Published:Updated:

காங்கிரசுக்கு நாட்டை காப்பாற்ற சக்தியில்லை: தூத்துக்குடியில் ராமகோபாலன் பேச்சு!

காங்கிரசுக்கு நாட்டை காப்பாற்ற சக்தியில்லை: தூத்துக்குடியில் ராமகோபாலன் பேச்சு!
காங்கிரசுக்கு நாட்டை காப்பாற்ற சக்தியில்லை: தூத்துக்குடியில் ராமகோபாலன் பேச்சு!
காங்கிரசுக்கு நாட்டை காப்பாற்ற சக்தியில்லை: தூத்துக்குடியில் ராமகோபாலன் பேச்சு!

தூத்துக்குடி: ‘காங்கிரசுக்கு நாட்டை காப்பாற்ற சக்தியில்லை’ என தூத்துக்குடியில் இந்து முன்னணி அமைப்பின் தலைவர் ராமகோபாலன் பேசினார்.

இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடந்து வரும் பயிற்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த, ராமகோபாலன் அங்கு பேசியதாவது: ‘‘திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் பகுதியில் போலீசார் அடிக்கடி வாகன சோதனை நடத்துவார்கள். அதனால் கொஞ்சம் தீவிரவாதிகளின் நடவடிக்கை கட்டுப்பட்டிருந்தது. ஆண்களும், பெண்களும் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதற்காக அந்த வாகன சோதனையை போலீசார் நிறுத்தி விட்டனர். இப்போது மேலப்பாளையமே தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டது.

முஸ்லீம்கள் நடத்துகிற போராட்டத்தால் அரசாங்கத்தின் கைகள் முறிந்து விடுகிறது. அத்தனையும் செய்துவிட்டு அப்பாவியான எங்கள் இளைஞர்களை வேண்டுமென்றே பிடிக்கிறார்கள் என்று இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்கள் அப்பாவியா? பாவியா? என்று கோர்ட் முடிவு பண்ணட்டுமே. அதுக்குள் ஏன் இவர்கள் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறார்கள்?

பெங்களூரில் குண்டு வைக்கவும் இங்கிருந்துதான் ஆள் போறாங்க. நுண்ணறிவு போலீசாரின் தகவலை கேட்டாலே அதிர்ச்சியாக இருக்கிறது. எம்.ஆர்.காந்தி கூட இந்த தீவிரவாதிகளால் தாக்கப்பட்டிருக்கிறார். இதுபோன்ற தீவிரவாதத்தை ஒரு குறிப்பிட்ட மதப்பிரச்னையாக பார்க்கக்கூடாது. அரசாங்கம் தீவிரவாதத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

சீன ஆக்கிரமிப்பு விவகாரத்தை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. நம்முடைய அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளுக்கு ராணுவம் மற்றும் ஆயுதம் வழங்குகிறது. நேபாள தீவிரவாதிகள், இடதுசாரி தீவிரவாதிகளுக்கும் ஆயுதம், நிதி உதவி செய்வதோடு அவர்களுக்கு பயிற்சியும் வழங்குகிறது சீனா. நமக்கு எதிராக நமது பக்கத்து நாடுகளை உருவாக்குகிறது.

##~~##
காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தானின் எல்லையில் இருப்பதுபோல் உலக வரைபடத்தை வெளியிட்டு நம்மை சண்டைக்கு இழுக்கிறது. ஆனாலும் நாம் தூக்கத்தைவிட்டு விழிக்கவில்லை. இந்தியாவில் வெளியுறவுக் கொள்கை இருக்கிறதா என்றே தெரியவில்லை. அப்படியிருந்தால் அது பிரயோஜனப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நேரு கூட சீனாவை அடித்து விரட்டுவோம் என்று சொன்னார்.
ஆனால், இப்போது இருக்கிற அரசு, சீனாவோடு பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதுவே நமக்கு பலகீணத்தைத்தான் ஏற்படுத்தும். இது கையாளாகாத தனத்தை காட்டுகிறது. சீனா நமது நாட்டுக்குள் நச்சுக்கழிவுகளை அனுப்பி நம் நாட்டை குப்பை தொட்டியாக்கப் பார்க்கிறது. யார் இதற்கு துணை போகிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடத்த கூடாது. வேறு எதாவது நாட்டில் நடத்தலாம். இலங்கையில் இந்துக்களின் வீடுகள், கோவில்கள் சூறையாடப்பட்டிருக்கிறது. இந்துக்களின் விளைநிலங்கள் பறிக்கப்பட்டு வருகிறது. அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, இருப்பிடம், மருத்துவ வசதிகளை ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் ஏற்படுத்தி கொடுத்து வருகிறார்கள். இலங்கை தமிழர் பிரச்னைக்காக வெறுமனே போராட்டம் நடத்துவதால் பலனில்லை. அதற்கு ஆகும் செலவை அங்குள்ள மக்களுக்காக செலவிடலாம்.
ராமர் பாலத்தை எக்காரணம் கொண்டும் இடிக்க கூடாது. விரைவில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ‘ராம நாம ஜெபயோகம்’ என்கிற அமைப்பு உருவாக்கப்படுகிறது. அதன் மூலம் அங்கு ராமர் கோயில் கட்டப்படும். கேரளாவிலுள்ள மலப்புரத்தில் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. போலீசார் அந்த இடத்தை சோதனையிட்டால் அங்குள்ள இஸ்லாமியர் ‘இங்கே சமய வகுப்பு நடத்துகிறோம்’ என்று சொல்லி போலீசுக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கிறார்கள். இதுபோன்ற தீவிரவாத முயற்சி நடவடிக்கைக்கு அரசு முறையாக நெருக்கடி கொடுக்க வேண்டும். ஆனால் இந்த அரசு அப்படி செய்வதில்லை.
அரசு என்று சொல்வது அதிகாரிகளையும் குறிக்கும். திறமையான அதிகாரிகள் இருந்த போலீஸ் துறையில் மந்தமான அதிகாரிகள் நிறையபேர் இருக்கிறார்கள். அதில் சில அதிகாரிகள் திவிரவாதிகளுக்கு ஆதரவு நிலையில் இருப்பதாக தகவல் வருகிறது. பயங்கரவாதத்தை தடுக்க பாரபட்சமில்லாத நடவடிக்கை வேண்டும். நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஜெயிலிலிருந்து வெளியில் வந்தபோது நாற்பது கிலோ கூடியிருக்கிறார். அந்த அளவிற்கு ஜெயிலில் அவர்களுக்கு வசதி இருக்கிறது.
தப்பு செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் சுட்டு கொல்லப்பட வேண்டும். இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளை இப்போது இருக்கிற காங்கிரஸ் அரசாங்கத்திடம் எதிர்பார்க்க முடியாது. காங்கிரசுக்கு நாட்டை காப்பாற்ற சக்தியில்லை. அதுபோல் தமிழகத்தில் சட்டஒழுங்கு சரியில்லை. சட்டம் இருக்கிறது, ஒழுங்கு இல்லை.
கூடன்குளம் அணுஉலை விவகாரத்தை பார்க்கும் போது தமாஷாக இருக்கிறது. இன்றைக்கு, நாளைக்கு என்று மக்களை ஏமாற்றி வருகிறார்கள். எது எப்படியோ சீக்கிரமா வேலையை முடித்து மக்களுக்கு மின்சாரத்தை கொடுக்க வேண்டும். கோ சாலை மூலம் பசுக்களை பாதுகாப்பதாக அரசு சொல்கிறது. ஆனால் கசாப்புக்காக அடிக்கடி கேரளாவுக்கு கடத்தப்படும் நிகழ்வு நடக்கிறது.
ஓட்டைப்பாணையில் தண்ணீரை ஊற்றுவது போல இருக்கிறது இவர்களின் சட்டம். எல்லாத்தையும் கவனிக்க இந்தியாவின் பிரதமராக நரேந்திரமோடி வரவேண்டும். அவர் திறமையானவர், நேர்மையானவர், மனஉறுதி கொண்டவர். ஆனால் அவரை பிரதமராக வரவிடக்கூடாது என சில வெளிநாடுகள் சதி செய்கிறது’’ என்றார்.

-எஸ்.சரவணப்பெருமாள்
படம்:
ஏ.சிதம்பரம்