Published:Updated:

`ஜெய் ஆனந்த் - அமைச்சர் மணிகண்டன் ரகசிய சந்திப்பு!’ - ராமநாதபுரம் அ.தி.மு.க-வில் பரபரப்பு

`ஜெய் ஆனந்த் - அமைச்சர் மணிகண்டன் ரகசிய சந்திப்பு!’ - ராமநாதபுரம் அ.தி.மு.க-வில் பரபரப்பு
News
`ஜெய் ஆனந்த் - அமைச்சர் மணிகண்டன் ரகசிய சந்திப்பு!’ - ராமநாதபுரம் அ.தி.மு.க-வில் பரபரப்பு

`ஜெய் ஆனந்த் - அமைச்சர் மணிகண்டன் ரகசிய சந்திப்பு!’ - ராமநாதபுரம் அ.தி.மு.க-வில் பரபரப்பு

ஆளும் அ.தி.மு.க-வுக்கு எதிராகக் களமாடும் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்தை தனியறையில் அமைச்சர் மணிகண்டன் சந்தித்தது அ.தி.மு.க-வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் சசிகலா சிறைக்குச் சென்ற நிலையில், அ.தி.மு.கவை கட்டுக்குள் கொண்டுவர டி.டி.வி. தினகரன் முயற்சி செய்தார். இதற்கு எதிராக சசிகலாவின் சொந்த பந்தங்களே கொடி பிடித்தனர். இது மட்டுமில்லாமல் சசிகலா குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரில் கட்சி ஆரம்பிக்கத் தொடங்கினர். இதில் அ.தி.மு.க-வுக்கு மாற்றாக முதலில் கட்சி தொடங்கியவர் தினகரன். சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மூலமாகச் சட்டமன்ற உறுப்பினரான பலரில் 18 பேர் மட்டும் தினகரன் பின்னால் சென்றனர். மேலும், பலர் ஸ்லீப்பர் செல்களாக எடப்பாடி-ஓ.பி.எஸ் தலைமையிலான கட்சிக்குள் இருந்து வருவதாகத் தினகரனே சொல்லி வருகிறார்.

சசிகலாவின் சகோதரரான திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் 'போஸ் மக்கள் பணியகம்' என்ற அமைப்பைத் தொடங்கினார். திவாகரனும் தன் பங்குக்கு அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து தினகரனின் சகோதரர் பாஸ்கரன் அண்ணா எம்.ஜி.ஆர் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கினார். இவர்கள் அனைவருமே ஆளும் அ.தி.மு.க ஆட்சிக்கு எதிராகவும், எடப்பாடி - ஓ.பி.எஸ் தலைமைக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சசிகலா குடும்பத்தினர் ஆதரவுடன் தேர்தலில் நின்று அமைச்சர் பொறுப்பு பெற்ற ராமநாதபுரம் மணிகண்டன் சமீபகாலமாகத் தினகரனுக்கு எதிராகக் கடுமையான வார்த்தை பிரயோகங்களை உபயோகித்து வருகிறார். மேலும், தினகரன் கட்சியினர் மீது நேரிடையாகவும் மறைமுகமாகவும் தாக்குதல் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்தசூழலில் அ.தி.மு.க-வுக்கு எதிராக இயங்கி வரும் திவாகரனின் மகனும், அண்ணா திராவிடர் கழகத்தின் இளைஞரணி மற்றும் மாணவரணி செயலாளருமான ஜெய் ஆனந்தை அமைச்சர் மணிகண்டன் சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட போஸ் மக்கள் பணியக நிர்வாகி பிரகாஷின் திருமணம் ராமநாதபுரத்தில் இன்று நடந்தது. இந்தத் திருமணத்தில் பங்கேற்ற அமைச்சர் மணிகண்டன், மணமக்களை வாழ்த்திக் கொண்டிருந்தார். அந்நேரத்தில் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் அங்கு வந்துள்ளார். இதை அறிந்த அமைச்சர் மணிகண்டன் திருமண மண்டபத்தின் வாசலுக்குச் சென்று ஜெய் ஆனந்தை வரவேற்கச் சென்றதாகவும், பின்னர் மண்டபத்தினுள் இருவரும் தனிமையில் சந்தித்ததாகவும் ராமநாதபுரம் அ.தி.மு.க வட்டாரத்தில் கிசுகிசுக்கிறார்கள். ஆளும் கட்சிக்கு எதிராக அமைப்பு மற்றும் கட்சி உருவாக்கி இயங்கி வரும் நபரை ஆளும் அரசின் பிரதிநிதியான அமைச்சர் மணிகண்டன் தனிமையில் சந்தித்திருப்பது  ராமநாதபுரம் அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.