தமிழகத்தின் தற்போதைய முன்னணி செய்தி வாசிப்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன்தான். மைக்கையும் கேமராவையும் பார்த்தாலே ‘அதாவது இப்ப நான் சொல்ல வர்ற தி கருத்து ஆஃப் இண்டியா என்னன்னா’ என ஆரம்பித்துவிடுகிறார். எப்படி ஒரு தனி மனிதரால் இத்தனைத் தகவல்களை தண்ணி லாரி போல அள்ளிக்கொட்ட முடிகிறது? விடையைக் கண்டுபிடிக்க அவரின் ஒருநாள் ஸ்கெட்யூலைச் சுட்டோம். அதில் இருக்கிறது ரகசியம்.

காலை ஆறு மணி: விடிகாலை எழுந்து குளித்து முடித்து சிவப்புப் பொட்டு, திருநீறு வைத்த கையோடு, ‘மோடி புரிவது நல்லாட்சி, மோடிக்கு தமிழக மக்கள் நன்றிக்கடன்பட்டிருக்கிறார்கள், மோடியைப் பார்த்து உலக நாடுகள் பயப்படுகின்றன’ போன்ற மந்திரங்களைத் திரும்பத் திரும்ப உச்சரிக்கிறார்.

காலை பத்து மணி: வீட்டை விட்டு வெளியேறும்முன் கேட்டில் நின்றபடி, ‘திராவிடக் கட்சிகளால் வீழ்ந்தோம் ஒறவே... வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகக் காரணமே திராவிடக் கட்சிகளின் மோசமான ஆட்சிதான்’ என்று பேட்டி தருகிறார்.

மதியம் ஒரு மணி: இதற்குள் தமிழிசை, சுப்ரமணியன் சுவாமி, ஹெச்.ராஜா போன்றவர்கள் ஏதாவது ஃபர்னிச்சரைச் சல்லி சல்லியாக நொறுக்கியிருப்பார்கள். அவற்றுக்கெல்லாம் பொறுமையாக, ‘அது இவரின் கருத்து, இது அவரின் கருத்து’ என்று பஞ்சாயத்து செய்து முடிக்கிறார்.

பிற்பகல் நான்கு மணி: ‘ரஜினி ஒரு தலைசிறந்த நடிகர். அவர் முத்து படத்தில் வரும் டாடி ஜமீன்தார் போல ஊருக்கு நல்லது செய்வார். கமலுக்கு அரசியல் தெரியாது. அவரிடம் ஆட்சியைக் கொடுத்தால் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் வரும் காமேஷ்வரன் போல சொதப்புவார்’ என்று பேட்டி கொடுக்கவேண்டும்.

மாலை ஆறு மணி: ‘வாட் ஸ்டேட் கவர்ன்மென்ட் திஸ் இஸ்? பொறுப்பில்ல, பி.பி இல்ல, சுகர் இல்ல’ என்று எடப்பாடி அரசைத் திட்டுவது போல தடவிக்கொடுப்பார். பதிலுக்கு ஆறு பத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் கவுன்ட்டர் கொடுப்பது போல சரண்டராவார்.

இரவு எட்டு மணி: ‘தமிழ்நாட்டு மக்கள் ரொம்ப மோசம், இந்த மீடியா இருக்கே... வெரி வெரி பேட், அப்புறம் இந்த நியாண்டர்தால் இனம் இருக்கே... கொடுமை பண்றாங்க’ என எல்லாரையும் ஒரு ரவுண்டு திட்டி முடிப்பார்.

இரவு பத்து மணி: மத்திய அமைச்சர் என்பதால் இந்திய மக்களின் நல்வாழ்வுக்காக தன் துறை சார்ந்த பணிகளை மேற்கொள்வார்.

இரவு பத்து மணி 30 விநாடிகள்: மொத்த இந்தியாவையும் தூக்கி நிறுத்திய களைப்பில் மோடி மந்திரத்தை உச்சரித்தபடி தூங்கச் செல்வார்.

ஓவியம்: பிரேம் டாவின்ஸி