தான் மக்கள் விரும்புகிறார்கள். ஆனால்...”

சட்டமன்றத்தில் இந்தப் பிரச்னையை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, ‘‘அனுமதியில்லாமல் கூட்டத்தை நடத்தியுள்ளனர். பாபர் மசூதி குறித்து பேசியதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நிகழ்ச்சியை மாணவர்களை வைத்து நடத்தப்போவதாக அரங்கத்தின் மேலாளரிடம் தொலைக்காட்சி நிர்வாகம் சொல்லியிருக்கிறது. ஆனால், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டுள்ளனர். எனவேதான் வழக்கு’’ என்றார்.

‘புதிய தலைமுறைமீது வழக்குப் பதிவு செய்திருப்பது கருத்து சுதந்திரம்மீதான தாக்குதல்’ என்று பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் மணி, ‘‘இந்த நிகழ்ச்சியில் யார் யார் கலந்துகொள்ளப்போகிறார்கள், இது என்ன மாதிரி நிகழ்ச்சி என்பது கோவை போலீஸாருக்கு முன்பே தெரியாதா? உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது? அனுமதி பெறவில்லையென்றால், நிகழ்ச்சியை நடத்த ஏன் அனுமதித்தனர்? இந்த வழக்கு, கருத்துச்சுதந்திரம்மீதான தாக்குதல்” என்றார். “பொதுநிகழ்ச்சியில் கலவரத்தை ஏற்படுத்தி பி.ஜே.பி-யினர்மீது வழக்குப் பதியாமல் அமீர் மற்றும் தொலைக்காட்சி நிர்வாகத்தினர்மீது வழக்குப் பதிந்திருப்பது ஜனநாயக விரோதச் செயல் என்று சி.பி.எம் செயலாளர்      கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்’ என்றார் திருவள்ளுவர். ‘கடிந்து அறிவுரை கூறும் பெரியோரின் துணையில்லாத காவலற்ற அரசன் தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்’’ என்பதை ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

- எஸ்.முத்துகிருஷ்ணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism