Published:Updated:

`கஜா’ புயல் எதிரொலி - மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் தமிழக அரசு எச்சரிக்கை!

`கஜா’ புயல் எதிரொலி - மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் தமிழக அரசு எச்சரிக்கை!
`கஜா’ புயல் எதிரொலி - மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் தமிழக அரசு எச்சரிக்கை!

தமிழகத்தில் உள்ள அனைத்து கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் எனத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக மீன்வளத்துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ``அனைத்துக் கடலோர மற்றும் உள்நாட்டு மீன்துறை இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் மற்றும் மீன்துறை உதவி இயக்குநர்களுக்கு கஜா புயல் தொடர்பாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டு, மீனவர்களைப் பத்திரமாக கரைதிரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற சென்னை மீன்பிடி துறைமுகத்தைச் சேர்ந்த 160 தங்குகடல் மீன்பிடி விசைபடகுகளை பத்திரபடுத்திடவும், பாதுகாக்க கரை திரும்ப அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அனைத்து கடலோர மாவட்டங்களிலும் மறு உத்தரவு வரும் வரை 11.11.2018 பிற்பகல் 12 மணி முதல் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. புயல் மற்றும் இயற்கை இடர்பாடுகளை உடனுக்குடன் மீனவர்களுக்கு வழங்கிட ஏதுவாக மீன்துறை இயக்குநர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை கட்டுபாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் அனைவரும் அலைபேசி மூலம் பேரிடர் மேலாண்மை கட்டுபாட்டு அறையை தொடர்புகொண்டு விவரங்களைக் கேட்டுக்கொள்ள அறிவுரை வழங்ப்பட்டுள்ளது”  இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.