ஆளும் கட்சியிலுள்ள சிலரின் விளையாட்டால் மூன்று வருடங்களாக இழுத்தடிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை, ஒருவழியாக மதுரை தோப்பூரில் தற்போது அமையப்போகிறது. இதற்கான நிலங்களை மத்திய அரசிடம் ஒப்படைப்பதற்கான வேலைகள் நடந்துவரும் நிலையில், மதுரைக்கு எய்ம்ஸ் வருவதற்குத் தாங்கள்தான் காரணம் எனப் பல்வேறு கட்சியினரும் அக்கப்போர் அரசியலில் ஈடுபட்டுள்ளனர்.

எய்ம்ஸ் வருவதற்குத் தங்கள் கட்சிதான் காரணம் என்று சொல்லும் பி.ஜே.பி-யினரும், இதற்கு பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், நிர்மலா சீதாராமன் ஆகியோர்தான் காரணம் என்று கூறி வருகிறார்கள். பி.ஜே.பி-யைச் சேர்ந்த இன்னொரு தரப்பு, ‘செங்கிப்பட்டிக்கு எய்ம்ஸ் வர வேண்டும் என்று இல.கணேசன் விரும்பினார்’ என்று சொல்கிறது. பி.ஜே.பி-யின் மாநிலச் செயலாளரான பேராசிரியர் சீனிவாசனின் பங்களிப்பையும் பி.ஜே.பி-யினர் குறிப்பிடுகிறார்கள். சேம்பர் ஆஃப் காமர்ஸின் நிர்வாகியான ரத்தினவேலு தரப்பினர் தாங்கள்தான் இதற்குக் காரணம் என்கிறார்கள். சசிகலாவுக்காகச் செங்கிப்பட்டிக்கு எய்ம்ஸ் போகிறது என்ற தகவல் வந்தபோது வாயைத் திறக்காத தமிழக அமைச்சர்களும் எம்.பி-க்களும், மதுரைக்கு எய்ம்ஸ் வரத் தாங்கள்தான் காரணம் என்று பெருமைப்பட்டுக்கொள்வதை விநோதமாகப் பார்க்கிறார்கள் மதுரை மக்கள்.

மதுரைக்கு எய்ம்ஸ் வருகிறது என்றதும், அன்று இரவே அதுபற்றி மதுரை பொதுக்கூட்டத்தில் அறிவித்துவிட்டார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். மறுநாளே அவர் தோப்பூருக்கு பார்வையிடச் சென்றார். அந்த நேரத்தில் தோப்பூருக்கு வந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “மதுரைக்கு எய்ம்ஸ் கொண்டுவரத் தீவிரமாக முயற்சி செய்தேன்’’ என்றார் பெருமையுடன். எய்ம்ஸை மதுரைக்குக் கொண்டுவருவதற்காகப் பாடுபட்டதற்காக ஆர்.பி.உதயகுமாருக்குத் தினமும் நன்றி சொல்ல, பல்வேறு அமைப்பினரும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளனராம். ‘‘எய்ம்ஸ் வருவதற்கு என் பங்களிப்பும் காரணம். மத்திய அமைச்சர் நட்டாவைப் பலமுறை சந்தித்து இதைச் சாதித்தேன்’’ என்று ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார் மதுரை எம்.பி-யான கோபாலகிருஷ்ணன். மதுரை புறநகர் மாவட்ட தி.மு.க செயலாளரும் கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான பி.மூர்த்தி, ‘‘தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான், தோப்பூரில் எய்ம்ஸ் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 200 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. எய்ம்ஸ்-க்காக எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வேன் என்று நானும் அறிவித்தேன். எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டதற்குத் தனிப்பட்ட யாரும் உரிமை கொண்டாட முடியாது. இது அனைவரின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி’’ என்றார்.

தற்போது, மதுரையில் எய்ம்ஸ் அமைவதற்கான அறிவிப்பை மத்திய பி.ஜே.பி அரசு செய்துள்ளது. முதன்முதலாக இந்தக் கோரிக்கையை 20 வருடங்களுக்கு முன்பே எழுப்பியவர், மதுரை தொகுதி எம்.பி-யாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மறைந்த பி.மோகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி நம்மிடம் பேசிய சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளரான சு.வெங்கடேசன், “மதுரையில் எய்ம்ஸ் அமையப்போகிறது என்பதில் மிக்க மகிழ்ச்சி. மதுரை மக்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இதற்காகப் பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கோரிக்கை வைத்தன. இவை அனைத்தும் சமீபகாலத்தில் நிகழ்ந்தவை. ஆனால், 1999 முதல் 2004 வரை மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி-யாகப் பணியாற்றிய தோழர் பி.மோகன்தான், எய்ம்ஸ் மருத்துவமனை இங்கு வர வேண்டுமென்று, அந்தக் கோரிக்கைக்கு விதை போட்டார். பல பொதுக்கூட்டங்களில் இது பற்றி அவர் பேசியுள்ளார். அவர், எம்.பி-யாக இருந்த காலத்தில் மதுரை மக்களுக்குப் பயன்படும் என்று மூன்று முக்கியக் கோரிக்கைகளைத் தொடர்ந்து முன் வைத்தார். ஒன்று எய்ம்ஸ் மருத்துவமனை, இரண்டாவது இன்னொரு கேந்திரிய வித்யாலயா பள்ளி, மூன்றாவது இரட்டை ரயில் பாதை. அதற்காக, நாடாளுமன்றத்தில் பலமுறை பேசியுள்ளார். எய்ம்ஸ் கோரிக்கைக்காக இங்குள்ள பிரமுகர்களைப் பல தடவை டெல்லிக்கு அவர் அழைத்துச் சென்றார். டெல்லியில் அமைச்சர்களைச் சந்தித்துக் கோரிக்கை வைத்தார். நானும்கூட இதற்காக அவருடன் இரண்டு தடவை சென்றேன். அவரால் உருவான முயற்சிதான், இப்போது நிஜமாகி உள்ளது. இப்போது அறிவிக்கப்பட்டதற்கு யார் வேண்டுமானாலும் காரணமாக இருக்கட்டும். ஆனால், இதற்கு அடித்தளமிட்ட தோழர் பி.மோகனின் பங்களிப்பை மறக்கக் கூடாது. அனைத்து கட்சியினரும், அனைத்து அமைப்பினருக்கும் இது தெரியும்” என்றார்.

பி.மோகன் முன்வைத்த மற்ற இரு கோரிக்கைகளும் விரைவில் நிறைவேறி மதுரை மக்களை மகிழ்விக்கட்டும்.

- செ.சல்மான், படங்கள்: வி.சதீஷ்குமார்