கி.தா.துரைசாமி, மேட்டுப்பாளையம்.

ராகுல் காந்தி ஏற்பாடு செய்த இஃப்தார் விருந்தை, எதிர்க் கட்சித் தலைவர்கள் புறக்கணித்துள்ளது பற்றி?

வடை போச்சே!

உமரி பொ.கணேசன், மும்பை.

எந்தத் திட்டத்தையும் மக்கள் கருத்தைக் கேட்டே செயல்படுத்த வேண்டுமென்றால், அது சாத்தியமா?

அயர்லாந்து நாட்டில் கருக்கலைப்பு என்பது தடைசெய்யப்பட்ட ஒன்றாக இருந்தது. சமீபகாலமாக, இந்தத் தடைக்கு மக்களிடமிருந்து, குறிப்பாகப் பெண்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், தடை நீடிக்க வேண்டுமென்று அடிப்படைவாத மதகுருமார்கள் பிடிவாதமாக இருந்தார்கள். உடனே, மக்களிடம் இதுதொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவில், கருக்கலைப்புக்கு எதிரான தடை நீக்கப்பட்டுள்ளது. இது அந்நாட்டுப் பெண்களுக்குப் பெரும் நிம்மதியைத் தந்துள்ளது. உலக அளவில் இப்படி எத்தனையோ உதாரணங்களைக் கூறமுடியும்.

அரசாங்கத்தையே மக்கள் கருத்தின் அடிப்படையில் தானே அமைக்கிறோம். அப்படியிருக்க, முக்கியமான திட்டங்களையாவது மக்களின் கருத்தறிந்து நிறைவேற்ற முடியாதா என்ன? மனமிருந்தால் மார்க்கமுண்டு.

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

‘தமிழகத்தில் யாருடனும் கூட்டணி அமைக்க பி.ஜே.பி ஏங்கவில்லை’ என பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகிறாரே?

அவர் சரியாகத்தான் சொல்லியிருப்பார். ரஜினி, கமல் என்று நடிகர்களை இழுத்துப்போடும் வேலையை பி.ஜே.பி-யில் ஒரு டீம் செய்துகொண்டிருக்கிறது. தலித் கட்சிகளுக்கு இடையே மோதலை உருவாக்கி, அந்தக் கட்சிகளையும் வளைப்பதில் பாதிக் கிணறு தாண்டியாகிவிட்டது; மந்திரிப் பதவி நிச்சயம் என்று சொன்னால், பா.ம.க ஓடோடி வந்து ஒட்டிக்கொள்ளத் தயாராகவே இருக்கிறது. அப்படியிருக்க பி.ஜே.பி ஏன் ஏங்க வேண்டும்!

என்.காளிதாஸ், சிதம்பரம்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிமீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே?

நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அமைச்சர் பதவியில் இருக்கும் ஒருவர்மீதே இத்தகைய உத்தரவுகளைப் பிறப்பிப்பது, நீதித்துறையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய விஷயம். அதேசமயம், நீதிமன்றங்களில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டதாலேயே, ஒருவர் மீதான குற்றச்சாட்டு நூற்றுக்கு நூறு உண்மையாக இருக்க வேண்டும் என்பதில்லை. அதேபோல, நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாலேயே ஒருவர்மீதான குற்றச்சாட்டு நூற்றுக்கு நூறு பொய்யாக இருக்க வேண்டும் என்பதும் இல்லை. வாதப்பிரதிவாதங்கள், சந்தர்ப்ப சாட்சியங்கள் இவற்றின் அடிப்படையில்தான் நீதி வழங்கப்படுகிறது. பல சமயங்களில் இதெல்லாம் சரியாக அமையாத காரணத் தாலும், அப்படியே அமைந்து விட்டாலும் வழக்கறிஞர்களின் பலமான வாதத் திறமையாலும் உண்மைக் குற்ற வாளிகள் தப்பிப்பதை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். அவர்களில் பலரும் நம் கண்முன்னே நடமாடிக் கொண்டுதானே இருக்கிறார்கள்.

அ.ச.நாராயணன், பாளையங் கோட்டை.

‘தமிழகத்தில் மக்களாட்சி நடக்கவில்லை. எம்.எல்.ஏ-க்களுக்காகவே ஆட்சி நடக்கிறது’ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டுகிறாரே?

வீட்டுக்கு வீடு வாசற்படி.

அவருடைய கட்சி ஆட்சி நடத்தும் மாநிலங்களில் மட்டும் என்ன வாழ்கிறதாம். சமீபத்தில் கர்நாடகத் தேர்தல் முடிந்ததும், எம்.எல்.ஏ-க்களை அழைத்துக்கொண்டு ஊர் ஊராக ஓடினார்களே, அதற்குப் பெயர் என்னவாம். அந்த மாநில காங்கிரஸின் அனைத்து எம்.எல்.ஏ-க்களையும் சுழற்சி முறையில் அமைச்சாராக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்து வைத்திருப்பதை யெல்லாம் வசதியாக மறந்துவிட்டார் போல.

ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி.

‘தமிழகத்தில் ஓராண்டாக நடக்கும் கொடுமை, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்கூட இருந்ததில்லை’ என்கிறாரே இயக்குநர் பாரதிராஜா?

இவர் போன்றவர்கள் எல்லாம் கடந்த ஓராண்டாகத்தான் தூக்கம் கலைத்திருக்கிறார்கள் போல.

‘ஊரான் ஊரான் தோட்டத்துல
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா...
காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி
கடுதாசி போட்டானாம் வெள்ளக்காரன்’

-இதுபோன்ற பாடல்கள் அந்நியர் ஆட்சிக்காலத்தில் இங்கே ஏகமாக ஒலித்தன. இன்றைக்கும்கூட ஒலிக்கும் நிலைதான் நீடிக்கிறது. அன்று, ‘வெள்ளையர் ஆட்சி, இன்று கொள்ளையர் ஆட்சி’ என்று இவர்களின் சினிமாக்களே பலகாலமாகப் பேசிக்கொண்டுதான் இருக்கின்றன. அப்படியிருக்க, கடந்த ஓராண்டு மட்டும்தான் மோசம் என்பது போலப் பேசுவது, வேடிக்கைதான்.

அ.ச.நாராயணன், பாளையங்கோட்டை.

ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளோம் என்ற காரணத்தினால், தனி நபர்கள் தமது கொள்கைகளைத் திணித்து மக்களைச் சிரமப்படுத்திவிடுகிறார்கள். இதுதான் ஜனநாயகமா?

ம்ஹூம்... இது பணநாயகம். தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், கூடவே இருக்கும் அடிப்பொடிகளுக்கும் சொத்து சேர்ப்பதற்காக மட்டுமே நாட்டைப் பயன்படுத்தும் இதுபோன்றவர்களால்தான், நாடு இன்றைக்கு கேவலமானதொரு நிலையில் வந்து நிற்கிறது.

ஜெயலலிதாவின் 1991-96 ஆண்டுகால ஆட்சியில், ஒரேயொரு குடும்பத்துக்காக நினைத்தபடியெல்லாம் மக்களை இம்சித்தார். நீதிபதிகளும்கூட அவரது அதிரடிகளிலிருந்து தப்ப முடியவில்லை. கொடைக்கானல், ப்ளசன்ட் ஸ்டே ஹோட்டலுக்கு விதிகளை மீறி ஜெயலலிதா அரசு அனுமதி கொடுத்தது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த சீனிவாசன் மிகவும் நேர்மையான விசாரணையை மேற்கொண்டார். அந்தக் காலகட்டத்தில், நாட்டில் நடந்த அநியாயங்களைப் பார்த்து வெதும்பிப்போன நீதிபதி, ‘நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன், நாள்தொறும் நாடு கெடும்’

என்ற திருக்குறளை எடுத்துக் கையாண்டார். தன் நாட்டில் நிகழும் தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கேற்ப முறைமையைச் செய்யாத அரசனால், நாள்தோறும் நாடு கெடும் என்பதுதான் பொருள். இதைச் சொன்னதற்காக ஆட்சியாளர்களால் கடுமையாக அச்சுறுத்தப்பட்டார் நீதிபதி. அவரது வீட்டுக்குத் தண்ணீர், மின்சாரம் எல்லாம் நிறுத்தப்பட்டது. இதே வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தபோதுதான், தமிழக வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் பயணித்த பேருந்து, தர்மபுரி அருகே தீ வைத்து எரிக்கப்பட்டது. கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய மூன்று கண்மணிகள் எரிந்து சாம்பலானார்கள். ஆனாலும், இவர்களை எரித்துக் கொன்ற கழகக் கண்மணிகளைக் காப்பாற்றும் வேலையைத்தான் கடைசிவரை செய்துவந்தார் ஜெயலலிதா. இது நேற்றைய உதாரணம்... இன்று வாழும் உதாரணங்களும்கூட இருக்கத்தான் செய்கின்றன. இதற்கு எந்தக் கட்சியின் ஆட்சியும் விதிவிலக்கல்ல என்பதுதான் நம் சாபக்கேடு.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!