Published:Updated:

திமுக முன்னாள் எம்.பி. மறைவுக்கு இரங்கல்: மக்களவை ஒத்திவைப்பு!

திமுக முன்னாள் எம்.பி. மறைவுக்கு இரங்கல்: மக்களவை ஒத்திவைப்பு!
திமுக முன்னாள் எம்.பி. மறைவுக்கு இரங்கல்: மக்களவை ஒத்திவைப்பு!
திமுக முன்னாள் எம்.பி. மறைவுக்கு இரங்கல்: மக்களவை ஒத்திவைப்பு!

புதுடெல்லி:திமுக முன்னாள் எம்.பி. செ.குப்புசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

ஒரு நாள் ஓய்வுக்கு பிறகு நாடாளுமன்றம் இன்று காலை கூடியது. அப்போது, முன்னாள் எம்.பி.யும், தொ.மு.ச. தலைவருமான செ.குப்புசாமி மறைவுக்கு மக்களவை சபாநாயகர் மீரா குமார் இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை படித்தார்.

##~~##
இதைத் தொடர்ந்து, உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில் அமளி
இதனிடையே  மாநிலங்களவையில்  பா.ஜனதா மற்றும் சமாஜ்வாடி கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சீன ஊடுருவல் விவகாரம் மற்றும் கொல்கத்தா சிட்பண்ட் மோசடி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்பி அமளியில்  ஈடுபட்டதால்  நண்பகல் 12 மணி வரை அவை தள்ளிவைக்கப்பட்டது.