Published:Updated:

கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!
பிரீமியம் ஸ்டோரி
News
கம்பேரிஸன் கோவாலு!

கம்பேரிஸன் கோவாலு!

‘கொங்கு நாட்டுத் தங்கம்’, ‘சேலத்துச் சிங்கம்’, ‘இரும்பு தேசத்தின் கரும்பு மனிதர்’, ‘கரிகாலச் சோழன்’, ‘குடிமராமத்து நாயகன்’ - இவையெல்லாம் சினிமா டைட்டிலாக வந்தே ஐம்பதாண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இன்னமும் இப்படிப் பட்டங்கள் கொடுத்தே தங்கள் பதவியைக் காப்பாற்றிக்கொள்கிறார்கள் அ.தி.மு.க-வினர். இதையெல்லாம் பார்க்கும்போது, ‘மன்னன்’ படத்தில் கவுண்டமணி கேட்கும் ‘அதெப்படிப்பா கொஞ்சம்கூட கூச்சமில்லாம சொல்லிப்புட்ட...’ வசனம் ஞாபகத்துக்கு வந்தாலும், நம் பங்குக்கு நாமும் கடமையைச் செய்வோம்.

கம்பேரிஸன் கோவாலு!

சேக்கிழார் எழுதிய ராமாயணம், ஷேக்ஸ்பியர் எழுதிய மகாபாரதம் என அயராத வேலைகளுக்கு இடையிலும் காப்பியங்களைக் கரைத்துக் குடித்திருக்கிறார் நம் முதல்வர். எனவே, அவருக்கு ‘காப்பியங்களைக் குடித்த கோமகன்’ என்ற பட்டத்தை வழங்குகிறோம். அமைச்சர்கள் வழக்கம்போல வாய் ரோலாகி ‘காபி குடித்த கோமகன்’ எனச் சொல்லிவிடும் ஆபத்து இருப்பதால், தொண்டர்கள் யாராவது இந்தப் பட்டத்தைக் கொடுத்தால் நலம்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட், தேனியில் நியூட்ரினோ என மாவட்டம்தோறும் போராட்டங்கள். காரணம், எடப்பாடி அரசின் அபார கொள்கைகள். எனவே, ‘போராட்டங்களை ஊற்றெடுக்க வைக்கும் புளூட்டோனியம்’ என்ற பட்டத்தையும் வழங்குகிறோம். தங்கம், அலுமினியம் என எல்லாவற்றையும் அ.தி.மு.க-வினரே குத்தகைக்கு எடுத்திருப்பதால், எஞ்சியிருப்பது புளூட்டோனியம் மட்டுமே!

‘எடப்பாடி அரசின் ஓராண்டு சாதனைகள்’, ‘எடப்பாடியாரின் எழுச்சிமிகு உரைகள்’, ‘எடப்பாடி பழனிசாமி வாழ்க்கை வரலாறு’ என தனக்குத்தானே பல புத்தகங்கள் அச்சடித்துக்கொள்வதால் ‘புத்தகங்கள் பல கண்ட பூங்குழலோன்’ என்ற பட்டத்தைப் பெருமையோடு வழங்குகிறோம்.

இப்படித் தனக்குத்தானே பட்டங்கள் கொடுத்துக்கொள்வதும், அதைப் பார்த்து... ‘வாவ்! அருமையா இருக்குல்ல’ எனச் சிரித்துக்கொள்வதும் 23-ம் புலிகேசி ஸ்டைல். எனவே இறுதியாக, ‘புலிகேசி வழியில்வந்த புல்லட் பாண்டி’ என்ற ஸ்பெஷல் பட்டத்தையும் வழங்கிக்கொண்டு விடைபெறுகிறோம்.

தினகரன் அணி, திவாகரன் அணி, தீபா அணி, மாதவன் அணி என எத்தனை அணிகள் குடைச்சல் கொடுத்தாலும், சிரித்த முகத்துடன் சமாளிக்கிறார். இத்தனை அணிகள் உருவாகவே இவர்தான் காரணம் என்பது வேறு விஷயம். எனவே, ‘அணிகள் பலகண்ட அக்கினிக் குருவி’ என்ற புதுப்பட்டத்தை பணிவன்புடன் வழங்குகிறோம்.

ஓவியம்: பிரேம் டாவின்ஸி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz