Published:Updated:

கோவை பெண்கள் 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி!

கோவை பெண்கள் 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி!
கோவை பெண்கள் 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி!

சென்னை: கோவையில் தீ விபத்தில் பலியான நான்கு பெண்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிவாரண உதவி அளித்து முதல்வர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்.

##~~##
இது தொடர்பாக அவர் இன்று வெ ளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் அவினாசி சாலை,  லட்சுமி மில்ஸ் சந்திப்பு அருகில் இயங்கி வரும் தனியார் வணிக வளாகத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில், கீர்த்தனா, விஜயலட்சுமி, மார்கரெட் மேரி, ஸ்ரீலட்சுமி ஆகியோர் தீயில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.
இந்தத் தீ விபத்தில் மரணமடைந்த கீர்த்தனா, விஜயலட்சுமி, மார்கரெட் மேரி மற்றும் ஸ்ரீலெட்சுமி ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தீ விபத்தில்,  அப்போது கட்டடத்திலிருந்த 5 நபர்களும்,  கோயம்புத்தூர் (கணபதி) தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்தின் நிலைய அலுவலர் எம்.ராமு,  முன்னணித் தீயணைப்போர் எம்.ரகுநாதன், தீயணைப்போர் முருகன் ஆகியோர்  காயமடைந்துள்ளனர் என்பதை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.
காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சைப் பெற்று வரும் இவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டுள்ளேன்.   இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த  தீ விபத்தில் உயிரிழந்த கீர்த்தனா, விஜயலட்சுமி, மார்கரெட் மேரி, ஸ்ரீலெட்சுமி ஆகியோரின்  குடும்பங்களுக்கு  தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 10,000 ரூபாயும்  முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.