Published:Updated:

குழப்பத்தில் கர்நாடகா... குமாரசாமியை வீழ்த்துமா காங்கிரஸ் கலகம்?

குழப்பத்தில் கர்நாடகா... குமாரசாமியை வீழ்த்துமா காங்கிரஸ் கலகம்?
பிரீமியம் ஸ்டோரி
குழப்பத்தில் கர்நாடகா... குமாரசாமியை வீழ்த்துமா காங்கிரஸ் கலகம்?

குழப்பத்தில் கர்நாடகா... குமாரசாமியை வீழ்த்துமா காங்கிரஸ் கலகம்?

குழப்பத்தில் கர்நாடகா... குமாரசாமியை வீழ்த்துமா காங்கிரஸ் கலகம்?

குழப்பத்தில் கர்நாடகா... குமாரசாமியை வீழ்த்துமா காங்கிரஸ் கலகம்?

Published:Updated:
குழப்பத்தில் கர்நாடகா... குமாரசாமியை வீழ்த்துமா காங்கிரஸ் கலகம்?
பிரீமியம் ஸ்டோரி
குழப்பத்தில் கர்நாடகா... குமாரசாமியை வீழ்த்துமா காங்கிரஸ் கலகம்?

‘‘அமைச்சர் பதவி கிடைக்காத காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பலரும், மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ-க்கள் பலரும் பி.ஜே.பி-யில் சேர ஒற்றைக்காலில் நிற்கிறார்கள்’’ என எடியூரப்பா கொளுத்திப் போட, மீண்டும் ஒருமுறை குழப்பத்தையும் பரபரப்பையும் கர்நாடக அரசியல் சந்தித்திருக்கிறது.

காங்கிரஸும் ம.ஜ.த-வும் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைத்து, தங்கள் எம்.எல்.ஏ-க்களைக் கூவத்தூர் ஸ்டைலில் ரிசார்ட்ஸில் அடைத்து வைத்துப் பாதுகாத்தனர். அதனால், அந்தக் கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களை இழுத்து பெரும்பான்மையை நிரூபிக்கும் கனவு கலைந்து, இரண்டே நாள்களில் முதல்வர் பதவியை இழந்தார் எடியூரப்பா. இப்போது, அமைச்சர் பதவிக்காக காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கட்சிகளில் நடக்கும் அடிதடி, கர்நாடக முதல்வர் நாற்காலியை மீண்டும் ஒருமுறை எடியூரப்பா பக்கம் திருப்பிவிட்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் ஒன்பது எம்.எல்.ஏ-க்கள் (இவர்கள் ஏற்கெனவே சித்தராமையா அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்தவர்கள்) அமைச்சர் பதவி கேட்டு போர்க்கொடி உயர்த்தியுள்ளதால், கர்நாடகாவில் பரபரப்பான அரசியல் சூழல் உருவாகியுள்ளது. கர்நாடகா சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக லிங்காயத்துகளைத் தனி மதமாக அறிவித்ததுதான் இந்தச் சிக்கலுக்கு மூலகாரணம் என்கிறார்கள். 

குழப்பத்தில் கர்நாடகா... குமாரசாமியை வீழ்த்துமா காங்கிரஸ் கலகம்?

தேர்தலுக்குப் பிறகு உருவான காங்கிரஸ்-ம.ஜ.த கூட்டணியில் முதல்வராக ம.ஜ.த தலைவர் குமாரசாமியும், துணை முதல்வராக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பரமேஸ்வரும் பதவியேற்றனர். அமைச்சரவையைப் பகிர்ந்து கொள்வது, துறைகள் ஒதுக்குவது தொடர்பான பேச்சுகளில் இரண்டு கட்சிகளுக்கும் இடையே எழுந்த இழுபறியால், மற்ற அமைச்சர்கள் பதவியேற்பது தாமதமானது. டெல்லி மேலிடத்தின் பஞ்சாயத்துக்குப் பின்னர், காங்கிரஸுக்கு 22 அமைச்சர்கள், ம.ஜ.த-வுக்கு 12 அமைச்சர்கள் என்று பங்கீடு செய்யப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சிக்குள் யாருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது என்ற இழுபறியால், முதல் கட்டமாக காங்கிரஸ் தரப்பில் 15 பேர், ம.ஜ.த தரப்பில் 10 பேர் மட்டும் அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர். அவர்களுக்கான துறைகளும் ஒதுக்கப்பட்டு விட்டன. இன்னும் பதவியேற்கப் போகும் அமைச்சர்களுக்கான துறைகளையும் சேர்த்து, 11 முக்கிய துறைகளை முதல்வர் குமாரசாமியே வைத்திருக்கிறார்.

‘சீனியர் தலைவர்களை ஒதுக்கிவிட்டு புதுமுகங்களுக்கு வாய்ப்புத் தர வேண்டும். சுழற்சி முறையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சர் பதவிகள் வேறு நபர்களுக்கு வழங்கப்படும்’ என ராகுல் காந்தி கர்நாடகாவுக்கு புது ஃபார்முலா கொடுத்தார். ‘சிக்கல் தீர்ந்தது’ என்று நினைத்திருந்த நிலையில், முந்தைய சித்தராமையா அரசில் அமைச்சர்களாக இருந்த ஒன்பது காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தனியாகக் கூட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எம்.பி.பாட்டீல், அமைச்சர் பதவி கிடைக்க வில்லை என்று கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார். இவரைப் போல         எச்.கே.பாட்டீல், சதீஷ் ஜார்கிகோளி, ரோஷன் பேக், ராமலிங்க ரெட்டி, எம்.கிருஷ்ணப்பா ஆகியோர் தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் எச்.கே.பாட்டீல் தலைமையில் ஆலோசனை நடத்தினர். ‘‘மாநில பி.ஜே.பி தலைவர்களுடன் பேச்சு நடத்துகிறோம்’’ என எச்.கே.பாட்டீல் ஆதரவாளர்கள் வெளிப்படையாக அறிவித்தனர். இதேபோல சாமனூர் சிவசங்கரப்பா, ஈஸ்வர கண்ட்ரே இருவரும் தனியாக ஆலோசனை நடத்தினர். 

கர்நாடகா காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு, அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் ஆதரவாளர்கள் திரண்டுவந்து மொட்டை அடித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், டவர்களில் ஏறித் தற்கொலை  மிரட்டல் விடுத்தனர். காங்கிரஸ் கட்சியில் நடைபெறும் களேபரங்களைப் பார்த்து மிரண்டு போன முதல்வர் குமாரசாமி எம்.பி.பாட்டீல் வீட்டுக்கே சென்று அவரை சமாதானம் செய்ய முயன்றார். ஆனால், ஐந்து நிமிடங்களிலேயே வெளியில் வந்த குமாரசாமி, ‘‘கூட்டணி அரசின் முதல்வர் என்ற முறையில் இந்த அரசைச் சுமுகமாக நடத்த வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. எனவேதான், அவரைச் சந்தித்து பேசினேன்’’ என்று கூறினார். பி.ஜே.பி-யின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவின் செல்வாக்கை உடைப்பதற்காக, சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக சித்தராமையா, லிங்காயத்துகளின் நீண்ட நாள் கோரிக்கையான தனி மதம் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். இதற்காக, கர்நாடக காங்கிரஸில் பெரும் முயற்சி எடுத்துச் செயல்பட்டவர் எம்.பி.பாட்டீல். இப்போது, ‘லிங்காயத்துகள் புறக்கணிக்கப்படுகிறார்கள்’ என அவரே குற்றம் சாட்டி கர்நாடகா அரசுக்கு எதிராகத் திரும்பியுள்ளார். 

குழப்பத்தில் கர்நாடகா... குமாரசாமியை வீழ்த்துமா காங்கிரஸ் கலகம்?

அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, அவருக்குப் பதவி தருவதாகக் கட்சி மேலிடம் சொன்னது. ஆனால், எம்.பி.பாட்டீல் சமாதானம் ஆவதாகத் தெரியவில்லை. ‘‘தென் கர்நாடகத்துக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டதுபோல, வட கர்நாடகத்துக்குப் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் எனக்குத் துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும்’’ என உறுதியாகக் கூறியுள்ளார். 

இதனைத் தொடர்ந்து எம்.பி.பாட்டீல், சதீஷ் ஜார்கிகோளி உள்ளிட்டோர் ராகுலை சந்திக்க டெல்லி சென்றனர். டெல்லி செல்லும் முன்பாக கன்னட மற்றும் ஆங்கில நாளிதழ்களில், ‘லிங்காயத் வாக்குகள்தான் காங்கிரஸுக்கு பெரிய வெற்றியைத் தேடி தந்தது’ என்று விளம்பரம் கொடுத்துவிட்டுச் சென்றார் எம்.பி.பாட்டீல். ராகுலுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பாட்டீலின் குரலில் வேகம் குறைந்திருக்கிறது.

முக்கியமான துறைகளைக் காங்கிரஸுக்கு ஒதுக்கவில்லை என்ற அதிருப்தி... சீனியர் தலைவர்களை அமைச்சரவையில் புறக்கணித்ததால் எழுந்த விரக்தி... இவற்றையெல்லாம் சமாளித்து குமாரசாமி எப்படி ஆட்சி செய்யப் போகிறார் என்பது பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது. 

- எம்.வடிவேல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism