சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவரும் ஜெயலலிதா கைரேகை வழக்கு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் சில நாள்களில் இதன் தீர்ப்பு வந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. இந்த வழக்கின் தீர்ப்பை எடப்பாடி அரசு திக் திக் மனநிலையில் எதிர்பார்க்கிறது. எடப்பாடியிடம் இருக்கும் எம்.எல்.ஏ-க்களில் ஒருவர் குறைந்துவிடுவாரா என்ற கேள்விக்கான விடை இந்த வழக்கில் கிடைக்கும்.

‘திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது’ என்று அறிவிக்கக் கோரி, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் டாக்டர் சரவணன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அவர் முக்கியமாகக் குறிப்பிட்டிருந்த விஷயம், ‘அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, ஏ.கே.போஸின் வேட்பு மனுவில் இணைக்கப்பட்டிருந்த படிவத்தில் கைரேகையைச் சுய நினைவுடன் வைத்தாரா?’ என்பதுதான். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் கைரேகைக்கு சான்றொப்பமிட்டிருந்த டாக்டர் பாலாஜி, தேர்தல் ஆணையத்தின் தமிழக மற்றும் டெல்லி அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ‘ஜெயலலிதாவின் கைரேகையை ஒப்பிட்டுச் சோதனை செய்யவில்லை’ என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஒப்புக்கொண்டார்கள். டாக்டர் பாலாஜியோ முன்னுக்குப் பின் முரணாகத் தகவல்களைக் கூறினார்.

இந்நிலையில், ‘ஜெ. கைரேகையின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய, அவரின் பழைய கைரேகைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்குச் சென்றபோது, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை பதிவேடுகளில் வைக்கப்பட்டுள்ள அவரது கைரேகை மாதிரிகளையும், ஆதார் மற்றும் சொத்து ஆவணங்களில் வைக்கப்பட்டுள்ள கைரேகை மாதிரிகளையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்’ என்று சரவணன் தரப்பு கோரியது. ‘ஜெயலலிதாவின் கைரேகை மாதிரியைக் கொண்டுவந்து தாக்கல் செய்யுமாறு’ ஆதார் ஆணையத்துக்கும், பெங்களூரு சிறைக் கண்காணிப்பாளருக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆதார் ஆணையம், ‘இது தனிநபர் அந்தரங்கத்தில் தலையிடுவது போன்றது’ என்று சொல்லிக் கைரேகை மாதிரியைத் தர மறுக்க, பெங்களூரு சிறை நிர்வாகம் கொண்டுவந்து கொடுத்தது.

இப்படி வழக்கு புயல் வேகத்தில் சென்றுகொண்டிருந்த போதுதான், ‘பெங்களூரு சிறைச்சாலையிலிருந்து ஜெயலலிதாவின் கைரேகை மாதிரியைப் பெற்றுச் சோதனை செய்வது தனிநபர் அந்தரங்கத்தில் தலையிடுவதாகும். அதற்கு அனுமதிக்கக்கூடாது’’ என்று உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று தடை வாங்கினார் ஏ.கே.போஸ். அதனால், கைரேகை மாதிரி இல்லாமலேயே வழக்கு விசாரணையை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

‘‘நான் தேர்தலில் போட்டியிட்டபோதே, ஜெயலலிதாவின் கைரேகையில் சந்தேகமடைந்து தேர்தல் அலுவலரிடமும், மதுரை கலெக்டரிடமும், தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்தேன். அவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை. தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின் வழக்கு தாக்கல் செய்தேன். பிறகுதான், ஜெ. மரணம் பற்றிய பல விஷயங்கள் வெளியில் வரத் தொடங்கின. அதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையமும், நான் வைத்த சந்தேகங்களையே அதன் விசாரணையில் கேட்டது. டாக்டர் பாலாஜி அங்கும், ஜெயலலிதாவிடம் கைரேகை பெற்றது தொடர்பாக மாற்றி மாற்றி சாட்சியங்கள் அளித்துள்ளார். அந்த விஷயங்களையெல்லாம் இந்த வழக்கிலும் மீண்டும் எழுப்ப உள்ளோம். ஜூன் 29-ம் தேதி இவ்வழக்கின் இறுதி விசாரணை தொடங்குகிறது. விரைவில் தீர்ப்பு அறிவிக்கப்படலாம். ஒருவகையில் என் வழக்கு ஜெ. மரணத்திலுள்ள மர்மங்களைப் பொதுமக்கள் தெரிந்துகொள்ள ஒரு காரணமாக அமைந்தது’’ என்றார் டாக்டர் சரவணன்.

கைரேகை வழக்கு வடிவத்தில் எடப்பாடி அரசுக்கு இன்னொரு கண்டம் காத்திருக்கிறது.

- செ.சல்மான்