Published:Updated:

தாதா மகனுக்கு தலைவர் பதவியா? - மாணவர் காங்கிரஸ் மல்லுக்கட்டு

தாதா மகனுக்கு தலைவர் பதவியா? - மாணவர் காங்கிரஸ் மல்லுக்கட்டு
பிரீமியம் ஸ்டோரி
News
தாதா மகனுக்கு தலைவர் பதவியா? - மாணவர் காங்கிரஸ் மல்லுக்கட்டு

தாதா மகனுக்கு தலைவர் பதவியா? - மாணவர் காங்கிரஸ் மல்லுக்கட்டு

மிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் ஜூன் 23-ம் தேதி, அசுவத்தாமன் என்பவர் மாணவரணி மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றார். இவர், பிரபல தாதா வியாசர்பாடி நாகேந்திரன் மகன். சமீபத்தில் சென்னை புழல் சிறையில் பாக்ஸர் முரளி கொல்லப்பட்ட வழக்கில் இணைத்துப் பேசப்பட்டவர் நாகேந்திரன். காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களான ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரிடம் வாழ்த்துகளைப் பெற்ற மகிழ்ச்சியில் இருந்த அசுவத்தாமனிடம் பேசினோம்.

தாதா மகனுக்கு தலைவர் பதவியா? - மாணவர் காங்கிரஸ் மல்லுக்கட்டு

“பிரபல தாதாவின் மகன் என்ற இமேஜ் உங்களுக்கு ப்ளஸ் ஆக இருக்கிறதா, மைனஸ் ஆக இருக்கிறதா?”

“அப்பாவின் அனைத்து வழக்குகளும் 20 ஆண்டுகளுக்கு முன்பே முடிவுக்கு வந்து விட்டாலும், அவர்மீதான தாதா இமேஜ் போகவில்லை. 19 ஆண்டுகளாகச் சிறையில்தான் இருக்கிறார். அதுபோக கல்லீரல் பாதிக்கப்பட்டு இப்போது தொடர் மருத்துவச் சிகிச்சை பெற்று வருகிறார். ‘தாதாவின் மகனும், இன்னொரு தாதாவாக இருக்க வேண்டுமா’ என்ற கேள்வியே என்னைக் கல்வியில் முழுமையாக ஈடுபாடு கொள்ளவைத்தது. மனித உரிமைகள் குறித்து முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறேன். கர்நாடகாவில் உள்ள தேசியச் சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றிருக்கிறேன். இப்போது பி.எட் படித்துக் கொண்டிருக்கிறேன். கல்வியை நோக்கி முழுமையாக நான் திரும்பியதைத்தான் ப்ளஸ் ஆகக் கருதுகிறேன். மைனஸ் என்றால், நான் சாதாரணமாகக் கோபப்பட்டால்கூட அப்பாவின் பெயரோடு அதைத் தொடர்புபடுத்திப் பார்க்கிறார்கள். அதை என் பலவீனமாக நினைக்கிறேன்.”

“மாணவர் காங்கிரஸ் தேர்தலில் பதிவான வாக்குகள் முழுமையாக எண்ணப்படுவதற்குள் நீங்கள் வெற்றிபெற்றுவிட்டதாக அறிவித்து விட்டார்கள் என்று சொல்லப் படுகிறதே?”

“தேர்தல் முறைப்படி நடந்தது. பலர் போட்டியிட்டனர். இதே சத்தியமூர்த்தி பவனில்தான் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒவ்வொரு சுற்றின்போதும், எண்ணிக்கையை வெளிப்படையாக அறிவித்தார்கள். விமர்சனங்களை எப்போதுமே தவிர்க்க முடியாது.”

“சிறையில் நடந்த பாக்ஸர் முரளி கொலையில் உங்கள் அப்பாவைத் தொடர்புபடுத்திச் செய்திகள் வந்ததைக் கவனித்தீர்களா?”

“பாக்ஸர் முரளிக்கு 30 வயதுதான். 19 ஆண்டுகளாக அப்பா சிறையில் இருக்கிறார். அப்பா சிறைக்குப் போகும்போது 11 வயது சிறுவன் இந்த முரளி. எப்படி இருவருக்கும் மோதல் வரும்? இப்படிப்பட்ட முரண்பட்ட செய்திகள், வதந்திகள் குறித்து நாங்கள் வேதனைப் படுவதைத் தவிர வேறு வழியில்லை. இன்று நான் பதவியேற்கும்போது, காலை முதலே ‘தாதா மகனுக்கு காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவி’ என்று வாட்ஸ்அப் மூலம் யாரோ தகவல்களை ஷேர் செய்துகொண்டிருக்கிறார்கள். அதில் அப்படியொரு மகிழ்ச்சி அவர்களுக்கு.”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தாதா மகனுக்கு தலைவர் பதவியா? - மாணவர் காங்கிரஸ் மல்லுக்கட்டு

“ஒரு மகன் என்ற முறையில் நாகேந்திரன் குறித்த உங்கள் பார்வை என்ன?”

“எங்கள்மீது அப்பா மிகுந்த பாசம் வைத்திருக்கிறார். ஆனால், அப்பாவின் நெருக்கமும் அரவணைப்பும் இல்லாமலே வளர்ந்தவன் நான். லயோலா கல்லூரியில் படித்தேன், என் பெயர்கூட யாருக்கும் சரியாகத் தெரியாது. படிப்புக்குப் பணம் தேவைப்படும்போதுமட்டும் அப்பாவின் வழக்கறிஞருக்குப் போன் செய்வேன். இவ்வளவுதான் எங்களுக்குள் இருக்கும் உறவு. என்னை மாணவர் காங்கிரஸ் தொண்டனாக மட்டும் பார்த்தால் போதும். கிடைத்திருக்கும் தலைவர் என்ற பொறுப்பைப் பயன்படுத்தி, மாணவர்களைக் கட்சிக்குள் கொண்டுவருவதே இப்போதைக்கு என் லட்சியம். விளிம்புநிலை மக்களுக்குப் பயன்படும் விதமாக மிகச்சிறந்த கல்வி நிறுவனத்தை உருவாக்குவது என் எதிர்கால ஆசை. பி.எட் படிப்பதும் அதற்கான முதல் அடிதான்.”

- ந.பா.சேதுராமன்
படங்கள்: வீ.ஸ்ரீனிவாசுலு