Published:Updated:

மரக்காணம் கலவரம்: பா.ம.க.வினர் 1,112 பேர் மீது வழக்கு

மரக்காணம் கலவரம்: பா.ம.க.வினர் 1,112 பேர் மீது வழக்கு
மரக்காணம் கலவரம்: பா.ம.க.வினர் 1,112 பேர் மீது வழக்கு
மரக்காணம் கலவரம்: பா.ம.க.வினர் 1,112 பேர் மீது வழக்கு

மரக்காணம்: மரக்காணம் கலவரம் தொடர்பாக பா.ம.க.வினர் 1,112 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பா.ம.க. சார்பில் மாமல்லபுரத்தில் நேற்றிரவு நடைபெற்ற சித்திரை பவுணர்மி இளைஞர் பெருவிழாவில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரி வழியாக சென்ற தொண்டர்கள் மரக்காணம் அருகே மோதலில் ஈடுபட்டனர். அரசு பேருந்துகள் மற்றும் டோல் கேட்டுகளை பா.ம.க.வினர் அடித்து உடைத்தனர்.

இதைத் தொடர்ந்து, மோதலில் ஈடுபட்ட பா.ம.க.வினர் 1112 பேர் மீது காவல்துறையினர் 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

300 பேர் மீது எஸ்.சி.- எஸ்.டி பிரிவில் பி.சி.ஆர் சட்டத்தை கொண்டும், 200 பேர் மீது டோல் கேட்டை தாக்கியதாகவும், 300 பேர் மீது பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாகவும், 300 பேர் மீது எஸ்.பி வாகனத்தை தாக்கியதாகவும், 10 பேர் மீது கூனிமேட்டிலுள்ள கடைகளை அடித்து நொறுக்கியதாகவும், 2 பேர் மீது விபத்து ஏற்படுத்தியதாகவும் காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.

##~~##
இன்று காலை சமூக சமத்துவ படை கட்சி நிறுவனர் சிவகாமி மோதலில் தீக்கிரையாக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சம்பத், மரக்காணம் காலனி பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டார். தற்போது ஈ.சி.ஆர் சாலையில் மரக்காணம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே, பாதிக்கப்பட்ட காலனி பகுதி மக்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
நா.இள.அறவாழி