ஜெயலலிதா இருந்தவரைச் சட்டசபைக்கு உள்ளேயும் வெளியேயும் வாய்மூடி மெளனிகளாக இருந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் அமைச்சர்களும், எதிர்க் கட்சியினருக்கு இணையாக வரிந்துகட்டிக்கொண்டு களத்தில் நிற்கிறார்கள். இதனால், கலாட்டாக்கள், கமெடிகள் எனக் கலகலப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது சட்டமன்றக் கூட்டத்தொடர்.

பலாப்பழம் பார்சல்!

சட்டசபையில் சில நாள்களுக்கு முன்பு தி.மு.க உறுப்பினர் ராஜேந்திரன், “எங்கள் பகுதியில் பலா மற்றும் முந்திரி அதிக அளவில் உற்பத்தியாகின்றன. அதற்கு ஏற்றவாறு அந்தப் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். அதற்கு, ஊரகத் தொழில் துறை அமைச்சர் பென்ஜமின், “உங்கள் பகுதியில் கிடைக்கும் பலா, முந்திரி உண்மையிலேயே சுவையுடையவைதான். அதனால், உறுப்பினரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்” என்று பதில் அளித்தார். அப்போது தி.மு.க உறுப்பினர் துரைமுருகன் எழுந்து, “நீராபானம் குறித்து அவையில் கேள்வி எழுந்தபோது, அனைத்து உறுப்பினர்களுக்கும் நீராபானம் வழங்கினார் பொள்ளாச்சி ஜெயராமன். அதேபோல், அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரு பலாப்பழம் வழங்கினால் என்ன?” என்று கேட்டு அவையில் சிரிப்பலையை உண்டாக்கினார். ‘‘துரைமுருகன் பழம் சாப்பிட்டத் தயாரென்றால், கொடுப்பதற்கு நாங்கள் தயார்’’ என்று அமைச்சர் பென்ஜமின் பதில் அளித்தார். இந்த விவாதம் நடந்து 10 நாள்களைக் கடந்த நிலையில், அவையில் கொடுத்த வாக்குறுதியை பென்ஜமின் நிறைவேற்றி விட்டார். ஜூன் 26-ம் தேதி நடந்த காவல்துறை மானியக்கோரிக்கை நாளன்று, அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் எம்.எல்.ஏ-க்கள் விடுதியில் உள்ள அவர்களின் அறைகளுக்குப் பலாப்பழங்களை அனுப்பினார் அமைச்சர் பென்ஜமின்.

மிட்நைட் மாசலா!

திருவையாற்றில் இசைக் கல்லுாரி அமைப்பது குறித்த விவாதித்தின்போது பேசிய தி.மு.க உறுப்பினர் துரைமுருகன், “நாட்டுப்புறப் பாடலுக்கு மக்களிடம் மவுசு கூடிவிட்டது. இப்போதுகூட விஜய் டி.வி-யில் இரவு நேரத்தில் நாட்டுப்புறப்பாடல்கள் ஒளிப்பரப்பாகின்றன. அவற்றைப் பார்த்துவிட்டுத்தான், நான் தூங்கப் போகிறேன். நாட்டுப்புறப் பாடல்களை வளர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். உடனே அமைச்சர் ஜெயக்குமார் எழுந்து, “எதிர்க் கட்சி துணைத்தலைவர் இரவில் பாடல் மட்டும் கேட்கிறாரா? அல்லது மிட்நைட் மசாலா நடனமும் பார்க்கிறாரா?” என்று கேட்டதும், அவையே சிரிப்பலையில் அதிர்ந்தது. அதற்கு, “அவர் பண்ணுவதை எல்லாம் நான் பண்ணமாட்டேன்” என்று துரைமுருகன் பதிலளிக்க, தி.மு.க-வினர் உற்சாகத்தில் மேஜைகளைத் தட்டினர்.

சாட்சிக்கு இழுத்த ஜெயராமன்!

காவல்துறை மானியக்கோரிக்கையின் போது பேசிய தி.மு.க உறுப்பினர் உதயசூரியன், “அ.தி.மு.க ஆட்சியில் அதிக அளவில் பொய்வழக்குகள் போடப்படுகின்றன” என்றார். அதன்பிறகுப் பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், “உங்கள் ஆட்சியில் காவல்துறையைக் கண்டித்துப் போாரட்டம் நடத்திய என்மீது பொய்வழக்குப் போடப்பட்டது. மதுரையில் குழுந்தைவேலு வீட்டில் வெடிகுண்டு வீசியதாக என்மீதும், இப்போது உங்களிடம் உள்ள அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் சேகர்பாபுமீதும் பொய்வழக்குகள் போடப்பட்டன. அவர்களிடமே நீங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்” என்றதும், தி.மு.க-வினர் அப்செட்டாகிவிட்டார்கள். உடனே சேகர்பாபு எழுந்து, “அது பொய்வழக்கு என்று தெரிந்து அப்போதே வாபஸ் வாங்கப்பட்டது” என்றார். அதற்கு பொள்ளாச்சி ஜெயராமன், “அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகுதான், அந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன” என்று பதிலடி கொடுத்தார்.

தினகரன் அவுட்... கருணாஸ் இன்!

சட்டசபைக் கூட்டத்தொடர் தொடங்கிய முதல் வாரத்தில், தொடர்ச்சியாக அவைக்கு வந்துகொண்டிருந்த சுயேட்சை எம்.எல்.ஏ-வான டி.டி.வி.தினகரன், மறுவாரம் முதல் சட்டசபைக்கு வரவில்லை. அதேபோல், தி.மு.க-வின் போட்டிச் சட்டமன்றக் கூட்டத்தில் பங்கேற்ற கருணாஸ், அதன் பிறகு அவைக்கு வராமல் இருந்தார். செய்தித்துறை மானியக்கோரிக்கை அன்று அவைக்கு வந்த கருணாஸைத் தனியாக அழைத்து, அமைச்சர் தங்கமணி ஏதோ அட்வைஸ் கொடுத்தார்.

ஏர்கூலர் டு காஃபிமேக்கர்!

மின்துறை மானியக் கோரிக்கையின்போது, ஜூஸ் மேக்கரும், ஊரகத்துறையின் மானியக் கோரிக்கையின்போது காஃபி மேக்கரும் எம்.எல்.ஏ-க்களுக்கு வழங்கப்பட்டன. சுகாதாரத் துறையின் சார்பில் வழக்கம்போல, மருந்துப்பொருள்கள் வழங்கப்பட்டன. உயர்கல்வித் துறையின் மானியக் கோரிக்கையின் போது, அனைவருக்கும் டேபிள் ஏர்கூலர் வழங்கி உறுப்பினர்களைக் குளிரவைத்தார் அமைச்சர் அன்பழகன்.

புத்தகங்களுக்குப் பதிலாக பென்டிரைவ்!

செய்தித்துறை மானியக் கோரிக்கையின்போது, தி.மு.க எம்.எல்.ஏ-வான ராமச்சந்திரன், எம்.எல்.ஏ-க்களுக்கு வழங்கப்படும் புத்தகங்கள் கனமாக இருப்பதால், எங்களால் துாக்கிச்செல்ல முடியவில்லை. மாற்று ஏற்பாடு பண்ணுங்கள்” என்றார். அதற்குச் சபாநாயகர், “மாற்று ஏற்பாடுகள் நடக்கின்றன” என்று பதில் அளித்தார். சட்டசபை ஊழியர்களிடம் விசாரித்தபோது, “சட்டசபை ஆவணங்களை எம்.எல்.ஏ-க்களுக்கு பென்டிரைவ் மூலம் வழங்கும் யோசனை பரிசீலனையில் உள்ளது” என்றனர்.

- அ.சையது அபுதாஹிர்