கர்நாடக முதல்வர் குமாரசாமிகூட, பதவியேற்ற ஒரே மாதத்தில் இரண்டு முறை பிரதமர் மோடியைச் சந்தித்துவிட்டார். ஆனால், மோடியைச் சந்திக்க, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துப் பார்க்கிறார். அவரைச் சந்திக்காமல் மோடி தவிர்த்துக்கொண்டே இருக்கிறார். இம்முறையும் அப்படி ஓர் ஏமாற்றத்துடன் டெல்லியிருந்து டல்லாகத் திரும்பியிருக்கிறார் எடப்பாடி. நிதி ஆயோக் அமைப்பின் நிர்வாக கவுன்சிலுக்கான நான்காவது ஆண்டுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, ஜூன் 16-ம் தேதி இரவு 9.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி வந்தார். எப்போதும் போல் விமான நிலையத்தில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் அ.தி.மு.க எம்.பி-க்கள் அவருக்கு மலர்க்கொத்து வழங்கி வரவேற்றனர். விமான நிலையத்திலும் சரி, தமிழ்நாடு இல்லத்திலும் சரி, இரவிலும் காத்திருந்த நிருபர்களிடம் எதுவும் பேசாமல் தன் அறைக்குச் சென்றுவிட்டார் முதல்வர் எடப்பாடி.

மறுநாள் காலை 9.30 மணிக்கே, நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்குப் புறப்பட்டார். அப்போதும், தம்பிதுரை மற்றும் எம்.பி-க்கள் வந்து வழியனுப்பினர். 10 மணியளவில் கூட்டம் தொடங்கியது. பிரதமரின் தொடக்க உரைக்குப் பின் தேநீர் இடைவேளை. அப்போது, அனைத்து முதல்வர்களையும் சந்திக்க பிரதமர் ஒரு சுற்று வந்தார். பி.ஜே.பி முதல்வர்கள் சிலரைப் பிரதமர் சந்தித்த பிறகு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்வர் குமாரசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகிய நான்கு பேரும் பிரதமரைக் காண ஒன்றாகக் கூடி அருகே சென்றனர். பிரதமர் சிரித்தபடி அவர்களுடன் கைகுலுக்கினார். அப்போது அவர்கள், டெல்லி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் ஒத்துழையாமைப் போராட்டம் காரணமாக முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் அலுவலக வரவேற்பறையில் ஒரு வாரமாக தர்ணா இருப்பதைச் சுட்டிக்காட்டினர். மத்திய அரசு அந்தப் பிரச்னைக்கு முடிவு காண வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அதற்கு பிரதமர் மோடி சிரிப்பையே பதிலாகத் தந்தார்.

அந்த நான்கு முதல்வர்களுக்கும் பக்கவாட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நின்று, பிரதமரின் பார்வைக்காகக் காத்துக்கொண்டிருந்தார். அடுத்த சில நிமிடங்களில் அவர் பக்கம் பிரதமர் திரும்ப, வணக்கம் தெரிவித்தார் எடப்பாடி. அப்போது, பொதுவாக நலம் விசாரித்துவிட்டு பிரதமர் உடனே நகர்ந்துவிட்டார். ஏற்கெனவே, இந்த நிதி ஆயோக் கூட்டம் சனிக்கிழமைதான் நடப்பதாக இருந்தது. ரம்ஜான் பண்டிகை தினத்தில் கூட்டத்தை நடத்த மம்தா பானர்ஜி மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்தக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டது. பழைய திட்டப்படி சனிக்கிழமை கூட்டம் நடந்தால், மறுதினமும் டெல்லியிலேயே தங்கியிருந்து இந்த முறை எப்படியும் பிரதமரைச் சந்தித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார் எடப்பாடி. அதற்காக ஞாயிற்றுக்கிழமை பிரதமரைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு பிரதமர் அலுவலகத்தில் கேட்டிருந்தார். ஆனால், அதற்கு எந்த பதிலும் வராத நிலையில், திடீரென கூட்டம் ஒருநாள் தாமதமானது. எனவே, பிரதமருடனான சந்திப்புக்கான வாய்ப்பு இந்த முறையும் கிடைக்கவில்லை.

நிதி ஆயோக் கூட்டம், திட்டமிட்டதற்கும் முன்பாக மாலை 3.15 மணிக்கே முடிந்தது. அப்போது, கிடைத்த நேரத்தில் தனி அறையில் பிரதமரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிடைக்குமா என்று அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனாலும், அப்படி ஒரு வாய்ப்பு அமையவில்லை. இதனால், சற்று ஏமாற்றத்துடனே 3.35 மணிக்கு தமிழ்நாடு இல்லம் வந்து சேர்ந்தார் முதல்வர்.அங்கு காத்திருந்த நிருபர்களிடம், ‘‘காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை உடனே கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளைக் கூட்டத்தில் முன்வைத்தேன்’’ என்றார் எடப்பாடி. தமிழகத்துக்குத் தேவையான நிதியை ஒதுக்க பிரதமரிடம் வலியுறுத்தியதாகவும் கூறினார். ‘‘பிரதமர் என்ன சொன்னார்?’’ என நிருபர்கள் விடாமல் கேட்க, ‘‘பிரதமர் எந்த உத்தரவாதமும் வழங்கவில்லை’’ என்றார். இன்னொரு நிருபர், ‘‘தூத்துக்குடிக்கு ஏன் செல்லவில்லை?’’ என்று கேட்டார். டெல்லியில் இந்தக் கேள்வியை எதிர்பார்க்காத எடப்பாடி, ‘‘அமைச்சர்கள் சென்றுவந்தனர். ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முடியாத அளவுக்கு அரசு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது’’ என்று சமாளித்தார். பின்னர், அடுத்த கேள்விகளைக் காதில் வாங்கிக் கொள்ளாமலேயே தனது அறையை நோக்கி நடந்தார்.

பிறகு, அவரது அறையில் தம்பிதுரை மற்றும் எம்.பி-க்கள் நாமக்கல் சுந்தரம், அரக்கோணம் ஹரி, அர்ஜுனன் உள்ளிட்ட 12 பேருடன் சுமார் ஒன்றரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார். டெல்லியில் எதுவும் வேலையில்லை என்பதால், ஏற்கெனவே திட்டமிட்டிருந்த ஒன்பது மணி விமானத்துக்குப் பதிலாக ஏழு மணிக்கே சென்னைக்குப் புறப்பட்டார். இந்த முறை டெல்லி தமிழக இல்லத்தில் முதல்வரைச் சந்திக்க முக்கிய நபர்கள் யாரும் வரவில்லை. வந்திருந்த எம்.பி-க்கள் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. தம்பிதுரை மட்டும் கடந்த முறையைவிட இந்த விசிட்டின்போது அதிக நேரம் முதல்வருடன் இருந்தார்.

கர்நாடகா முதல்வர் குமாரசாமி, மறுநாள் திங்கள்கிழமை டெல்லியில் தங்கி பிரதமரையும், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியையும் சந்தித்துச் சென்றது முக்கியமாகக் கருதப்படுகிறது. காவிரி மேலாண்மை வாரியத்துக்கும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவுக்கும் கர்நாடகாவும் கேரளாவும் இன்னும் உறுப்பினர்களைப் பரிந்துரைக்காத நிலையில், அதற்காகக்கூட மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை எடப்பாடி சந்திக்கவில்லை. எதிர்க்கட்சியினர் இதைத்தான் கொந்தளிப்புடன் பேசுகிறார்கள்.

- டெல்லி பாலா