காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரத்திலுள்ள அறிஞர் அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்ற மு.க.ஸ்டாலின் அங்கிருந்த குறிப்பேட்டில் தனது கருத்தை பதிவு செய்தார்.

காஞ்சியில் மறைந்த முன்னாள் அமைச்சர் சி.வி.எம்.அண்ணாமலை இல்லத்திருமண விழாவில் தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார்.
##~~## |
மணமக்களை வாழ்த்தி பேசியபோது, 'சுயமரியாதை திருமணங்கள் கேலிக்கும், ஏளனத்துக்குமான நிலை மாறி சமூகத்தில் அதற்கு பெரிய மரியாதை ஏற்பட்டு இருபதாக கூறிய அவர், அய்யர்களை விட நமக்குத்தான் இப்போது வேலை கூடிவிட்டதாக நகைச்சுவையுடன் குறிபிட்டார்.
மேலும் '2மணி நேர மின் தடைக்காக, ஆட்சி மாற்றத்தையே ஏற்படுத்திய தமிழ் மக்கள் 18மணி நேர மின்தடைக்காக ஜெயலலிதாவுக்கு என்ன தண்டனை தர வேண்டும்? வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் ஜெயலலிதாவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் சட்டமன்ற தேர்தல் வராதா என மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார்.
அதன் பிறகு சின்ன காஞ்சிபுரத்திலுள்ள அண்ணாதுரை நினைவு இல்லத்துக்கு சென்று, அங்குள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். மறக்காமல் அங்கிருந்த குறிப்பேட்டிலும் அவர் தன் கருத்தை பதிவு செய்தார்.
-கிருபாகரன்