Published:Updated:

`சர்காருக்கு எதிராகப் பொங்கும் அரசு ராஜலட்சுமி விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன்?’ - ஜிக்னேஷ் மேவானி தாக்கு!

`சர்கார்' படத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழக அரசு, சேலம் சிறுமி ராஜலட்சுமி கொலையில் மெளனமாக இருக்கிறது என்று குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி குற்றம்சாட்டியுள்ளார்.

`சர்காருக்கு எதிராகப் பொங்கும் அரசு ராஜலட்சுமி விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன்?’ - ஜிக்னேஷ் மேவானி தாக்கு!

கோவை, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் சமூக நீதி கட்சி சார்பில், குஜராத் மாநிலம் வடகம் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானிக்கு தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டது. இதற்காக கோவை வந்த ஜிக்னேஷ் மேவானி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``பெரியார் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது எனது செயல்பாடை ஊக்குவிக்கும். பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தலைவர் அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் தமிழகம் இயங்குகிறது. மதசார்பற்ற மாநிலங்களை இந்துத்வ மாநிலமாக மாற்றுவதற்கு மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. தமிழகத்தில் மக்கள் பெரியாரைப் போற்றுகின்றனர், வீரசாவர்க்கர்அல்ல. பெரியார் மண்ணான தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமைகள் மற்றும் பட்டியலினப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சேலம் சிறுமி ராஜலட்சுமி படுகொலை கொடுரமானது. விஜய் நடித்த சர்கார் படத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் மாநில அரசு,  ராஜலட்சுமிக்கு கொலைக்கு குரல் கொடுக்காமல் மெளனமாக இருக்கிறது.  நாய் இறந்தற்குக் கூட ட்வீட் செய்யும் பிரதமர் மோடி,  ராஜலட்சுமி இறப்புக்கு மவுனம் காப்பது ஏன். தமிழக அரசு, தீண்டாமை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜலட்சுமி கொலை வழக்குக்கு நீதி கேட்டு, 20 மாநிலங்களில் இருந்து, 500 அமைப்புகளைத் திரட்டி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மக்களை அழைத்து பெரும் மாநாடு தமிழகத்தில் நடத்தப்படும்.

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க அல்லாத அனைத்துக் கட்சிக் கூட்டணிகளை ஆதரிப்பேன். அதில் சமரசம் செய்து கொண்டதாக சொன்னால் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன். விவசாயிகள் நாள்தோறும் தற்கொலை செய்து வரும் நிலையில்,  படேலுக்கு 3,000 கோடி ரூபாய் செலவில் சிலை அமைக்க அவசியம் என்ன. பிரித்தாளும் அரசியல் செய்யும் பா.ஜ.க, இதை ஒற்றுமைக்கான சிலை எனக் கூறுவதை ஏற்க முடியாது. மோடி அரசு அனைத்துப் பகுதிகளிலும் மக்களை ஒடுக்கி வருகிறது. போராடக்கூடியவர்களை அர்பன் நக்சலாக பார்த்து வருகிறது. முத்தலாக் விவகாரத்தில் பெண்களுக்கு ஆதரவாக இருப்பதாக கூறும் பா.ஜ.க, சபரிமலை விவகாரத்தில் பெண்கள் செல்லக்கூடாது என்பது ஏற்புடையதல்ல. அங்கு உடனடியாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்பதே எனது கருத்து" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism