Published:Updated:

மதுவுக்கு எதிராக தர்மயுத்தம் தொடரும்: வைகோ ஆவேசம் (படங்கள்)

மதுவுக்கு எதிராக தர்மயுத்தம் தொடரும்: வைகோ ஆவேசம் (படங்கள்)
மதுவுக்கு எதிராக தர்மயுத்தம் தொடரும்: வைகோ ஆவேசம் (படங்கள்)

"மதுவின் பிடியில் சிக்கி இருக்கும் தமிழகத்தை மீட்டெடுக்கும் வரை தர்மயுத்தம் தொடரும்" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாக கூறினார்.
 

மதுவுக்கு எதிராக தர்மயுத்தம் தொடரும்: வைகோ ஆவேசம் (படங்கள்)

மதுவிலக்கு விழிப்புணர்வு நடைபயண பிரச்சாரத்தின் 9வது நாளான நேற்று ஈரோடு மாவட்டம் க.ஒட்டன்சத்திரத்தில் இருந்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தொடங்கினார். அம்மன் கோவில் வழியாக சிவகிரி வந்த வைகோவுக்கு பொன்காளியம்மன் கோவில் பூசாரிகள் பூரணகும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.

கொடிகாத்த திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து, கொடியேற்றி கூடி இருந்த பொதுமக்களிடையே பேசிய வைகோ, "2 நாட்களாக உடல் சோர்வுற்றிருந்தாலும், வரும் வழியில் சந்திக்கும் பெண்கள், தங்கள் கணவர் குடிப்பதினால் குடும்ப வாழ்வு சீரழிந்து வருவதாக கண்ணீருடன் சொல்லும்போது, தமிழகத்தில் இருந்து மதுவை முற்றிலும் ஒழிக்கவேண்டும் எனும் நோக்கம் தான் பெரிதாக தெரிகிறது.
 

மதுவுக்கு எதிராக தர்மயுத்தம் தொடரும்: வைகோ ஆவேசம் (படங்கள்)

என் மூச்சு இருக்கும்வரை தமிழக மக்களுக்காக போராடுவேன். திருப்பூரில் சில நாட்களுக்கு முன்பு 8 வயது சிறுமி மதுபோதையால் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். உவரியில் நான் முதல் கட்ட நடைபயண பிரச்சாரம் தொடங்கும்போது இருந்ததைவிட ப் போது அதிக அளவில் மக்கள் மதுவுக்கு எதிராக திரளுகிறார்கள்.

மதுவின் பிடியில் சிக்கி இருக்கும் தமிழகத்தை மீட்டெடுக்கும் தர்மயுத்தத்தில் நாங்கள் ஈடுபட்டு இருக்கிறோம்" என வைகோ பேசினார்.
 

மதுவுக்கு எதிராக தர்மயுத்தம் தொடரும்: வைகோ ஆவேசம் (படங்கள்)

நேற்றிரவு அரச்சலூர் பொதுக்கூட்டத்தில் வைகோ உரையாற்றினார். வரும் 28ஆம் தேதி ஈரோட்டில் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது.

நடைபயணத்தில் ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் நாகை மோகன், கரூர் பரணி மணி, மாநில இளைஞர் அணி செயலாளர் ஈசுவரன், மாணவரணி செயலாளர் தி.மு.ராஜேந்திரன், தொண்டரணி செயலாளர் பாஸ்கர சேதுபதி, கொள்கை விளக்க அணி செயலாளர் அழகு சுந்தரம்,  இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி ஆகியோர் கலந்துகொண்டனர்.