Published:Updated:

சமூக கூட்டணி அமைப்போம்- அன்புமணி

சமூக கூட்டணி அமைப்போம்- அன்புமணி
சமூக கூட்டணி அமைப்போம்- அன்புமணி
சமூக கூட்டணி அமைப்போம்- அன்புமணி

சென்னை: "பா.ம.க. தலைமையில் சமூக கூட்டணி அமைக்கப்படும்" என்று அன்புமணி  ராமதாஸ் கூறினார்.

பா.ம.க. சார்பில் மாமல்லபுரத்தில் நேற்றிரவு நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ், 1989ஆம் ஆண்டு உருவான பா.ம.க, இத்தனை ஆண்டுகளாக இட ஒதுக்கீட்டுக்காக, ஒரு கையெழுத்துக்காக பல முதல்வர்களிடம் காத்திருந்தோம். 2016ல் மலரும் பா.ம.க. ஆட்சிக்கு பிறகு யாருக்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை.

திராவிட கட்சிகள் இலவசத்தை காட்டி மக்களை ஏமாற்றி வருகின்றன. சாராயம், இலவசம், சினிமா இவைகள்தான் திராவிட கட்சிகள் செய்த சாதனை. பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மது விலக்காகத்தான் இருக்கும்.

##~~##
தேசிய கட்சிகளுடனோ, திராவிட கட்சிகளுடனோ இனி பா.ம.க. கூட்டணி வைத்துக் கொள்ளாது. பா.ம.க. தலைமையில் சமூக கூட்டணி அமைக்கப்படும். எங்களைப் போல் அனைத்து கட்சிகளுக்கும் தேர்தலில் தனித்து போட்டியிடும் தைரியம் உள்ளதா?" என்று அன்புமணி ராமதாஸ் பேசினார்.