ஜெ.முரளி, திண்டிவனம்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஏன் ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டிருக்கிறார்?

அவர் ஏன் போகிறார், என்ன நோக்கம் எனச் சர்ச்சைகள் ஒருபக்கம் இருந்தாலும், அவர் சத்தமில்லாமல் சில விஷயங்களைச் சாதித்திருக்கிறார். கவர்னர் மாளிகையில் செலவைக் குறைத்து, அரசு நிர்வாகம் எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு ஒரு முன்மாதிரியை உருவாக்கித் தந்திருக்கிறார். 2017 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில் வித்யாசாகர் ராவ் பொறுப்பு கவர்னராக இருந்தார். தமிழகத்துக்கு அரிதாகத்தான் அவர் வருவார். என்றாலும், அந்த ஆறு மாதங்களில் கவர்னர் மாளிகையின் சமையல் செலவு 41.7 லட்ச ரூபாய். ஆனால், அதை 2017 அக்டோபர் முதல் 2018 மார்ச் வரையிலான ஆறு மாத காலத்தில் 9.2 லட்ச ரூபாயாகக் குறைத்திருக்கிறார் புரோஹித். அரசின் கூட்டுறவு அங்காடியில்தான் மளிகைப் பொருள்கள் வாங்குகிறார்கள். கவர்னர்கூட காசு கொடுத்தே கேன்டீனில் சாப்பிடுகிறார்.

அதேபோல வித்யாசாகர் ராவ் பொறுப்பில் இருந்த ஆறு மாதங்களில் போக்குவரத்து செலவு 80.5 லட்ச ரூபாய். சிலமுறைதான் அவர் தமிழகம் வந்தார். ஆனால், விமானப்படை விமானத்தில்தான் பறந்தார். அதற்குச் செலவானது. புரோஹித் பல இடங்களுக்குப் போகிறார். ஆனால், பயணிகள் விமானத்திலோ, ரயிலிலோதான் போகிறார். அதனால் செலவு 4.7 லட்சமாகக் குறைந்துள்ளது.

இந்தச் சிக்கனத்தைத் தமிழக அரசுக்கும் அவர் சொல்லிக்கொடுத்தால் நன்றாக இருக்கும்.

எஸ்.ரமேஷ், கிருஷ்ணகிரி.

சேலம் - சென்னை எட்டு வழி பசுமைச் சாலை தேவையா?

அது யாருக்குத் தேவை என்பதைப் பொறுத்தது. ஏற்கெனவே சென்னையி லிருந்து சேலம் செல்வதற்கு இரண்டு சாலைகள் உள்ளன. இதில் உளுந்தூர்பேட்டை வழியாகச் செல்லும் சாலை இப்போதே வெறிச்சோடித்தான் கிடக்கிறது. தேவைப்பட்டால், இதை விரிவாக்கம் செய்யவும் இடம் உள்ளது. ஆனால், முழுக்க முழுக்கப் பசுமைப் பிரதேசத்தை அழித்துவிட்டுப் புத்தம்புதிதாகச் சாலையைப் போடப் பார்க்கிறார்கள். அதற்குப் பசுமைச் சாலை என்று பெயர் வேறு சூட்டு கிறார்கள். ‘எந்தத் தனிநபரின் தேவைக்காகவும் இந்தச் சாலை போடப்படவில்லை’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதுதான் எங்கோ உதைக்கிறது.

கே.பன்னீர்செல்வம், தஞ்சாவூர்.

‘‘தி.மு.க ஆட்சிக்கு வந்தால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட அ.தி.மு.க அமைச்சர்கள் சிறைக்குச் செல்வது உறுதி’’ என்று மு.க.ஸ்டாலின் சொல்லியிருக்கிறாரே?

தற்போதைய அ.தி.மு.க அரசு ஊழலில் திளைக்கிறது என்பதுதான் ஸ்டாலினின் குற்றச்சாட்டு. கிட்டத்தட்ட ஆளும்கட்சிக்கு இணையாக எம்.எல்.ஏ-க்களை வைத்துக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின், இப்போதே முறையாக நெருக்கடி கொடுத்தால் அ.தி.மு.க-வினரால் ஊழல் செய்ய முடியாதே! இதைப் பற்றி யோசிப்பதற்கு மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவருக்கு ஏதாவது தடைகள் இருக்கின்றனவா என்ன?

எஸ்.நாகராஜன், திருப்பூர்.

‘‘ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டி.டி.வி.தினகரன் பறித்துக்கொண்டார்’’ என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருக்கிறாரே?

திண்டுக்கல் சீனிவாசனின் பொன்மொழிகளை 192 பக்கப் புத்தகமாகவே போடலாம். ‘அம்மா இட்லி சாப்பிட்டார்’ என்றவர் அவர்தான். ‘மூன்று வகை ஸ்வீட் கொடுத்தார்’ என்றவரும் அவர்தான். அவர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் என்றால், இதுபோன்ற காமெடிகளைக் கேட்பதற்காகவே பெருங்கூட்டம் கூடுகிறது. சமீபத்தில் மதுரையில் திண்டுக்கல் சீனிவாசன் பேசிய கூட்டத்தில், நிருபர்கள் வரிசை நிரம்பி வழிந்தது. ‘‘இன்னைக்கு பத்திரிகையாளர்கள் அதிகமா வந்திருக்கீங்க. வனத்துறை அமைச்சர் என்ன பேசப் போறார்னு கேட்க வந்திருக்கீங்க’’ என்று சக அமைச்சர் செல்லூர் ராஜுவே கிண்டலாகப் பேசும் அளவுக்கு திண்டுக்கல்லார்மீது எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. ‘‘காட்டு இலாகா மந்திரி என்பதால் காட்டுமிராண்டித் தனமாகப் பேசுகிறார்’’ என்று தினகரன் கொந்தளிக்கிறார்.

திண்டுக்கல் சீனிவாசன் பேசுவதில் சில சமயங்கள் உண்மையும் இருக்கும்!

எஸ்.கதிரேசன், காஞ்சிபுரம்.

விருதுகள் பல சமயங்களில் விலைக்குத்தானே வாங்கப்படுகின்றன?

‘எது உண்மையான விருது’, ‘அது எப்படி, யாரிடமிருந்து கிடைக்கிறது’ என்பதையும் பார்க்கவேண்டும். திருவள்ளூர் மாவட்டம், வெளியகரம் அரசுப் பள்ளியின் ஆங்கில ஆசிரியர் பகவான், பணி மாறுதலில் வேறு பள்ளிக்குச் செல்லவிருந்தார். ஆனால், அவரை அங்கிருந்து செல்லவிடாமல் கண்ணீர்மல்க மாணவர்கள் நடத்திய பாசப் போராட்டம் தற்போது வைரலாகி இருக்கிறது. அவர்மீது அத்தனை அன்பு வைத்திருந்தார்கள் மாணவர்கள். அந்த அளவுக்குப் பகவானும் மாணவச் செல்வங்கள்மீது அன்பும் அக்கறையும் கொண்டிருந்தார். மாணவர்களை அமைதிப்படுத்துவதற்காக, 10 நாள்கள் வரை அங்கேயே அவரைப் பணியாற்றும்படி உயர் அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். விருது என்பது ஓர் அடையாளம்தான். அந்த விருதுக்கேற்ப நம்மைத் தகுதிப்படுத்திக் கொண்டிருக்கிறோமா என்பதே முக்கியம். என்னைக் கேட்டால், உலகிலேயே மிக உயர்ந்த விருதுக்குத் தன்னைத் தகுதிப்படுத்திக்கொண்டுவிட்டார் பகவான் என்றுதான் சொல்வேன்.

என்.சீனிவாசன், பாலக்காடு.

கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்திக்கவே மறுக்கிறாரே பிரதமர் மோடி?

‘மத்திய அரசு ரேஷன் பொருள்களை வழங்குவதில் கேரளாவுக்கு அநீதி இழைக்கிறது’ என்று சொல்லும் விஜயன், இதற்காக மனு கொடுக்க இதுவரை நான்கு முறை பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார். ஆனால், துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானிடம் மனு கொடுக்குமாறு பிரதமர் அலுவலகம் சொல்லிவிட்டதாம். ஒரு மாநில முதல்வர் மாற்றுக்கொள்கை கொண்டவராக இருக்கலாம்; அவர் கேட்கும் கோரிக்கை நிறைவேற்ற முடியாததாகக்கூட இருக்கலாம். ஆனால், அவரைப் பிரதமர் சந்திக்க மறுப்பது நியாயமல்ல!

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

நேதாஜியின் இறப்பு மர்மமாகவே போய்விட்டதே?

ஜெயலலிதாவின் இறப்பில் இருந்த மர்மம் விலகிவிட்டதா?

கே.சேகரன், சென்னை-33.

‘‘அடுத்த ஆண்டு தமிழக மாணவர்கள் எல்லோருக்கும் நீட் தேர்வு எழுத தமிழகத்திலேயே மையம் ஒதுக்கப்படும்’’ என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியுள்ளாரே?

இதை முதலிலேயே செய்திருந்தால், சர்ச்சைகளைத் தவிர்த்திருக்கலாம். அவர் சொல்லியிருக்கும் இன்னொரு விஷயம் கவனிக்கத்தக்கது. ‘நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் தவறுகள் நடந்தது எனக்குத் தெரியாது’ என்று சொல்லியிருக்கிறார். இதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது. இதுதொடர்பாக வழக்குகூட இருக்கிறதே! ‘தமிழக அரசு நல்ல மொழி பெயர்ப்பாளர்களைத் தர வேண்டும்’ எனவும் கேட்டிருக்கிறார் ஜாவடேகர். அப்படியானால், நல்ல மொழிபெயர்ப்பாளர் இல்லாமலேதான் இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு நடந்து கொண்டிருக்கிறதா? தமிழ்க் கேள்வித்தாளில் இருந்த குழப்பங்களுக்குத் தமிழக அரசுதான் காரணமா?

அ.சண்முகசுந்தரம், சென்னை.

கொடூரமான கொலைக் குற்றவாளிகளுக்குத்தான் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. கடைசியில் கருணை மனு எனும் வழிமுறை மூலமாக அவர்கள் தப்பித்துவிட நினைக்கிறார்கள். இதுபோன்றவர்களுக்குக் கருணை காட்டினால் நாட்டில் குற்றங்கள் பெருகாதா?

கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 1,750 ஆண்டுகளுக்கு முன்பு, பாபிலோனை ஆண்ட அரசர் ஹமுராபி. ‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ என்று தண்டனைகளை வகுத்து நிறைவேற்றியவர். ‘ஒருவர் கொலை செய்தால், அவரைக் கொலை செய்துவிட வேண்டும்’ என்பதுதான் அவருடைய சட்டம். சிற்சில மாற்றங்களுடன் இஸ்லாமிய நாடுகள் சிலவற்றில் தற்போதும் இது நடைமுறையில் இருக்கிறது.

நம் நாட்டின் சட்டங்கள், குற்றவாளிகள் திருந்தி வாழ வாய்ப்பளிக்க வேண்டும் என்கிற வகையில் உருவாக்கப்பட்டிருப்பவை. சிறைகளின் நோக்கமும் அதுதான். அதனால்தான், பல படிகள் தாண்டி, கடைசியில் கருணை மனு என்பதுவரை வாய்ப்புக் கொடுக்கப்படுகிறது. குற்றத்தின் தன்மை, குற்றவாளியின் அப்போதைய மன மற்றும் உடல்நிலை எனப் பல்வேறு அம்சங்களைப் பார்த்துத்தான் கருணை மனு ஏற்கப்படும். இப்படிக் கருணை காட்டுவதாலேயே குற்றங்கள் பெருகிவிடும் என்று சொல்லமுடியாது. ஏனென்றால், கருணை மனு போட்டு வெளியில் வருபவர்கள் மிகமிகச் சொற்பமே. குற்றங்கள் பெருகுவதற்குக் காரணம் கருணை மனுக்கள் அல்ல, கருணையற்ற மனங்களே!

படம்: வி.ஸ்ரீனிவாசுலு

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!