Published:Updated:

நிலக்கரி சுரங்க ஊழல்: பா.ஜ. அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது

நிலக்கரி சுரங்க ஊழல்: பா.ஜ. அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது
நிலக்கரி சுரங்க ஊழல்: பா.ஜ. அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது
நிலக்கரி சுரங்க ஊழல்: பா.ஜ. அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது

புதுடெல்லி: நிலக்கரி சுரங்க ஊழல் பிரச்னையை எழுப்பி பா.ஜனதா உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால்,  நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்றும் முடங்கியது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்  2வது அமர்வு தொடங்கியதிலிருந்தே இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டு, அவை ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று கூட்டம் தொடங்கியதும், மாநிலங்களவை மற்றும் மக்களவையில் நிலக்கரி சுரங்க ஊழல் மற்றும் அமெரிக்காவில் உத்தரபிரதேச அமைச்சரிம் விசாரணை

##~~##
செய்யப்பட்ட பிரச்னை எதிரொலித்தது. பா.ஜனதா மற்றும் சமாஜ்வாடி உள்ளிட்ட  எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தங்களது கோரிக்கையை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவை பின்னர் கூடியபோதும் இதே நிலை காணப்பட்டதால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை

இதேப்போன்று மாநிலங்களவையிலும் அமளி ஏற்பட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.